Working capital of your Business ? மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன?
Story 34. Working capital of your Business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலில் மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பார்க்கப் போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். வழக்கம் போல் சிறு கதையுடன் இந்த பதிவை ஆரம்பிக்க உள்ளேன். வாருங்கள் கதையுடன் தொடங்குவோம். ஒரு இளநீர் வியாபாரி 100 ரூபாய் முதலீடு இட்டு தினமும் தனது சப்ளையர் இடமிருந்து இடமிருந்து ஒரு இளநீரை பத்து ரூபாய்க்கு வீதம் 10 இளநீர்களை 100 ரூபாய்க்கு வாங்கி வந்து. ஒவ்வோர் இளநீர...