Before start a Business? தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Story 7. Before start a  Business?

ரொம்ப ஈசியாக தொழில் எப்படி முன்னேறுவது,  அரைச்ச மாவை அரைக்காமல்  வேற லெவல்ல உங்கள் தொழிலை நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

அதற்குண்டான பதில் இந்தப்பதிவில் இருக்கிறது இந்த இந்தப் பதிவையும் அடுத்து அடுத்து வரும் பதவியும் பார்த்து புரிஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

உலகத்தில் தொழில் முன்னேற்றத்திற்கு ரெண்டு வழி தாங்க இருக்கு.

முதலாவது தன் வாழ்வில் பெறப்பட்ட அனுபவத்தை வைத்து தொழில் நடத்துவது

இரண்டாவது தனது குருவிடமிருந்து பல அனுபவங்களை பெற்று தொழில் நடத்துவது

இவற்றில் எது உங்களது காலத்தையும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த இந்தப் பதிவில் ஒரு தொழிலை தொடங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்க போகிறோம். வாங்க பதிவுகுள்ள  போலாம்.

உங்களிடம்  பல நபர்கள் வந்து பற்பல தொழில்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர்,  இன்ஸ்டாகிராம்,  போன்றவைகள் இணையங்கள் மூலமாகவும் பல தொழில் வாய்ப்புகள்  உங்களின் கதவைத் தட்டுகின்றன. இருந்தபோதிலும் உங்கள் மனதில் இருக்கும் ஒரு பெரிய கவலை என்னவென்றால் இந்த தொழில் ஆரம்பித்தால் லாபகரமாக வருமா,  அல்லது அந்த தொழில் ஆரம்பித்தால் ஞாபகம் வருமா,  இவன் இப்படி சொல்கிறான். அவன் அப்படி சொல்கிறான். உறவினர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் என்று பல குழப்பங்கள் ஒவ்வொரு தொழில் முனைவோரின் மனதிலும் அவ்வப்போது தோன்றி மறைகின்றன அதோடு மட்டுமல்லாது அதற்கான யோசனைகளில் மக்கள் ஈடுபடுகிறார்கள். இருந்தபோதிலும் இறுதியாக அவர்கள் யாரேனும் ஒரு முக்கிய புள்ளி அவர்களின் யோசனை அடிப்படையிலேயே தன் தொழிலை ஆரம்பித்து வெற்றியடையும் செய்கிறார்கள், ஒரு சிலர் தோல்வி அடையும் செய்கிறார்கள்.  இவ்வாறான சூழ்நிலையில் ஒரு தொழிலை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் நாம் அலசப் போகிறோம்.

ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து நடத்துவதற்கு பல காரணங்கள் பல கூறுகள் பல விளக்கங்கள் இருந்தாலும் முக்கியமாக ஒரு நான்கு விஷயங்கள் உள்ளன அவை

1.Products of business
2. Place  of business
3.Capital of businesses
4.Break Even Point of business

Products of business

ஒரு தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அந்த தொழிலில் இருந்து ஒரு கணிசமான அளவு லாபத்தை தொடர்ந்து வியாபாரத்தில் இருந்து எடுப்பதற்கும் ஒரு  முதல் மற்றும் முக்கிய காரணமாக இருப்பது நீங்கள் விற்கக்கூடிய அல்லது சேவை அளிக்கக் கூடிய பொருட்களின் அடிப்படையிலேயே அமைகிறது.அத்தகைய

1.பொருளுக்கு உண்டான தேவை

2. பொருளின் மீது தனது தொழிலின் பங்கு அளிப்பு

3.பொருளுக்கான சுழற்சி

இவைமூன்றும் மிக முக்கியமானது நீங்கள் ஒரு பொருளை தேர்ந்தெடுத்து தொழில் நடத்தும் போது.

Place  of business

சரி ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை மட்டுமே தேர்ந்தெடுத்தால் மட்டும் போதுமா என்று நீங்கள் கேட்டால்
என்னிடம் இருந்து வரும் பதில் போதாது இதற்காக நீங்கள் உங்கள் தொழிலின் துவக்க காலத்தில் பல ஆலோசனைகளை மற்றும் கலந்தாய்வுகலை செய்வது மிகவும் அவசியம். அது என்னவென்றால்

1. நீங்கள் தொழிலை செய்ய நினைக்கும் பகுதி?
2. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை?
3. அந்த மக்கள் தொகையிலும் நீங்கள் கூர நீங்கள் விற்கக்கூடிய பொருட்களை வாங்கும் நபர்கள் எத்தனை பேர்?
4. அதிலும் அந்த குறிப்பிட்ட பகுதியில் உங்களுக்கு போட்டியாளராக நிற்கும் போட்டியாளர்களை பற்றியும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
5. மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி அதாவது இன்டர்வெல் என்று சொல்லக்கூடிய ஒரு பொருளை வாங்கிய பின் அடுத்த பொருளை வாங்குவதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கால இடைவெளி எவ்வளவு?

மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ அல்லது வருடக்கணக்கில் உட்கார்ந்து அலசி ஆராய வேண்டும் என்பது ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும்  மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலான தொழில் செய்யும் மக்கள் இந்த இடத்தில் தவறு செய்து விடுகிறார்கள். பின்பு  சிறிது காலம் கழித்து  அவர்கள் செய்த தவறுகளை நினைத்து புலம்புவதை  பெருவாரியாக பார்க்க முடிகிறது. ஆகவே எவ்வளவு நேரம் எடுத்தாலும் சரி நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலுக்கு உண்டான அலசுதல்கள்  மற்றும் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் முடித்து ஒரு தெளிவான சூழ்நிலைக்கு வந்தபின்பு  நீங்கள் உங்கள் தொழிலை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது.  இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

Capital of businesses

நிறுவனத்தின் பொருளையும் இடத்தையும் தீர்மானித்த பிறகு நிறுவனத்தை துவங்குவதற்கான தொடக்க செலவுகளுக்கு செலவு செய்யும் பணம் முதலீடு என்று அழைக்கப்படுகிறது

துவக்க செலவு கொள்முதல் செலவு என மொத்தமாக  எவ்வளவு  ஆகும் என முன்னரே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

இதெல்லாம் சரி, தொழில் குண்டான சரியான முதலீட்டுத் தொகையை எவ்வாறு கண்டறிவது என்பது ஒரு பெரிய குழப்பம் உள்ளது?

இங்குதான் நீங்கள் வருடக்கணக்கில் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து நிறுவனத்திற்கான ரிப்போர்ட் என்று சொல்லக்கூடிய அறிக்கைகள் உதவுகின்றன?

நீங்கள் நினைத்து வைத்திருக்கும் பொருளுக்கு உண்டான வாடிக்கையாளர்களை கணக்கிட்டு பின் அவர்களின் பர்ச்சேஸ் இன்டர்வல் அதாவது ஒரு பொருளை ஒரு நபர் வாங்கிய பின் மீண்டும் அந்தப் பொருளை அவர் வாங்குவதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம். மற்றும் ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு  மதிப்பு கொண்ட பொருட்களை வாங்குகிறார் என்பதே கணக்கில் கொண்டு,  இதைப்போன்று ஒரு மாதத்திற்கு மொத்தம் எத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட பொருட்களை வாங்குகிறார் வாங்குகிறார் கணக்கு  செய்து பின்பு ஒரு மாதத்திற்கு  விற்கக்கூடிய பொருட்களை மட்டும் வாங்கி வைத்து தொழிலை ஆரம்பித்தால்  போதுமானது.

மாறாக நான் பெரிய அளவில் ஆரம்பித்தால் மட்டுமே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதற்காக பெரிய முதலீடுகள் இட்டு  பின் ஆறு மாதம் கழித்து அய்யயோ இப்படி ஆகிவிட்டது,  அப்படி ஆகி விட்டது  என்று நீங்கள் புலம்பித் தீர்ப்பது படு முட்டாள்தனம் என்று நான் சொல்லுவேன்.

எனவே நீங்கள் கணக்கிட்டு வைத்துள்ள அளவிற்கு மட்டுமே பொருட்களை வாங்கி வைத்து அவற்றை மட்டும் விற்பனை செய்தால் மட்டும் போதுமானது. பின்பு தொழில்  வளர்ந்த பின்பு  நான்கு பேர் பார்க்கும் அளவிற்கு விரிவுபடுத்தி நடத்துவது சாமர்த்தியம்.

Break Even Point of business

தற்போது இருக்கும் காலங்களில் தொழில் முதலிடப்பட்ட தொகை கைக்கு மீண்டும் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இந்த பிரேக் ஈவன் பாயிண்ட் பற்றி அறிவது மிகவும் முக்கியமான ஒன்று.

தொழில் உரிமையாளர் தான் இட்டிருக்கும் முதல் தொகை மீண்டும் அவர் கையில் கிடைக்க எத்தனை பொருட்களை அவர் விற்க வேண்டும் என்பதே வணிகவியலில் சம குறியீட்டு புள்ளி என்று கூறுகிறார்கள்.

தொழில் உரிமையாளர் முதலீட்டில் இருக்கும் தொகை அளவிற்கு சமமான தொகை மீண்டும் அவர் கையில் கிடைக்க எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்பதை  கூறுவது தான் இந்த சம குறியீட்டு புள்ளி என்று கூறலாம்.

முதலீட்டு தொகைக்கு  சமமான தொகை லாபமாக கைக்கு கிடைக்கும் காலம் வரை அவர் தான் இருக்கும் தொழிலில் இல்லாது வேறு தொழிலில்  இருந்து சம்பாதிக்கும் தொகையைவிட அதிகமாக இந்த தொழில் லாபம் இருக்கிறதா  என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மேற்சொன்ன துவக்ககால கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின்  தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. உங்கள் தொழிலை சிறப்பாக கணக்கிடவும் நடத்திடவும் மேலாண்மை செய்யவும்  நான் உதவி வருகிறேன். 

🙏 நன்றி வணக்கம் 🙏

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?