Introduction Enterpreneurship management. தொழில் முனைவோர் மேலாண்மை.
Story 1.Introduction Enterpreneurship management வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். வாழ்க்கையில் நாம என்னதான் என்ன சாதிக்கப் போகிறோம்.என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு தொழிற்பயிற்சி முதலீடு வங்கி கடன் முதலீட்டாளரின் கடின உழைப்பு மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன் அதேபோன்று ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கு உங்கள் தொழிலை திறம்பட எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவது மிகவும் முக்கியமான ஒன்று. என்னதான் தொழில் திறமை, முதலீடு, வங்கி கடன், இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தங்களை சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ள வங்கிகள் மீதான வட்டி, சந...