Objective and Business Goals என்றால் என்ன?
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்yuuறும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
நோக்கங்களின்அடிப்படையில் உங்கள் நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு அடைவது? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
இதற்கு முன் உள்ள பல பகுதிகளில் நிறுவனத்தின் இலக்கு என்றால் என்ன? அதனை அடைவதற்கு தொழில்முனைவோர் என்ன செய்ய வேண்டும்? என்பதை விரிவாக பார்த்துள்ளோம். இங்கு சற்று ஆழமாக நோக்கங்கள் வழியில் நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு அடைவது என்பதை பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
நோக்கங்களின் மூலம் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு நான் ஒரு சிறுகதையை இங்கு உதாரணமாகக் கூறி வந்துள்ளேன் அந்தக் கதையுடன் உங்கள் தொழிலையும் ஒப்பிட்டுக் கொண்டே வாருங்கள் அப்போதுதான் நான் சொல்லவரும் கூற்று உங்களுக்கு தெளிவாக புரியும்.
நீங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ( சென்னை to கன்னியாகுமரி)போக தீர்மானித்துள்ள உள்ளீர்கள், அவராக அந்தப் பயணத்தை காரின் மூலம் சென்றடைவதாக திட்டமிட்டு திட்டமிட்டு உள்ளீர்கள்.
இந்த சூழ்நிலையில் இந்த பயணத்தை முடிப்பதற்காக உங்களிடம் உள்ள வளங்களைப் பற்றி நீங்கள் சற்று ஆலோசிக்க வேண்டும்.
01. உங்கள் பயணத்தின் மொத்த தூரம் எவ்வளவு?( நிறுவனத்தின் இலக்கு)
02. இந்த பயணத்தை முடிப்பது முடிப்பதற்கு நான் பயன்படுத்தும் வாகனம் என்ன? (நிறுவனத்தின் விற்பனைப் பொருள்)
03. நான் தேர்ந்தெடுத்துள்ள வாகனத்தின் உச்சபட்ச மற்றும் குறைந்த செலுத்தும் திறன் எவ்வளவு? (பொருட்கள் விற்று தீர்க்க எடுத்துக்கொள்ளும் உச்சபட்ச மற்றும் குறைந்த கால அவகாசம்)
04. வாகனத்தின் எரிபொருள் ( விற்பனை சுழற்சிக்கான பணம்)
05. எந்தெந்த வழியாக உங்கள் பயணம் தொடரும்? (தொழில் இலக்கை அடைய மாதம் மாதம் எத்தனை பொருட்கள வித்து இருக்க வேண்டும்)
06. உங்களைப்போல உங்கள் கூடவே பயணிக்கும் மற்றொரு பயணிகள் எந்த வேகத்தில் செல்கின்றனர்? ( நிறுவன போட்டியாளர்கள்)
07. உங்கள் பயணம் நீங்கள் ஏற்கனவே திட்டத்தை திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது அல்லது நீங்கள் மாற்று வழியை தேர்ந்தெடுக்க வேண்டுமா? (விற்பனை மேலாண்மை)
08. பயணத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த கார் இடையில் பழுதாகி நின்று கொண்டிருக்கிறது என்ன செய்வது? ( விற்பனைப் பொருள்களின் தேக்கநிலை)
உங்களின் பயணத்திற்கு தேவைப்படும் முக்கிய விஷயங்களையும், அதேபோல் உங்கள் தொழிலுக்கு தேவையான முக்கிய விஷயங்களையும், ஒப்பிட்டு கூறியுள்ளேன்.
மேலே கூறியுள்ள பல விஷயங்களில் இங்கு குறிப்பிட்டு ஒரு முக்கிய கூற்றை விவாதிக்க உள்ளேன்.
எந்த ஒரு தனிநபரும் தன் பயணத்தை மேற்கொள்ளும் போது அந்த பயணம் முடியும் வரை உள்ள பணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தன் பயணத்தைத் தொடங்குவார்.
மாறாக இங்கு ஒரு சின்ன டாஸ்க் அது என்னவென்றால் இங்கு உங்க பயணத்துக்கு தேவைப்படும் மொத்த பணத்தையும் எடுத்து செல்லாது உங்கள் பயணத்தில் வரும் முதலிடத்திற்கு செல்வதற்கான பணம் மட்டுமே உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். (சென்னை To திண்டிவனம்)
அந்த குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் மட்டுமே அங்கு உங்களுக்கு மேலும் பயணத்தைத் தொடர்வதற்கு தேவையான பணம் கிடைக்கும் அதை வைத்து அடுத்த இடத்தை நீங்கள் அடைவீர்கள் (திண்டிவனம் to திருச்சி)என்று வைத்துக் கொள்வோம்.
இங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை வைத்து தொடக்கப் புள்ளியிலிருந்து வழியில் வரும் திண்டிவனம் வரை உங்கள் பயணத்தை பயணத்தில் கொடுக்கப்பட்டுள்ள கார் மற்றும் எரிபொருள் மற்றும் வழிசெலவுகள் மற்றும் எந்தவித வேகத்தில் ஓடுகிறீர்கள், என்பதை அடிப்படையாகக் கொண்டே நீங்கள் நீங்கள் முன்பே கணக்கிட்டது போல சரியான நேரத்தில் வந்து சேர் கிறீர்களா? அல்லது குறிப்பிட்ட நேரத்தை தவற விடுகிறீர்களா? அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து விட்டீர்களா? அல்லது வரும் வழியில் வாகனம் பழுதாகி நின்று கொண்டிருக்கிறீர்களா? என்றது என்பது அமையும்?
இதே தாங்க உங்கள் தொழிலையும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு நீங்கள் என்னென்ன சாத்தியங்களை பயன்படுத்துகிறீர்கள்? வாழ்க்கையில் நீங்கள் உங்கள் தொழிலின் இலக்கை அடைவதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கின்றார்கள் என்பதின் அடிப்படையிலேயே உங்கள் தொழில் வளர்ச்சி என்பது அமையும்.
இதைவிட தொழில் மேன்மை பற்றி யாரும் தெளிவாகப் புரியும்படி விளக்கி விடமுடியாது என்பதை நான் அடித்துக் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக