fixed and variable cost of production ? தொழிலின் உற்பத்தி பொருட்களுக்கான நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலை என்றால் என்ன?
Story 33. fixed and variable cost of production ?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உங்கள் தொழிலின் உற்பத்தி பொருட்களுக்கான நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலை என்றால் என்ன?
அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வழக்கம்போல் ஒரு சிறு கதையுடன் இந்த பதிவை துவங்கியிருக்கிறேன். வாருங்கள் பதிவுக்கு போகலாம். ஒரு வீடு கட்டி தரும் தொழில் நிறுவனம் 5 சதுரம் கொண்ட ஒரு வீட்டைக் கட்டி கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்காக இந்த நிறுவனம் அதற்கான பிரத்யேக பொருட்களான சிமெண்ட், கம்பி, கற்கள், மரங்கள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை பயன்படுத்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் அந்த வீட்டை வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்கள் முன்கூட்டியே கணித்து வைத்திருப்பார்கள். இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்திய பொருட்களுக்கு விருப்பம் தெரிவித்தால் அந்த குறிப்பிட்ட வீட்டை அந்த குறிப்பிட்ட தொகையை கொடுத்து அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர் வாங்க முற்படலாம்.
அவ்வாறாக ஒரு நிலையாக இல்லாமல் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ஒரு வீட்டை கட்டி தர முன்வரும் ஒரு கட்டிட தொழில் நிறுவனம் 5 சதுரம் கொண்ட ஒரு வீட்டைக் கட்டுவதற்கு தேவைப்படும் சிமெண்ட், கம்பி, கற்கள், மரங்கள் மற்றும் இதர கட்டுமான பொருட்களை வாடிக்கையாளர் விருப்பத்திற்கும் விடும்பொழுது இங்கே அந்த தொழில் நிறுவனம் அந்த வீட்டிற்கான உற்பத்தி விலையை கண்டுபிடிப்பது சற்று தடுமாற்றத்தை சந்திக்க நேரிடுகிறது. ஏனென்றால் கட்டுமானப் பொருட்கள் வேறுபட்டதாக மாறும்போது அவற்றுக்கான கொள்முதல் விலை என்ன? அவற்றுக்கான உற்பத்தி விலை என்ன? அவற்றின் உற்பத்தி விலை என்ன என்பதை முன்கூட்டியே அவர்கள் கணிப்பதில் சற்று சிக்கல்கள் உருவாகின்றன.
இவ்வாறாக நிலையான உற்பத்தி விலைக்கும் மாறுபட்ட உற்பத்தி விலைக்கும் ஒரு பற்பல மேலாண்மை கணக்குகளை வைத்து நிறுவனத்தின் இலக்கை உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்படும்பொழுது நிறுவனம் தன் இலக்கை ஒருநாள் கண்டிப்பாக அடையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
நிலையான விற்பனை உற்பத்தி விலை என்றால்? என்ன மாறுபட்ட உற்பத்தி விலை என்றால் என்ன? என்பதை பற்றி தற்போது தொழில் முனைவோர்கள் அன உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எந்த ஒரு நிறுவனமும் தன் இலக்கை அடைவதற்கு விற்பனைப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை விலையானது முக்கிய காரணமாக விளங்குகிறது இப்படிப்பட்ட விற்பனைப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனை விலை மாறுபாடு அடையும் போது நிறுவனத்தின் இலக்கை அடைவதில் ஒரு சில சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆனால் எந்த ஒரு தொழிலும் தன் விற்கும் பொருட்களின் விலையில் வடிக்கையாளரிகள் பேரம் பேசுவதன் மூலம் சரியான விலையில் உற்பத்தி பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.
உங்கள் தொழில் நிறுவனத்தின் பொருட்களை தொடர்ச்சியாக வாங்குபவர்களுக்கு ஒரு விலை.
ஒரு சில கால இடைவெளியில் நிறுவனத்தின் பொருட்களை வாங்குபவர்களுக்கு மாறுபட்ட விலை. எப்போதாவது ஒரு முறை பொருட்களை வாங்குபவர்களுக்கு ஒரு விலை.
என பொருட்களின் விலை காலம் நேரம் சூழல் இவைகளுக்கு ஏற்றார் போல மாறிக்கொண்டே இருக்கிறது எனவே நிறுவனத்தின் இலக்கை ஒவ்வொரு தொழில் நிறுவனமும் மாதாமாதம் மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
எது எப்படியோ நிறுவனம் தான் முன்னதாகவே கணக்கிட்டது போல நிறுவனத்தின் இலக்கை எவ்வாறாவது அடையவேண்டும் என்பதே முக்கிய புள்ளியாக இங்கு இருக்கிறது.
மேலும் இந்த பதிவை சற்று விரிவாக பார்ப்போம் வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
01. நிலையான உற்பத்தி விலை என்றால் என்ன?
02. மாறுபட்ட உற்பத்தி விலை என்றால் என்ன?
03. நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலை உருவாக காரணங்கள் என்னென்ன?
04. நிலையான உற்பத்தி விலையில் நன்மை தீமைகள் என்னென்ன?
05. மாறுபட்ட உற்பத்தி விலையில் நன்மைகள் தீமைகள் என்னென்ன?
06. நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலையை நிறுவனத்தின் இலக்குடன் எவ்வாறு தொடர்பு படுத்துவது?
07. நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலையை எவ்வாறு மேலாண்மை செய்வது?
என்பது குறித்த பல விஷயங்களை இங்கே விவாதிக்க உள்ளோம் வாருங்கள் பதிவுகள் போகலாம்.
இதில் நாம் முதலில் பார்க்க விருப்பது.
01. நிலையான உற்பத்தி விலை என்றால் என்ன?
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மூலப்பொருளின் தரமும் விலையும் ஒரே நிலையாக இருக்கும் சூழ்நிலையில் அவற்றின் மொத்தக் கூட்டுத் தொகையை உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதே நிலையான உற்பத்தி விலை என்று அழைக்கப்படுகிறது.
02. மாறுபட்ட உற்பத்தி விலை என்றால் என்ன?
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான மூலப்பொருளின் தரமும் விலையும் ஒரே நிலையாக இல்லாமல் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும் சூழ்நிலையில் சூழ்நிலையில் அவற்றின் மொத்தக் கூட்டுத் தொகையை உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதே மாறுபட்ட உற்பத்தி விலை என்று அழைக்கப்படுகிறது.
03. நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலை உருவாக காரணங்கள் என்னென்ன?
நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விரைவில் உருவாக ஒரே ஒரு காரணம் மட்டுமே எந்த ஒரு தொழிலுக்கும் இருக்கும் அது என்னவென்றால் வாடிக்கையாளர் விருப்பம்.
04. நிலையான உற்பத்தி விலையில் நன்மை தீமைகள் என்னென்ன?
04A. நிலையான உற்பத்தி விலையானது தொடர்ச்சியாக நிறுவனத்தின் இலக்கை அடைய உதவுகிறது.
04B. நிலையான உற்பத்தி விலையில் முதலில் உருவாக்கப்படும் கட்டமைப்பின் அடிப்படையிலேயே கடையில் இறுதிவரை செயல்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்போது உற்பத்தி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
04.C. நிலையான உற்பத்தி விலையானது தனது நிறுவனத்தின் இலக்கை அடைய உதவிகரமாக இருந்தாலும் இது லாபத்தை கூட்டல் விகிதத்தில் மட்டுமே சென்று கொண்டிருக்கும்.
05. மாறுபட்ட உற்பத்தி விலையில் நன்மைகள் தீமைகள் என்னென்ன?
05A. மாறுபட்ட உற்பத்தி விலையானது வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்கும் நிலையில் உற்பத்தியில் அதிகப்படியான உற்பத்தி கழிவுகளை உருவாகின்றன.
05B. மாறுபட்ட உற்பத்தி விலையானது நிறுவனத்திற்கு அதிக நட்டத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது லாபத்தில் ஒரு சமநிலையற்ற சூழ்நிலை உருவாகிறது.
05C. மாறுபட்ட உற்பத்தி விலையில் உற்பத்தி கழிவுகள் அதிகம் ஏற்பட்டாலும் இத்தகைய உற்பத்தி முறையில் கிடைக்கும் லாபம் ஆனது அதிக அளவில் இருக்கிறது நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது.
06. நிலையான மற்றும் மாறுபட்ட உற்பத்தி விலையை நிறுவனத்தின் இலக்குடன் எவ்வாறு தொடர்பு படுத்துவது?
நிலையான உற்பத்தி விலைக்கும் மாறுபட்ட உற்பத்தி விலைக்கும் ஒரு சராசரி லாப அளவை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் நிறுவனத்தின் இலக்கை உருவாக்கி செயல்படும்போது எந்த ஒரு நிறுவனமும் தனது ஆண்டுக்கான இலக்கை விரைவாக அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்
கருத்துரையிடுக