Business and Monthly profit .தொழில் முனைவோர் தனது தொழிலில் இருந்து மாதம் மாதம் லாபத்தை தனியே எடுத்து வைக்கலாமா?
தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு தொழில் முனைவோர் தனது தொழிலில் இருந்து மாதம் மாதம் லாபத்தை தனியே எடுத்து வைக்கலாமா? இது தொழிலுக்கு நன்மை பயக்குமா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வாங்க பதிவுகுள்ள போகலாம்.
மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து எடுத்து வைக்கலாமா என்று நீங்கள் என்னிடம் கேட்டால். நான் ஒரு தொழில் மேலாண்மை பயிற்சியாளராக கண்டிப்பாக மாதம் மாதம் நீங்கள் உங்கள் தொழிலில் இருந்து லாபத்தை தனியே எடுத்து வைக்கவேண்டும் என்று மட்டுமே கூறுவேன்.
ஏனென்றால், சரியாக திட்டமிடல் கொண்ட ஒவ்வொரு தொழில் முனைவோரும் தான் தொழிலுக்கு உண்டான லாபத்தை முன்னரேயே கணக்கிட்டு தொழிலைத் தொடங்குவார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. அவ்வாறு முன்னதாகவே தன் தொழிலுக்கு உண்டான லாபத்தை அவர் திட்டமிட்டு அதற்கான செயல்களை முனைப்புடன் செய்யும் பொழுது கண்டிப்பாக அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் தொழிலில் இருந்து மாதம் மாதம் எடுத்து வைப்பார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
என்ன சார் இப்படி சொல்றீங்க இப்ப இருக்கிற தொழில் போட்டியில் மீண்டும் மீண்டும் தனது இலாபத்தை எடுத்து தொழிலில் போட்டால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அது பெரிய தொகையாக வந்து நிற்கும், அதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சிக்கும் அது உதவிகரமாக இருக்கும். என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனா நீங்க புதுவிதமாக மாதாமாதம் தொழிலில் வரும் லாபத்தை எடுத்து வைத்துக்கொண்டால் எவ்வாறாக தொழிலை தொடர்ந்து நடத்துவது என்று மனசுக்கு மனதில் யோசிப்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதுதான் நிஜம்.
சரியான திட்டமிடல் கொண்ட எந்த தொழிலும் இதைப்பற்றி யோசிக்க தேவையில்லை மாதம் மாதம் உங்களுடைய லாபத்தை உங்கள் தொழிலில் நீங்கள் இருந்து கண்டிப்பாக எடுத்து வைப்பது மிக மிக சுலபம் அது மட்டுமில்லாமல் இந்த லாபம் உங்கள் குடும்ப பொருளாதாரத்திற்கும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தரத்திற்கும், அதுமட்டுமல்லாது உங்கள் தொழிலின் எதிர்கால திட்டமிடலுக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்.என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
சரிங்க சார் என்னுடைய தொழிலை எவ்வாறு நான் திட்டமிடுவது? என்பதைக் கூறுங்கள் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் இதற்கான பதில் நான் ஏற்கனவே இதற்கான பதிலை என்னுடைய முந்தைய
பதிவில் விரிவாகவும் விளக்கமாகவும் கூறி உள்ளேன்
( உங்கள் தொழில் இலக்கை எவ்வாறு உருவாக்குவது)
தயவு செய்து அந்த பதிவை படித்துவிட்டு மீண்டும் இந்த பதிவை படித்தால் உங்களுக்கு மிகவும் புரியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இதெல்லாம் சரி மீண்டும் மீண்டும் தனது லாபத்தை தொழில் இடுபவர்கள் அவருக்கு உண்டான லாபம் எடுக்கவில்லையா ஏன் என்று கேட்டால் ஆம் எடுக்கிறார்கள் நேரடியாக இல்லை மறைமுகமாக எடுக்கிறார்கள் அப்படி என்றால் புரியவில்லை சார் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் அதற்கான பதில்.
01. அவர்களது லாபத்தை ஒரு சொத்துக்களாக வாங்குகிறார்கள் உதாரணமாக டூவீலர் கார் மற்றும் நிறுவனத்திற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் அறைகலன்கள் அறைகலன்கள்
02. அவசர தேவைக்காக ஒரு பெரிய தொகை எடுப்பது இதுவும் லாபத்தில் இருந்து எடுப்பது ஆகவே கணக்கிடப்படுகிறது.
03. தொழிலின் எதிர்கால திட்டமிடல் அல்லது புதிய அத்தியாயங்கள் எடுப்பது.
தொழிலை தொடங்கி ஒரு குறிப்பிட்ட மாதம் கழித்து இவர் எடுக்கும் தொகையானது நீங்கள் ஏற்கனவே கணக்கீட்டு வைத்துள்ள மாதா லாபத்தின் பெருக்கு விகிதத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும்.
உதாரணமாக,
6 * 30, 000= 1, 80, 000/-
அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் நிறுவனங்கள் தொழில் சரிவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்
லாப எடுப்புகள் அனைத்தும் தொழில் வளர்ச்சியையும் செயல்பாடுகளையும் அதிக அளவு பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.
சரிங்க சார் நீங்க சொல்றதெல்லாம் புரியுது ஆனால் எவ்வாறு லாபத்தை மாதம் மாதம் நான் என் தொழிலில் இருந்து எடுத்து வைப்பது, அவ்வாறு எடுத்து வைக்கும் போது என் தொழிலை திறம்பட நடத்த முடியுமா என்று நீங்கள் வினவினால் அதற்கான ஒரு சில பதில்களை நான் இங்கே கூற விழைகிறேன் அதனை கீழே பாருங்கள்.
01.Working capital என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு மாதமும் உங்கள் தொழிலை நடத்துவதற்கான ஒரு தொகை உங்கள் தொழிலில் இருக்கிறதா என்ற என்பதை மாதம் மாதம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
02. இந்த Working capital என்று அழைக்கக்கூடிய தொகையில் குறைந்தது 50 சதவீதமாவது உங்கள் கையில் பணமாகவோ அல்லது வங்கியிலோ இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
03.இந்த Working capital என்று அழைக்கக்கூடிய தொகையில் 25 சதவீதம் மட்டுமே உங்கள் தொழில் வாடிக்கையாளர்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
04. நீங்கள் கடனுக்கு விற்பனை செய்துள்ள பொருள்களுக்கு உண்டான வாடிக்கையாளர்கள்(Debtors ) தன் கடனை திருப்பி செலுத்தும் காலம் குறைந்தது சராசரியாக 15 நாட்களுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
05. மீதமுள்ள 25% தொகையை உங்கள் சரக்கு இருப்பில் வைத்துக் கொள்வது சிறப்பு. இந்த சரக்கிருப்பு குறைந்தது பத்து நாட்களுக்குள் விற்று தீர்ந்து இருக்க வேண்டும் என்பது உங்கள் தொழில் விற்பனைப் பொருள் இன் தனிச் சிறப்பாக இருக்கவேண்டும்.
இவ்வாறு இல்லாமல் ஒரு தொழிலைத் தொடங்கி விற்பனையை கட்டமைத்து முறைபடுத்தாமல் அதிக அளவில் கடன் விற்பனைக்கும், குறைந்த அளவிற்கு ரொக்க விற்பனையும் செய்யும் பொழுது
தொடர்ந்து மாதம் மாதம் தொழிலை நடத்துவதற்கான வொர்க்கிங் கேபிட்டல் Working capital அதாவது நடப்பு செலவுக்கு என்ன செய்வீர்கள்? வங்கிகள் மற்றும் சொந்தங்களிடம் இருந்து கடன் வாங்குவீர்கள்? இவ்வாறு தொழில் செய்யும் பொழுது எவ்வாறு நீங்கள் மாதமாதம் லாபத்தை எடுத்துவைக்க முடியும்? என்பதையும் உங்கள் தொழிலில் பெரிய கேள்விக்குறியாக உருவாக்கிக் கொள்ளுங்கள. இதனை உங்களுக்கு உள்ளாகவே கேட்டுக் கொள்ளுங்கள்.
மேற்சொன்ன வகையில் நீங்கள் உங்கள் தொழிலின் கணக்கு வழக்குகளையும் மேலாண்மையும் செயல்பாடுகளையும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்புக்குள் (Business system ) செய்யும்பொழுது மாதாமாதம் உங்கள் தொழிலில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் எடுத்து வைக்க முடியும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின் தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. உங்கள் தொழிலை சிறப்பாக கணக்கிடவும் நடத்திடவும் மேலாண்மை செய்யவும் நான் உதவி வருகிறேன்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக