Bank loan and Debtors .வங்கிக்கடன் மற்றும் தனது வாடிக்கையாளர்களான கடனாளிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை
தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப்பதிவில் வங்கிக்கடன் மற்றும் தனது வாடிக்கையாளர்களான கடனாளிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கப் போகிறோம்.
தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் இந்த வங்கிக் கடன் மற்றும் கடனாளி களுக்கான மேலாண்மை என்பது மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த சாராம்சமாக விளங்குகிறது இந்த ஒரு விஷயத்தை எந்த ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக சமாளித்து வருகிறதோஅந்த நிறுவனம் தனது இலக்கை மிக சுகமாக அடைந்து விடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
கடனீந்தோர் அதாவது உங்கள் தொழிலுக்கு உண்டான பொருளை கடனுக்கு அளிப்பவர்கள் அதாவது சப்ளையர் என்று சொல்லக்கூடிய இவர்கள் எந்த ஒரு தொழில் முனைவோருக்கும் துவக்க காலத்தில் பொருட்களை கடனுக்கு வழங்குவதில்லை. மாறாக முதல் ஒரு சில நம்பிக்கையான பரிவர்த்தனைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு சில காலங்களில் உங்களுக்கு அவர்கள் கடன் கொடுக்க முன்வருகிறார்கள் . இந்த நிலை ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் ஒரு மகத்தான நிலை என்றே கூறலாம். ஏனென்றால் உங்களை நம்பி கடனுக்கு பொருளை கொடுக்க ஒரு நிறுவனம் முன் வருகிறது என்பது ஒரு மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.
உங்கள் சப்ளையர் இடம் உங்களுக்கு உண்டான ஒரு நற் பெயரை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் கொடுக்க முன்வந்திருக்கும் சூழ்நிலையில் அந்த நம்பிக்கையை கடைசி வரை நீங்கள் காப்பாற்றுவது உங்களுடைய தலையாக தலையாய கடமையாக கருதப்படுகிறது.
என்றால் நீங்கள் விற்கும் பொருளை கடனுக்கு கொடுக்க முன்வந்துள்ள முதல் நபர் இவரே ஆவார். அந்த நம்பிக்கையை உங்கள் சப்ளையர் தொடர்ந்து இழக்காமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான புள்ளி.
உங்கள் சப்ளையர் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு கடனுக்கு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கொடுக்க முன்வருவர் அவ்வாறு அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு முன் நீங்கள் அந்த கடன் தொகையை அவருக்கு மீண்டும் செலுத்தும்போது உங்கள் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீதும் அவர்களின் பற்று மேலோங்கும்.
அவ்வாறு இல்லாது ஒரு குறிப்பிட்ட நாள் கொடுத்தும் அந்த நாட்களை தவறவிடும் நீங்கள் அந்த பொருளுக்கு உண்டான பணத்தை கொடுக்காத சூழ்நிலையில் உங்கள் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீதும் அவருக்கு ஒரு சந்தேக நிலை உருவாகும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. இதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன்.
சரிங்கய்யா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் நாங்களும் குறிப்பிட்ட நேரத்தில் தனது சப்ளை கொடுக்கவேண்டிய குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள என்னிடம் கேட்டாள். உங்களுக்கு உண்டான பதில் கீழே இருக்கிறது மேலும் படியுங்கள்.
இங்கு ஒரு சிறிய கதை உடன் சொல்லவந்த விளக்கத்தைக் கூறி உள்ளேன், கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.
ஒரு இளநீர் வியாபாரி இளநீர் ஒன்றை பத்து ரூபாய்க்கு வாங்கி அதன் மீது ஐந்து ரூபாய் லாபம் வைத்து 15 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
இவரின் சப்ளையர் தினமும் 10 இளநீரை 10 ரூபாய் வீதம் மொத்தம் 100 ரூபாய்க்கு கடன் கொடுக்க முன் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மீண்டும் நாளை வரும் பொழுது பழைய கடனை அதாவது 100 ரூபாயை கொடுத்துவிட்டு மீண்டும் புதிய கடனை பெற்று செல்லுமாறு கூறி உள்ளார் என வைத்துக்கொள்வோம்.
இது இருவருக்கும் இடையேயான ஒரு புரிந்துணர்வு அல்லது ஒப்பந்தம் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இந்த தொழில் செய்வோர் தனது இதன் மீது இருக்கும் நம்பிக்கையை நிரூபிக்க இந்த 10 இளமையும் விற்று லாபத்தை எடுத்து மீதமுள்ள 100 ரூபாயை மறுநாள் காலை தனது சப்ளையர் இடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மட்டுமே மீண்டும் அவருக்கு 10 இளநீர் கடனாகக் கிடைக்கும்.
இவ்வாறாக ஒரு மாதம் இரண்டு மாதம் மூன்று மாதம் 6 மாதம் வரை ஒரு சிறு பிழை கூட இல்லாமல் தொடர்ச்சியாக செய்யும் பொழுது அந்த குறிப்பிட்ட சப்ளையர் இந்த தொழிலாளிக்கு அதிகப்படியான அளவு கடன் கொடுக்க முன் வருவார் என்பது தொழிலில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றே.
அவ்வாறு அவ்வாறு இல்லாமல் இளநீர் விற்கவில்லை என்பதற்காக முதல் 5 இளநீர்களை மட்டும் பணத்திற்கு விற்றுவிட்டு மீதமுள்ள 5 இளநீர்களை கடனுக்கு விற்றால் அந்த நாள் இறுதியில் இவரிடம் பணத்திற்கு விற்ற 75 ரூபாய் மட்டுமே இருக்கும் இதை வைத்து அவர் அவருக்கு தேவையான லாபத்தையும் எடுக்க முடியாது மேலும் நாளை வியாபாரத்திற்கு வேண்டிய இளநீரையும் வாங்க முடியாது.
இங்கு சற்று ஆழ்ந்து யோசித்தால் வியாபாரத்தின் உண்மை புரியும் உங்களுக்கு புரிய வரும்.
வியாபாரத்தில் கடன் விற்பனை என்பது எந்த ஒரு நிறுவனத்தையும் முழு முனைப்புடன் வளர்க்காது.
நீங்கள் வாங்கியதே கடனுக்கு அப்படியிருக்க நீங்கள் எவ்வாறு கடனுக்கு பொருளை விற்க முடியும்?
நீங்கள் உங்கள் சப்ளையர் க்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறு காப்பாற்ற முடியும்?
உங்களின் முதல் இங்கே சுத்தமாக இல்லாத சூழ்நிலையில் எவ்வாறு நீங்கள் கடனுக்கு பொருட்களை விற்க முடியும்?
நீங்கள் கூறலாம் நான் வேறு கடன் வாங்கி தொழிலை மேலும் வளர்ப்பேன் என்று.
உங்கள் சப்ளையர் வட்டி இல்லாமல் உங்களுக்கு பொருட்களை வழங்கி முன்வரும் போது அதையே உங்களால சரியா கொடுக்க முடியாத சூழ்நிலையில் வட்டியுடன் வாங்கிய கடனை எவ்வாறு வட்டியுடன் அடைப்பீர்கள் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதை யோசியுங்கள் மக்களே?
அதுமட்டுமில்லாது இந்த கடனுக்கான வட்டியை நீங்கள் சம்பாதித்த லாபத்தில் இருந்து மட்டுமே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதும் உங்கள் மனதில் கொள்ளுங்கள் என் அன்பார்ந்த தொழில்முனைவோர்களே.....
சரிங்கய்யா நீங்க இவ்வளவு சொல்றீங்களே இதுக்கு ஒரு முடிவு நீங்களே சொல்லுங்க என்று நீ என்கிட்ட கேட்டீங்கன்னா இந்த கேள்விக்கு உண்டான பதில் கீழே இருக்கு நல்லா கவனிங்க.
முதல் பரிமாணம்,
இளநீர் விற்கவில்லை என்பதற்காக நீங்கள் முதல் 5 இளநீர்களை மட்டும் பணத்திற்கு விற்றுவிட்டு மீதமுள்ள 5 இளநீர்களை கடனுக்கு விற்கும் சூழ்நிலையில் கடனுக்கு வாங்குவோர் இடம் உங்கள் நிலையை எடுத்துக்கூறி அவர்களிடம் நாளை உங்கள் தொழிலை நடத்துவதற்கான நடத்துவதற்கான மீதமுள்ள 25 பணத்தை பெருமளவிற்கு ஆவது முயற்சிக்க செய்யவேண்டும்.
5*15= 75
5* 5= 25
Total =100
இரண்டாம் பரிமாணம்,
இளநீர் விற்கவில்லை என்பதற்காக நீங்கள் முதல் 5 இளநீர்களை மட்டும் பணத்திற்கு விற்றுவிட்டு மீதமுள்ள 5 இளநீர்களை கடனுக்கு விற்க முற்படும் சூழ்நிலையில் கடன் வாடிக்கையாளர்களை சற்று காக்க வைத்து அதற்குள்ளாக ஏதேனும் றெக்க விற்பனை நடக்கின்றதா என்று பார்த்து இதன் மூலம் நாளை உங்களுக்கு உங்கள் தொழிலுக்கு உண்டான பொருட்களை வாங்குவதற்கு பணம் கிடைக்கிறதா என்று பார்த்து பின்பு அந்த நாள் இறுதியில் நீங்கள் உங்கள் பொருள்களை கடனுக்கு விற்கலாம் இது ஒருவகையான புத்திசாலித்தனம் என்று கூட நாம் இங்கே கூறலாம்.
என் அன்பார்ந்த தொழில் முனைவோரை நான் இங்கே கூற வந்துள்ள கருத்து உங்களுக்கு தற்போது புரிந்திருக்கலாம், புரியாமல் கூட போயிருக்கலாம் எனவே இவ்வகையில் மட்டுமே நீங்கள் தொழிலை செய்தால் மட்டுமே நீங்கள் சந்தையில் நிலைத்து நிற்க முடியும் என்பது சத்தியம், உறுதி, நிலைப்பாடு, இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை எனவே சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின் தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. உங்கள் தொழிலை சிறப்பாக கணக்கிடவும் நடத்திடவும் மேலாண்மை செய்யவும் நான் உதவி வருகிறேன்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக