How Became a Best Entrepreneur? பிற்காலத்தில் நீங்கள் சிறந்த ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
Story 32.how Became a Best Entrepreneur ?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் பிற்காலத்தில் நீங்கள் சிறந்த ஒரு தொழில்முனைவோராக ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
பணம் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து வாழ்க்கையை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அவர்களுக்குத் தெரிந்த பலவகை தொழில்களை தொடங்கி செய்து வருகிறார்கள்.
அவ்வாறாக முழு முனைப்புடனும் முழு ஆர்வத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் தொழிலை செய்து வரும் சூழ்நிலையிலும் ஒரு சில தொழில் முனைவோர் அவர்களுக்கான வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. அதற்காக பல காரணங்களை இங்கே நாம் கூற முடியும்.
எந்த ஒரு தொழில் ஆர்வமுள்ளதாகவும், ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும், காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும், இருக்கும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
ஒரு தோழிளின் உரிமையாளர், தொழிலாளி இடும் உழைப்பை விட மூன்று மடங்கு அதிக அளவில் தனது உழைப்பை தொழிலின் துவக்க காலத்தில் தரவேண்டும் அப்படிப்பட்ட உழைப்பை இட்டாள் மட்டுமே அவர் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து ஓய்வு எடுக்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட கணிசமான அளவு வரும் வருவாயை தொழிலிலிருந்து மாதம் மாதம் நிலையாக பெற முடியும்.
இவ்வாறாக ஒரு சிறந்த தொழில் முனைவோர் தொடக்க காலத்தில் எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதைப்பற்றி பட்டியலிட்டு விரிவாக இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
அவையாவன,
01. நீங்கள் முதலீடு செய்யும் தொழிலைப் பற்றி அலசி ஆராய்தல்.
02. உங்கள் தொழிலுக்கான முதலீட்டு தொகையை கணக்கீடு செய்தல்.
03. நிறுவனத்தின் இலக்கை தீர்மானித்தல்.
04. பொருட்களின் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலையை தீர்மானித்தல்.
05. மறு முதலீடு செய்வதற்கான தொகையை மாதாமாதம் நிறுவனத்திலிருந்து உருவாக்குதல்.
06. நிறுவனத்தின் சம குறியீட்டு புள்ளியை முறையாக பராமரித்தல்.
07. புதிய வாடிக்கையாளர் ஈர்த்தல் மற்றும் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்தல்.
08. எவ்வாறு தேவையற்ற வங்கிக் கடனை ஒதுக்குவது என்பதைப் பற்றி அறிதல்.
09. நிறுவனத்தின் நிதி நிலையை ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து அறிதல்.
10. நிறுவனத்தில் அதிகம் விற்கக் கூடிய பொருட்கள் எவை நிறுவனத்தின் அதிக லாபம் கூடிய லாபம் தரக்கூடிய பொருட்கள் எவை என கண்டுபிடித்தல்.
இவ்வாறாக பல விஷயங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
நாம் முதலில் பார்க்க இருப்பது.
01. நீங்கள் முதலீடு செய்யும் தொழிலைப் பற்றி அலசி ஆராய்தல்.
தொழில் முனைவோரின் முதலாவது மற்றும் தலைமை பணியாக தான் முதலீடு செய்ய இருக்கும் பொருட்கள் என்ன? அவற்றின் தேவை மக்களுக்கிடையே எந்த அளவு இருக்கிறது? இவ்வாறாக பல விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்வது மிக மிக முக்கியம்.
நீங்கள் எந்த இடத்தில் தொழிலை ஆரம்பிக்க நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் இந்த பொருட்கள் பொருட்களுக்கான தேவை எந்த அளவு இருக்கிறது? அதற்கான போட்டியாளர்கள் எந்தளவுக்கு இருக்கிறார்கள்? மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் பொருளுக்கான தேவை எந்தத் துறையைச் சார்ந்தது? என்பது குறித்து பல ஆய்வுகளை ஆய்வுகளையும் கணக்குகளையும் நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கு அவர்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு இதில் எடுக்கும் ஒரு சரியான முடிவு மட்டுமே அவர் தொழிலை ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
02. உங்கள் தொழிலுக்கான முதலீட்டு தொகையை கணக்கீடு செய்தல்.
முதலீடு செய்யப்படும் பொருட்களையும் அவற்றின் மாதாந்திர தேவையும் அலசி ஆராய்ந்து பின்பு அவற்றுக்கான முதலீட்டுத் தொகையை நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஒரு சிலர் தன் தொழிலை மிகப்பிரம்மாண்டமாக ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் இதற்காக எந்த கணக்கீடும் போடாமல் உன் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கடன் பெற்று மிக பிரம்மாண்டமான அளவில் அதிகப்படியான சரக்கை வாங்கி குவித்து பின்பு வாங்கிய பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
ஆனால் ஒரு சிலர் தன் தொழிலை மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்து தொழிலுக்கு ஒரு மாதத்திற்கு மட்டும் தேவைப்படும் விற்பனை சரக்கை மட்டும் சரியாக கணக்கிட்டு அதை மட்டும் வாங்கி வைத்து தன் தொழிலை ஆரம்பித்து ஒரு கணிசமான லாபத்தை மாதந்தோறும் ஈட்டி வருவார்கள்.
இங்கே தொழிலை பிரம்மாண்டமாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலரும், தொழிலை எளிமையாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலரும் நினைப்பது அவரவர் விருப்பம் ஆகவே உள்ளது. அதற்கான பிரதிபலனை அவர் அவர் வெகு விரைவில் பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
ஆனால் நீங்கள் தொழிலில் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் அங்கே தூங்கிக் கொண்டிருக்காமல் முதலீடு செய்யும் தொகையானது தன் வேலையை சரியாக செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாயும் எத்தனை முறை ஒரு தொழிலில் கண்டு வருகிறது அதன் அடிப்படையிலேயே உங்களது லாபம் இருக்கும்.
முதலீட்டு செய்யும் தொகையானது குதிரை வேகத்தில் சுற்றி வருகிறதா அல்லது மாட்டு வண்டியின் சக்கரம் போல் சுற்றி விடுகிறதா என்பது நீங்கள் முதலீடு செய்யும் பொருள்களின் மக்களிடையே உள்ள தேவையின் அடிப்படையிலேயே இருக்கிறது.
03. நிறுவனத்தின் இலக்கை தீர்மானித்தல்.
எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி அது தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே அது ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு நல்ல நிலையை அடையும் என்பதில் அனைவரும் அறிந்த உண்மை அறிந்த ஒன்றே.
இவ்வாறாக ஒரு தொழில் நிறுவனமும் தனக்கென ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் தொழில் நிறுவனத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிந்து மாதம் மாதம் தனது இலக்குகளின் வழியில் நிறுவனம் செல்கிறதா என்பதை ஒவ்வொரு தொழில் முனைவோரின் ஆராய்ந்து கொண்டே வரவேண்டும்.
இங்கே கூறப்படும் நிறுவனத்தின் இலக்கு என்பது வேறொன்றுமில்லை நிறுவனம் ஒரு ஆண்டு இறுதியில் அல்லது ஆறு மாத இறுதியில் அல்லது மூன்று மாத இறுதியில் அல்லது மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை லாபமாக அடைய என்ன செய்ய என்ன செய்ய வேண்டும் எத்தனை பொருட்கள் இதற்காக வேண்டும் என்பதனைய நிறுவனத்தின் இலக்கானது விளக்குகிறது.
04. பொருட்களின் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலையை தீர்மானித்தல்.
எந்த ஒரு நிறுவனமும் தன் இலக்கை அடைவதற்கு விற்பனைப் பொருள்களின் விற்பனை விலையானது முக்கிய காரணமாக விளங்குகிறது இப்படிப்பட்ட விற்பனைப் பொருள்களின் விலை மாறுபாடு அடையும் போது நிறுவனத்தின் இலக்கை அடைவது ஒரு சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆனால் எந்த ஒரு தொழிலும் தன் விற்கும் பொருட்களின் விலையை நிறைவாக அனைத்து வாடிக்கையாளர்களும் விற்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.
உங்கள் தொழில் நிறுவனத்தின் பொருட்களை தொடர்ச்சியாக வாங்குபவர்களுக்கு ஒரு விலை.
ஒரு சில கால இடைவெளியில் நிறுவனத்தின் பொருட்களை வாங்குபவர்களுக்கு மாறுபட்ட விலை. எப்போதாவது ஒரு முறை பொருட்களை வாங்குபவர்களுக்கு ஒரு விலை.
என பொருட்களின் விலை காலம் நேரம் சூழல் ஆகிவிட்டது போல மாறிக்கொண்டே இருக்கிறது எனவே நிறுவனத்தின் இலக்கை ஒவ்வொரு தொழில் நிறுவனமும் மாதாமாதம் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
எது எப்படியோ நிறுவனம் தான் முன்னதாகவே கணக்கிட்டது போல நிறுவனத்தின் இலக்கை எவ்வாறாவது அடையவேண்டும் என்பதே முக்கிய புள்ளியாக இங்கு இருக்கிறது.
05. மறு முதலீடு செய்வதற்கான தொகையை மாதாமாதம் நிறுவனத்திலிருந்து உருவாக்குதல்.
ஒரு தொழில் முதலீட்டு தொகையை தொழிலில் விற்கும் பொருளாக வாங்கி அதன்மீது லாபத்தை வைத்து அந்த பொருட்கள் அனைத்தையும் விற்று அதற்கான பணத்தை லாபத்துடன் வாங்கி அதில் லாபத்தை மட்டும் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் அந்த தொழிலில் முதலில் இட்ட சரியான முதலீட்டை மீண்டும் முதலீடு செய்வது மறு முதலீடு என்று கூறுகிறோம். இதனை ஆங்கிலத்தில் வொர்க்கிங் கேபிட்டல் (working capital) என்று கூறுகிறார்கள்.
இந்த மறு முதலீடு ஆனது மாதாமாதம் தொழில் சரியான நேரத்தில் சரியான காலத்தில் சரியான தொகை அளவிற்கு வருகிறதா என்பதை தொழில் முனைவோர் ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நீங்கள் நிறுவனத்தில் எங்கோ தவறு செய்த செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்பதே என்றே அர்த்தம்.
06. நிறுவனத்தின் சம குறியீட்டு புள்ளியை முறையாக பராமரித்தல்.
நீங்கள் தொழில் முதலீட்ட தொகை மீண்டும் கைக்கு எடுப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் முதலீடு செய்த தொகையை கைக்கு எடுக்க எத்தனை பொருட்கள் நீங்கள் விற்க வேண்டும். முதலீடு செய்த பொருட்களுக்கு சமமான அளவு லாபத்தை எடுக்க நீங்கள் எத்தனை பொருட்கள் விற்க வேண்டும் அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதை விளக்குவதே இந்த செம குறியீட்டு புள்ளி என்பதாகும்.
சம குறியீட்டு புள்ளியின் உதவியின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தொழில் முனைவோரும் செயல்படுவது மிக அவசியம். ஏதோ தொழிலில் முதலீடு செய்தோம் தொழிலை நடத்தினோம் என்று இல்லாமல் இவ்வாறாக நாம் தொழிலை நடத்தும் பொழுது நாம் தொழில் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு நல்ல நிலையில் இருப்போம் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
07. புதிய வாடிக்கையாளர் ஈர்த்தல் மற்றும் பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்தல்.
புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக உங்கள் தொழிலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து அதன் அடிப்படையில் மாதந்தோறும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க நீங்கள் புதிய அத்தியாயங்களை வகுத்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும். எந்த ஒரு தொழிலுக்கும் அதிகப்படியான அளவு புதிய வாக்காளர்களை மட்டுமே அந்த தொழிலின் ஊன்றுகோல் ஆகவும் வளர்ச்சிக்கான படிக்கற்கள் ஆகவும் இருக்கின்றனர்.
அதேபோன்று பழைய வாடிக்கையாளர்களை தக்க வைக்க அவர்களுக்கு என்னென்ன சலுகைகளை செய்ய வேண்டும் என்பதையும் ஆராய்ந்து அதனை செய்ய வேண்டும். குறைக்கப்பட்ட விலை மற்றும் கழிவுகள் மற்றும் இலவசங்கள் இவ்வாறாக பல பயனுள்ள இயக்கங்களை கொண்டு கொண்டு பழைய வாடிக்கையாளர்களை நிறுவனத்தோடு தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
08. எவ்வாறு தேவையற்ற வங்கிக் கடனை ஒதுக்குவது என்பதைப் பற்றி அறிதல்.
மாதம் மாதம் மறு முதலீட்டுக்கான தொகையை சரியான நேரத்தில் சரியான காலத்திலும் கைக்கு வரும் சூழ்நிலையில் தேவையற்ற வங்கி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. வங்கிக் கடனை தொழில்கள் நாடும் போது ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் உங்கள் தொழிலுக்கான பொறுப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு தொழிலுக்கும் பொறுப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலையில் அந்த தொழிலை தன் கையை விட்டு விலகும் என்ற ஒரு மறைமுகமான எச்சரிக்கை மணியை உணர்த்துவதாக இருக்கிறது.
09. நிறுவனத்தின் நிதி நிலையை ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து அறிதல்.
ஒவ்வொரு மாதமும் தொழில்முனைவோர் தனது நிறுவனத்திற்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்து இடப்பக்கம் பொறுப்புகளையும் வலப்பக்கம் சொத்துக்களையும் வைத்து ஒரு தராசு முள் செயல்படுவதைப் போல இவைகளின் எடையை சரிபார்க்க வேண்டும்.
சொத்துக்கள் தாக்கம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும் தொழில் ஒரு நல்ல தொழிலுக்கு உதாரணமாக கூறப்படுகிறது.
பொறுப்புக்கள் பக்கம் அதிகமாகவும் சொத்துக்கள் பக்கம் குறைவாகவும் இருக்கும் சூழ்நிலையில் அது ஒரு நெளிந்த தொழிலுக்கான உதாரணமாக கூறப்படுகிறது.
10. நிறுவனத்தில் அதிகம் விற்கக் கூடிய பொருட்கள் எவை நிறுவனத்தின் அதிக லாபம் கூடிய லாபம் தரக்கூடிய பொருட்கள் எவை என கண்டுபிடித்தல்.
எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த தொழில் நிறுவனத்தில் அதிகம் விற்கக்கூடிய பொருட்கள் என்னென்ன? அதிகமான லாபம் லாபம் தரக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதை ஆராய்ந்து அறிந்து அவற்றின் அடிப்படையில் அந்த பொருட்களின் இருப்பை சரி பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது ஒவ்வொரு வளர்ந்துவரும் தொழில் முனைவோரின் தலையாய கடமையாக இருக்கிறது.
ஆனால் ஒரு சில தொழில் முனைவோர் தன் தொழிலில் எந்த அளவிற்கு சரக்கு வைத்துள்ளோம் அவற்றை விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் எதற்காக அந்த தொழிலை செய்ய வேண்டும் என்பதே என் கேள்வியாக இருக்கிறது. தன் தொழிலில் என்ன நடக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து வைத்துக் கொள்ளாத ஒரு தொழில் முனைவோர் எவ்வாறு ஒரு தொழிலை நல்ல பாதையில் கொண்டு செல்வார். என்பதை மிக மன வருத்தத்துடன் கூறி எனது பதிவை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்
கருத்துரையிடுக