Manufacturing cost computation? உங்கள் தொழிலில் உற்பத்தி செலவு என்றால் என்ன?

 


Story 31. Manufacturing cost computation?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலில் உற்பத்தி செலவு என்றால் என்ன? தொழிலின் இலக்கை அடைய இந்த உற்பத்தி செலவானது எவ்வாறு பயன்படுகிறது?  மேலும்அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

பொதுவாக உற்பத்தி நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்யும் பொருட்களின் அடிப்படையில்
பெரிய அளவு உற்பத்தி நிறுவனங்கள்
நடுத்தரமான உற்பத்தி நிறுவனங்கள் சிறிய அளவு உற்பத்தி நிறுவனங்கள்
என்று வகைகளாகப் பிரிக்கின்றனர் பல வகைகளாக பிரிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் பல லட்சம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஒருவகையானஉற்பத்தி நிறுவனங்கள் என்று வகைப்படுத்தலாம் இதற்கு உதாரணமாக,
மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்
உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்

பல வருடங்களாக ஒரே பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஒரு வகையான உற்பத்தி நிறுவனங்களாக
இருக்கின்றன இதற்கு உதாரணமாக,
பெரிய கட்டிட கட்டுமான நிறுவனங்கள்
கப்பல் கட்டும் நிறுவனங்கள்
தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்களையும் ஆலைகளையும உருவாக்கும் நிறுவனங்களை எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.

எப்படிப்பட்ட உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் அதன் உற்பத்தி விலையை சரியாக கண்டுபிடித்தால் மட்டுமே அதன்மீது  நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான லாபத்தை வைத்து அதனை விற்க  முடியும். அவ்வாறு உற்பத்தி விலையை கண்டுபிடிப்பதில் ஏதேனும் தவறு நடைபெற்றால் குறைந்த லாபம் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு சில நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்க நேரிடும்.

எனவே பெரிய உற்பத்தி நிறுவனமோ அல்லது சிறிய நீர் உற்பத்தி நிறுவனமோ  எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி அதற்கான பொருட்களை உற்பத்தி செய்யும் பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான சரியானஉற்பத்தி விலையை  கண்டுபிடித்து அதன்மீது இலாபத்தை வைத்து விற்கும்  பொழுது எந்த ஒரு உற்பத்தி நிறுவனமும்  லாபகரமாக இயங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அவ்வாறாக இந்த பதிவில்.

01. பொருள்களின் உற்பத்தி செலவு என்றால் என்ன?
02.பொருள்களின்உற்பத்தி செலவை எவ்வாறு கண்டுபிடிப்பது?
03.தொழிலின் இலக்கை அடைய இந்த உற்பத்தி செலவானது எவ்வாறு பயன்படுகிறது? 
04. உற்பத்தி செலவை துல்லியமாக கண்டுபிடிக்காமல் பொருட்களை விற்கும் சூழ்நிலையில் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
05. பொருட்களின் உற்பத்தி செலவை எவ்வாறு மேலாண்மை செய்வது?

என்பது குறித்த பல விஷயங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்க வைக்கிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. பொருள்களின் உற்பத்தி செலவு என்றால் என்ன?

உற்பத்தி செய்யப்படும்  பொருட்களுக்கான அனைத்து மூலப் பொருட்களையும்  வாங்கி அதனை ஒரு முழுமையடைந்த பொருளாக மாற்றுவதற்கு செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கான கூட்டுத் தொகையை பொருட்களுக்கான உற்பத்தி செலவு என்று கூறலாம்.

02.பொருள்களின்உற்பத்தி செலவை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உற்பத்தி செய்யப்படும் முழுமை அடையும் பொருட்களுக்கான அனைத்து மூலப் பொருளுக்கான மொத்த விலை மற்றும்  அந்தப் பொருளை உருவாக்குவதற்காக செலவிடும் Consumable products என்று சொல்லக்கூடிய செலவு செய்யும் பொருள்களின் செலவுகளையும் கூட்டி மேலும்ஆட்களுக்கு உண்டான கூலி இயந்திரங்களுக்கு உண்டான கூலி
ஆலை வாடகை
மின்சார செலவுகள்
பொருட்களை கையாளுவதற்கான செலவுகள் மற்றும்
பொருட்களை விளம்பரப்படுத்தும் அதற்கான செலவுகள்
இவை அனைத்தையும் கூட்டி வரும் மொத்த தொகையை  உற்பத்தி செய்யப்படும் மொத்த பொருட்களால் எண்ணிக்கையால் வகுத்து கிடைப்பதே ஒரு உற்பத்திப் பொருளின் சரியான உற்பத்தி விலை என்று கூறலாம்.

03.தொழிலின் இலக்கை அடைய இந்த உற்பத்தி செலவானது எவ்வாறு பயன்படுகிறது? 
உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் சரியான உற்பத்தி விலையை  கண்டுபிடித்தால் மட்டுமே
>தொழிலில் நீங்கள் முதலீடு செய்துள்ள  தொகையை மீண்டும் எடுப்பதற்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும்?
> தொழில் நீங்கள் முதலீடு செய்துள்ள தொகையைத் தாண்டி லாபத்தை எடுப்பதற்கு எத்தனை பொருட்களை தாண்டி விற்க வேண்டும்?
> தொழிலில் முதலீடு செய்துள்ள தொகைக்கு இணையான லாபத்தை எடுப்பதற்கு எத்தனை பொருட்கள் விற்க வேண்டும்?
இவ்வாறாக வருடத்திற்கு நான்கு நீங்கள் எத்தனை பொருட்கள் விற்க  வேண்டும்?
இவ்வாறாக மாதத்திற்கு எத்தனை பொருட்கள் நீங்கள்  விற்க வேண்டும்? இவ்வாறாக வாரம்தோறும் எத்தனை பொருட்கள் நீங்கள்  விற்க வேண்டும்? இவ்வாறாக தினந்தோறும் எத்தனை பொருட்களை நீங்கள்  விற்க வேண்டும்?

என்பது குறித்த பல முடிவுகளை உங்கள் தொழிலில் எடுப்பதற்கு இந்த பொருட்களின் உற்பத்தி விலையானது உதவ உதவிகரமாக இருக்கிறது.

04. உற்பத்தி செலவை துல்லியமாக கண்டுபிடிக்காமல் பொருட்களை விற்கும் சூழ்நிலையில் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

உற்பத்தி தொழிலில் ஒரு முக்கிய பகுதியாக பார்க்கப்படும் இந்த உற்பத்தி செலவு மற்றும் அதனைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது இதில் ஏதேனும் குளறுபடி அல்லது தவறுகள் நடந்து விட்டால் அது நிறுவனத்தின் தலைவிதியை மாற்ற கூடிய அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

ஒரு சில நிறுவனங்கள் இந்த உற்பத்திப் பொருளுக்கு பொருட்களின் விலையை தொடக்க காலத்தில் கண்டுபிடிக்க விலையை வைத்தே கடைசிவரை உபயோகித்து செல்கின்றனர்.
ஆனால்ஒவ்வொரு முறையும் மூலப்பொருட்களின்  விலைமாறும்போதும்
ஆட்களின் கூலிமாறும்போதும்
எரிபொருட்களின் விலை மாறும் போதும்
மின்சாரத்தின் விலை மாறுபடும் போதும்
ஏற்று இருக்கு கூலி மாறுபடும் போதும்

இவ்வாறாக பல சூழ்நிலைகளில் உற்பத்திப் பொருட்களுக்கான உற்பத்தி விலை ஆனது மாறுபட்டு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆரம்ப காலத்தில் கணிக்கப்பட்ட  உற்பத்தி விலையின் அடிப்படையிலேயே பொருட்களை விற்கும் சூழ்நிலையில்  கண்டிப்பாக நிறுவனம் குறைவான லாபத்தையோ அல்லது நஷ்டத்தை மட்டுமே அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாறாக மூலப்பொருட்களின் விலை மாறுபாட்டின் பொழுதும் ஒவ்வொரு உற்பத்தியின் பொழுதும் புதிய விற்பனை விலை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார்போல் நிறுவனத்தின் இலக்கை தீர்மானித்து  பொருட்களை விற்கும் போது எந்த ஒரு நிறுவனமும் தனது இலக்கை அடைவதை தடுக்க முடியாது என்பது ஆணித்தரமான அடித்து கூறப்பட்ட உண்மை.

05. பொருட்களின் உற்பத்தி செலவை எவ்வாறு மேலாண்மை செய்வது?

நிறுவனங்களில் ஒவ்வொரு உற்பத்திப் பொருட்களுக்கும்,
நிலையான உற்பத்தி விலை,
மாறுபட்ட உற்பத்தி விலை,
என இரண்டு வகைகளாக உற்பத்தி விலையை பிடித்து வைத்து பின்பற்றி வருகின்றனர்.

நிலையான உற்பத்தி விலை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களின் நிலையான பயன்பாடு பயன்பாட்டைக் குறிக்கிறது. இதன் அடிப்படையில் எத்தனை பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதே சமமான உற்பத்தி மூலப் பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

மாறுபட்ட உற்பத்தி விலை என்பது வாடிக்கையாளர்களின் தேவைக்கு இணங்க மூலப்பொருட்களின் தவத்தை ஏற்று இறக்கி வாடிக்கையாளர்களின் ரசனைக்கு இணைந்து பொருள்களை உற்பத்தி செய்து தரும் பொழுது இந்த உற்பத்திப் பொருட்களுக்கான உற்பத்தி விலை என்பது மாறுபட்டு காணப்படுகிறது. இது ஏன் உற்பத்தி விலையில் மாறுவதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.

மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான  கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?