Creditors repayment period ? உங்கள் தொழிலின் கடனீந்தோர் பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன?



Story 30.Creditors repayment period ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்   முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

பொதுவாக ஒரு தொழில் வாங்கப்படும்  கடன் பொருட்களானது அதை விற்ற பின்னரே தனது சப்ளையாருக்கான  பணத்தை திருப்பி செலுத்துவதை வழக்கமாக பல தொழில்கள் இன்றளவும் கொண்டுள்ளன.

ஒரு சிலர் தான் கடனுக்கு வாங்கிய பொருளை விற்ற பின்னரும் அது சப்ளியர் கேட்கும் வரை அந்த முதலீட்டுக்கான பணத்தை தன் தொழிலில் ரோடேஷன் செய்து அதன் அதன் பின்னர் அந்தப் பொருளுக்கு மீண்டும் விற்பனை வாய்ப்பு வரும் பொழுதே இன்னொரு பொருளை வாங்கி பழைய கடனுக்கான பணத்தை வழங்கி வருகின்றனர்.

இவை அனைத்தும் தொழிலில் தவறான நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நீங்கள் உங்கள் தொழிலின் துவக்க காலத்தில் கொள்முதலுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை  ஒதுக்கி வைத்துள்ளது உள்ளீர்களோ அதை அவர்களிடம் மட்டுமே சரியான நேரத்தில் கொடுத்து பின்பற்றி வரும் போது உங்கள் நிறுவனத்திற்கான கடன்சுமை இருக்காது.

  இந்தப் பதிவில் கீழ்கண்டவற்றை நாம் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்

01.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன?

02.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலம் அதிகரிக்க காரணம் என்ன?

03.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் அதிகரிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன ?

04.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

05. தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது?

வாருங்கள் பதிவுக்குள் சென்று இதனை விரிவாக விவாதிப்போம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலம் என்றால் என்ன?

தொழிலின் விற்பனைப் பொருட்களை விற்கும் சப்ளையர் இடமிருந்து வாங்கிய பொருட்களுக்கு உண்டான பணத்தை திருப்பி  செலுத்துவதற்கு நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய கால அவகாசமே  கடனீந்தோர் காண திருப்பி செலுத்தும் காலம் என்று அழைக்கப்படுகிறது.

02.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலம் அதிகரிக்க காரணம் என்ன?

ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து பணம் கொடுப்பேன் என்று உறுதி அளித்து நம் சப்ளையர் இடமிருந்து வாங்கப்பட்ட பொருள்களை நாம் ரொக்கத்திற்கு விற்கும்போது வாங்கப்பட்ட பொருட்களுக்கான பணத்தை திருப்பி அளிப்பதில் எந்தவித பிரச்சனையும் வருவதில்லை.
மாறாக இங்கே கடனுக்கு வாங்கப்பட்ட பொருட்கள் மீண்டும் கடனுக்கு விற்கப்படும் சூழ்நிலையில் சப்ளியர் கான பணத்தை திருப்பி அளிப்பதில் அளிப்பதில் காலதாமதம் ஆகிறது.

இங்கே நாம் கடனுக்கு விற்கப்படும் பொருட்களுக்கான கடன் நாட்கள் ஆனது நாம் சப்ளையர் இடம் இருந்து வாங்கும் கடனுக்கு உண்டான நாட்களில் நாட்களுக்கு குறைவாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சப்ளையர் இடம் இருந்து வாங்கிய நாட்களுக்கு அதிகமாக செல்லும் சூழ்நிலையில் நிறுவனம் தனது வொர்க்கிங் கேபிட்டல் என்று சொல்லக்கூடிய தொகையை மீண்டும் தொழிலில் எடுப்பதற்கு பெரும் பாடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

03.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் அதிகரிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன ?

03A. நிறுவனத்தின் மீது கெட்ட பெயர் உருவாதல்,
சப்ளையர் இடமிருந்து கடனுக்கு வாங்கிய பொருளை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு உண்டான தேதிக்குள் பணத்தை செலுத்தாத சூழ்நிலையில் தனது சப்ளையர் இடம் தனது நிறுவனத்திற்கு ஒரு கெட்ட பெயர் மட்டும் உருவாகிறது இதன் காரணமாக மீண்டும் மீண்டும் அந்த சப்ளையர் நமது நிறுவனத்திற்கு கடன் கொடுக்க முன் வருவதற்கு சற்று தயக்கம் காட்டுவர்.

3B.Working capital,
வொர்க்கிங் கேபிட்டல் என்று சொல்லக்கூடிய அதைத்தொடர்ந்து இயக்குவதற்கான பணம் சரியான அளவில் நிறுவனத்தில் இல்லாத சூழ்நிலை உருவாகிறது இதன் காரணமாக தொடர்ந்து பொருட்களை வாங்கி விற்க முடியாத சூழ்நிலையும் உருவாகிறது.

04.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

04A. தேவையற்ற கடன் விற்பனையை தவிர்த்தல்.
தொழிலில்தொடர்ந்து பொருட்களை வாங்குபவர்களுக்கு மட்டுமே கடனைக் கொடுத்து மாற்ற எப்போதாவது ஒரு வாட்டி பொருட்களை வாங்குபவர்களுக்கு கடன் விற்பனையை குறைப்பது மிகவும் நன்றாக இருக்கும் இதன் காரணமாக ஒரு கணிசமான தொகை உங்கள் தொழில் சேர்வது நீங்க பார்க்க முடியும்.

04B. கடன் விற்பனையை பாதியாக குறைத்தல்.
உங்கள் தொழில் கடன் விற்பனை அடிப்படையில் மட்டுமே செயல்படும் என்ற சூழ்நிலையில். விற்கப்படும் பொருள்களுக்கான  மொத்த தொகையில் பாதி அளவு பணத்தை பெறுவதற்கான வழியை ஆராய்ந்து அறிந்து விற்பனையில் ஈடுபட வேண்டும்.

05.தொழிலின் கடனீந்தோர்  பணத்தை திருப்பி செலுத்தும் காலத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது?

05A. கடன் விற்பனையாளராக விற்பனைக்கு எந்த ஒரு தொழிலுக்கும் தன் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான வொர்க்கிங் கேபிட்டல் என்று சொல்லக்கூடிய தொகை என்பது மாதந்தோறும் தொழிலில் இருக்கவேண்டியது மிகவும் கட்டாய சூழ்நிலை.

எனவே எந்த ஒரு தொழிலும் தன் விற்பனையை துவங்குவதற்கு முன் இந்த ஒர்க்கிங் கேப்பிடல் என்று சொல்லக்கூடிய தொகை கைக்கு வரும் வரையிலும் விற்பனை செய்துவிட்டு பிறகு கடன் விற்பனைக்கு செல்வது நல்லது.

அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விற்பனை பொருட்களை அட்டவணையிட்டு யாருக்கெல்லாம் கடன் விற்பனை செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் ரொக்கத்திற்கு  விற்க வேண்டும் யாருக்கெல்லாம் கடன் மற்றும் ரொக்கம் விற்பனை செய்ய  வேண்டும் என்று முன்கூட்டியே ஆராய்ந்து இந்த வொர்க்கிங் கேபிட்டல் போதிய அளவு மாதந்தோறும் கைக்கு வருவது வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டி ஆராய்ந்து அறிந்து அதன்படி செயல்படுவது நன்று.

மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான  கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?