How Do Business with relaxing mind ?சந்தோஷமாக நிதானமான மனதுடன் உங்கள் தொழிலை நடத்துவது எப்படி?

Story 38. How Do Business with relaxing mind ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் மனதை அதிகம் குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக  நிதானமான மனதுடன் உங்கள் தொழிலை 
நடத்துவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே விரிவாக பார்த்திருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

வழக்கம்போல் இந்த பதிவு ஒரு சிறுகதைகள் ஆரம்பிக்கப் போகிறேன். வாருங்கள் கதையுடன் பதிவுக்கு போகலாம். தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பல தொழில் முனைவோர்கள்  அலுவலகத்திலும் வீட்டிலும் குடும்பத்துடன் விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் என எப்பொழுது பார்த்தாலும் தன் நடத்திவரும் தொழில் நிறுவனத்தை  பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள்  இது ஒருவகையில் நிறுவனத்திற்கு நல்லதாக இருந்தாலும் தொடர்ந்து இவ்வாறாக இருப்பது உடலுக்கும் மனதிற்கும் குடும்ப சூழ்நிலைக்கும்  நல்லது அல்ல. ஆங்காங்கே சூழலுக்கேற்ற போல் தொழில் முனைவோர் தன் சிந்தனையும் நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.

என்ன செய்வது தொழில்முனைவோர் சும்மா இருந்தாலும் அவர் கையில் உள்ள மொபைல் போன் ஆனது சும்மாவே இருப்பதில்லை. ஏதேனும் ஒரு வகையில் தொழிலுக்கான தகவலை அவருக்கு அளித்து வருகிறது. அதன் காரணமாக வீட்டிலும் அல்லது குடும்ப விசேஷங்களிலும் பங்கு கொண்டிருக்கும் பொழுதும் அவர் தொழிலைப் பற்றி பல விஷயங்களை யோசிக்க தொடங்குகிறார்.

இவ்வாறு இருப்பவர்கள்  அலுவலகத்திலும் வீட்டில் இருக்கும் போதும் என எப்போதும் சிடுசிடுவென மூஞ்சியை வைத்துக்கொண்டும் வீட்டின் மனைவி மற்றும் மக்களுடன் ஒழுங்காக கூட பேசாமல் எப்போதும் ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.இவர்கள் ஒரு விதமாக வியாபாரத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு சிலர் வீட்டிற்கு வந்தவுடன் செருப்பை கழட்டி வெளியில் விடுவதுபோல அலுவலக பணிகளை வீட்டிற்கு வெளியே கழட்டி விட்டு ஒரு நல்ல குடும்பத் தலைவன் போல் வீட்டிற்குள் வந்து குடும்பத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் மீண்டும் மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியில் செல்லும்பொழுது மீண்டும் அலுவலகப் பணியை தல்டன் காலணியை அணிவது போல் அணிந்துகொண்டு அலுவலகப் பணியை பார்க்க சென்றுவிடுவார்கள். இவர்கள் ஒரு விதமாக வியாபாரத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு சிலர் நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் அதிகம் குழப்பிக் கொள்ளாமல் சந்தோஷமாக  நிதானமான மனதுடன் செய்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று கேட்டாள் நிறுவனத்தின் நடக்கும் எந்த ஒரு விஷயத்திற்கும் முன்னரே கணக்கீட்டு வைத்து செயல்படுவார்கள். முன் கணிக்க படாத எந்த தொழில் நடவடிக்கையும் பல குழப்பங்களையும் இன்னல்களையும் ஏற்படுத்தும்.

சரி வாருங்கள் இந்த பதிவை இன்னும் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் ஆழமாகவும் பார்ப்போம்.

01. தெளிவான மனதுடன் உங்கள் தொழிலை  நடத்துவது எப்படி?
02. தெளிவான மனதுடன் தொழிலை நடத்த  என்ன செய்ய வேண்டும்?
03. தொழிலில் இக்கட்டான சூழ்நிலையில்  மனதை எவ்வாறு வைத்துக்கொள்வது?
04.நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்னரே கணக்கீட்டு வைப்பது எப்படி?
05. மேலாண்மை கணக்குகளை முன்னதாகவே எவ்வாறு கணக்கிடுவது?

என பல விஷயங்களை ஆழமாகவும் விரிவாகவும் தெளிவாகவும் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. தெளிவான மனதுடன் உங்கள் தொழிலை  நடத்துவது எப்படி?

வீட்டில் நிம்மதியாக நன்கு தூங்கி எழுந்து தொழிலுக்கு தயாரான தொழில்முனைவோர் தன் நாற்காலியில் அமரும் பொழுது அந்நாள் குண்டான தனது வேலைகளை நல்ல இறை வணக்கத்துடன் தொடங்கி அந்நாள் முழுவதும் இனிமையாக நல்ல வியாபாரத்துடன் அமைய தெளிவான மனது என்பது மிகவும் அவசியமான இருக்கிறது. அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் கோபம் எரிச்சலூட்டும் செயல்கள்  என  ஒரு சில தொழில் முனைவோர்களை நாம் ஆங்காங்கே  பார்க்க முடியும்.

02. தெளிவான மத மனதுடன் தொழிலை நடத்த  என்ன செய்ய வேண்டும்?

அறிவான மற்றும் தெளிவான மனதுடன் தொழிலை நடத்த நினைப்பவர்கள் தினந்தோறும் தன் தொழிலில் செய்ய வேண்டிய விஷயங்களை முன்னதாகவே பட்டியலிட்டு அதனை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரும்பொழுது எந்த ஒரு தொழிலும் சிறப்பாக தானாகவே நடைபெறும்.

இவற்றிற்கு உதவியாக பற்பல ( ERP Software ) எனப்படும் மென்  பொருள் சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இவற்றில் உங்கள் தொழிலுக்கு உண்டான எதிர்கால கணக்கிடுதல் மற்றும் வரவு செலவுகள் மற்றும் மேலாண்மை கூற்றுகள்  போன்றவற்றை முன்னதாகவே பட்டியலிட்டு வைத்திருக்கும் போது தினந்தோறும் நீங்கள் உங்கள் தொழிலில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவான மனதுடன் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. இந்த சூழ்நிலையில் எதையும் எங்கள் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளவும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

03. தொழிலில் இக்கட்டான சூழ்நிலையில்  மனதை எவ்வாறு வைத்துக்கொள்வது?

தொழிலின் இக்கட்டான  சூழ்நிலையை மேலாண்மை செய்வதில் தொழில்முனைவோர்கள் இரண்டு விதமாக செயல்படுகிறார்கள்.
03A. ஆரவாரத்துடன் செயல்படுதல்.
இப்படி ஆகிவிட்டது அல்லது அப்படி ஆகிவிட்டது என்று நினைத்து, தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி தொழிலில் ஏற்பட்ட சூழ்நிலையை  செய்வது எப்படி என்பதை முன்னரே அறியாத சூழ்நிலையில் இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.
03B. நிதானமானதுடன் செயல்படுதல்.
தொழில் நடைபெறும் அனைத்து இக்கட்டான சூழ்நிலையையும் முன்னதாகவே அறிந்த அது நடைபெறும் சூழ்நிலையில் அவற்றை வெகு  சுலபமாக சில தொழில் தொழில்முனைவோர்கள் மட்டுமே மேலாண்மை செய்து வருகின்றனர்.

04.நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்னரே கணக்கீட்டு வைப்பது எப்படி?

எந்த ஒரு மேலாண்மை சம்பந்தமான கணக்குகளையும் முன்னரே கணக்கிடுவது
அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோருக்கு மிகவும் சுலபமானது. இருந்த போதிலும் இவர்கள் புதிய மேலாண்மை கணக்கீடுகளுக்கு பதிலாக பழமையான மேலாண்மை முறைகளை மட்டுமே கையாளுகின்றனர்.இதில் அனுபவம் மற்றும் தொழில் முனைவோர்கள் மட்டுமே இக்கட்டான சூழ்நிலைகளில் சற்று தடுமாற்றத்தை சந்திக்க நேரிடுகிறது.

05. மேலாண்மை கணக்குகளை முன்னதாகவே எவ்வாறு கணக்கிடுவது?

தொழிலின் அனைத்து இக்கட்டான சூழ்நிலையையும் முன்னதாக கணக்கீட்டு செயல்படுவதன் மூலம் எந்த ஒரு தொழிலையும் சிறப்பாக நடத்த முடியும்.

தொழிலுக்கான இக்கட்டான சூழ்நிலை என்ன? அவை அனைத்தும் எங்கே எப்படி உருவாகின்றன?  அவற்றை எவ்வாறு மேலாண்மை கணக்கியல் மூலம் முன்னதாகவே அறிவது. போன்ற பல கேள்விகளுக்கு மேலாண்மை பயிற்சி வகுப்புகள் மட்டுமே ஒரு சிறந்த முற்றுப் புள்ளியாக அமையும்.

நாம் எங்கே போய் நம் தொழிலின் மேலாண்மையை மற்றவர்களிடம்  கற்றுக் கொள்வது நமக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்று நினைப்பவர்கள் தானாகவே வெகுவிரைவில் பல நல்ல மேன்மை கூறுகளை தன் சொந்த அனுபவத்தின் மூலம் பல பலவற்றை  கற்றுக் கொள்வார்கள். ஆனால் அதற்குள் நடத்திவரும் தொழிலானது மேலும் மேலும் பல இக்கட்டான சூழ்நிலையில் போய் மாட்டிக் கொண்டுவிடும் அதனை மீண்டும் பழையபடி மீட்டெடுப்பது மிக மிக கடினமாக ஆகிவிடுகிறது.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?