Purchase Return & Sales Return?உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன?
Story 19. Purchase Return & Sales Return? வாழ்க்கையில் நாம என்னதான் சாதிக்கப் போகிறோம் என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன? என்பதைப் பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். ஒரு சிறு கதையுடன் இந்த பதிவை துவங்க இருக...