Can get Business loan from Relatives ?தொழிலுக்குத் தேவையான கடனை சொந்தங்கள் இடம் இருந்து பெறலாமா?
Story 35. Can get Business loan from Relatives ?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உங்கள் தொழிலுக்குத் தேவையான கடனை சொந்தங்கள் இடம் இருந்து பெறலாமா? அவ்வாறு வாங்கப்படும் கடன் தொழில் கடனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி விரிவாக பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வழக்கம்போல் இந்த பதிவினை ஒரு சிறு சிறு கதையுடன் ஆரம்பிக்கப் போகிறேன். வாருங்கள் கதையுடன் ஆரம்பிக்கலாம்.
ஒரு தொழில்முனைவோர் தான் உத்தேசித்துள்ள தொழிலுக்கான முதலீட்டை தனது உறவினர்களிடம் இருந்து பெரும் தொகையை வைத்து ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாறாக வாங்கப்படும் கடனை பொருளியல் வல்லுநர்கள் ஆங்கிலத்தில் அன் செக்யூர் லோன் (unsecure loan ) பாதுகாப்பற்ற கடன் என்று அழைக்கிறார்கள்.
தொழிலில் பாதுகாப்பற்ற கடன் என்ற வார்த்தையை நமக்கு இத்தகைய கடன் தொகையானது கடன் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பிற்காலத்தில் ஒரு பிரச்சனையை உண்டாகப் போகிறது என்பதை உணர்த்துகிறது.
பலவகை மேலாண்மை பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பல தொழில் வருவது வகுப்புகளுக்கு சென்று ஆரம்பிக்கப்படும் தொழிலானது தனது இயல்பான விற்பனையை துவங்குவதற்கு சற்று காலம் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இத்தகைய காலம் அவர்கள் விற்கக்கூடிய, அல்லது உற்பத்தி செய்யக்கூடிய, அல்லது சேவை செய்யக்கூடிய, பொருட்களின் தேவையை பொறுத்து அந்தந்த தொழில் மூன்று மாதத்தில் சூடு பிடிக்குமாஅல்லது ஆறு மாதத்தில் சூடு பிடிக்குமா அல்லது ஒரு வருடம் வருடத்தில் சூடு பிடிக்குமா என்பதை அறிய முடியும்.
தொழில் செய்ய முனையும் தொழில் முனைவோர் தான் உறவினர்களிடமிருந்து தொழிலுக்கான முதலீட்டு தொகை வாங்குவது என்பது எந்த பொருளியல் வல்லுனர்களும் அறிவுறுத்த படாத ஒன்று.
இருந்தபோதிலும் இத்தகைய கடன் தொகையானது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் அதாவது ஒரு வருடத்துக்குள் வட்டியும் முதலுமாக திருப்பித் தருவதாக அமைய வேண்டும் என்பதே ஒரு தொழில் மேலாண்மை பயிற்சியாளராக என்னுடைய கருத்து அமைகிறது.
சரி வாருங்கள் இதனைப் பற்றிய சற்று விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
01.தொழிலுக்குத் தேவையான கடனை சொந்தங்கள் இடம் இருந்து பெறலாமா?
02. எந்த வகை தொழில் செய்பவர்கள் தனது சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறலாம்?
03.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறுவதில் உள்ள நன்மைகள் என்னென்ன?
04.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறுவதில் உள்ள தீமைகள் என்னென்ன?
05.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன்களை எவ்வாறு கணக்கில் கொண்டு வருவது?
06.சொந்தங்கள் இடம் இருந்து வாங்கப்படும் கடன் தொழில் கடனை எவ்வாறு மேலாண்மை செய்வது?
என்பது குறித்த பல விஷயங்களை தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.
01.தொழிலுக்குத் தேவையான கடனை சொந்தங்கள் இடம் இருந்து பெறலாமா?
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கண்டிப்பாக சொந்தங்கள் கையிலிருந்து இருந்து கடன் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் கடனுக்கு உண்டான காலமானது குறுகிய காலத்திற்காக இருக்க வேண்டும். இவ்வகை கடனை வட்டியும் முதலும் சரியான நேரத்தில் திருப்பி காட்டுவது மிக அவசியம்.
02. எந்த வகை தொழில் செய்பவர்கள் தனது சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறலாம்?
பெரும் முதலீடுகளை ஆரம்பிக்கும் தொழிலை தவிர்த்து சிறிய அளவில் துவங்கும் தொழில்கள் அனைத்து அனைத்தும் தொழிலுக்கான கடனை தன் சொந்தங்கள் இடம் இருந்து வாங்கலாம். ஏனென்றால் இவ்வகை தொழிலில் அதிகப்படியான அளவு முதலீடு என்பது தேவைப்படாது. மேலும் வக்கிங் கேப்பிட்டல் என்று சொல்லக்கூடிய மறு முதலீட்டு தொகை கூடிய சீக்கிரம் கையில் திரும்பக் கிடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
03.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறுவதில் உள்ள நன்மைகள் என்னென்ன?
குறுகிய நாட்களில், அவசர காலத்தில் வங்கிகளிலும் இருந்தும் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது இயலாத காரியம் ஆகவே, அவசர காலத்திற்காக சொந்தங்கள் இருந்து கடன் பெறுவது ஒரு நன்மை பயக்கும் விஷயமாக உள்ளது.
04.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன் பெறுவதில் உள்ள தீமைகள் என்னென்ன?
தொழிலுக்காக தனது சொந்தங்கள் எதிலிருந்து கடன் பெறுவதன் காரணமாக உறுதியளிக்கப்பட்ட திருப்பித்தரும் நாளன்று கடனை திருப்பி செலுத்தாத சூழ்நிலையில் கடன் கொடுத்தவர்கள் மன உளைச்சலுக்கு உண்டாக சூழ்நிலை உருவாகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு கொண்டான குடும்ப உறவு முறியும் காரணமாகவும் இருக்கிறது.
05.சொந்தங்கள் இடமிருந்து தொழில் கடன்களை எவ்வாறு கணக்கில் கொண்டு வருவது?
தொழிலுக்காக சொந்தங்கள் இடம் இருந்து பெறப்படும் தொகையின் அளவானது சிறியதாக இருக்கும் பொழுது அதனை கணக்கில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. மாறாக பெறப்படும் தொகையானது அதிகப்படியான அளவில் இருக்கும்போது அதனை கண்டிப்பாக கணக்கில் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உருவாகிறது அதோடு மட்டுமல்லாது உறவினர்களை வரி உட்பட்டு உட்பட்ட பல சிக்கல்களுக்கு இழுத்துவிடும் சூழ்நிலையும் உருவாகிறது.
06.சொந்தங்கள் இடம் இருந்து வாங்கப்படும் கடன் தொழில் கடனை எவ்வாறு மேலாண்மை செய்வது?
ஒரு தொழில் மேலாண்மை பயிற்சியாளராக நான் இங்கே கூறுவது என்னவென்றால் தொழிலுக்கு உண்டான கடனை கண்டிப்பாக சொந்தங்கள் இடம் இருந்து வாங்குவதை தவிர்க்க தவிர்ப்பது நல்லது. அவ்வாறு பெறப்படும் கடனை உரிய காலத்தில் வட்டியும் முதலும் கூட்டி சரியான நேரத்தில் திரும்ப அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. மேலும் இந்த வகை கடன்களை கணக்கில் கொண்டு வரக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்று.
மேற்சொன்ன தொழிலின் கடனுக்கு உண்டான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்
கருத்துரையிடுக