Enterpreneur Business Story. ஒரு தொழில் முனைவோரின் கதை.

Story 3. Enterpreneur Business Story

வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கான பதிவு இது தயவு செய்து ஐந்து நிமிடம் ஒதுக்கி இதனை முழுவதுமாக படிக்கவும்.

செய்ற வேலை பிடிக்கல, அதுல வாங்க சம்பளம் பிடிக்கல, நான் படிச்சது வேற,  இப்ப செய்யுற வேலை வேற, என்று நினைக்கும்போது, எங்கிருந்தோ வருகிறது ஒரு வியாபார வாய்ப்பு, அதனை முன்பின் அறிமுகமில்லாத ஒரு நபர் அந்த தொழிலின் விளக்கத்தை எடுத்துரைக்கிறார். அந்த விளக்கத்தில் பூரிப்பு அடைந்த இளைஞன் அந்த தொழிலை எடுத்து நடத்த முன்வருகிறார்.

வியாபாரம் செய்வதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து, அதற்கான ஒரு  தொகையையும் முதலீடு செய்து, வியாபாரத்தை மேற்கொள்கிறார்,

முதல் மாதம் முடிவடைகிறது போதிய அளவு விற்பனை இல்லை சரி அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த மாதத்திற்கு உண்டான பற்பல அந்த மாதத்திற்கு உண்டான வாடகை சம்பளம் கரண்ட் பில் போன்ற செலவுகளை செய்கிறார்

இரண்டாம் மாதம் முடிவடைகிறது அப்போதும் கணிசமான அளவு விற்பனை நடக்கிறது அதுவும் பாதி அளவிற்கு ரொக்கத்திற்கும்  பாதி அளவிற்கு கடனுக்கும் பொருட்கள் விற்கின்றன. இந்த மாதமும் போதிய அளவு அதாவது  தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான செலவுகளை அதிலிருந்து எடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த மாதத்திற்கு உண்டான பற்பல அந்த மாதத்திற்கு உண்டான வாடகை சம்பளம் கரண்ட் பில் போன்ற செலவுகளை செய்கிறார்

மூன்றாம் மாதம் முடிவடைகிறது அப்போதும் கணிசமான அளவு விற்பனை நடக்கிறது அப்பொழுதும் நான்கில் மூன்று பங்கு கடனுக்கும் நான்கில் ஒரு ரொக்கத்திற்கும் பொருட்கள் விற்பனையாகின்றன. இந்த மாதமும் போதிய அளவு அதாவது  தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான செலவுகளை அதிலிருந்து எடுக்க முடியவில்லை. கடனாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த மாதத்திற்கு உண்டான பற்பல அந்த மாதத்திற்கு உண்டான வாடகை சம்பளம் கரண்ட் பில் போன்ற செலவுகளை செய்கிறார்.

இதே போன்று நான்காம் மாதமும்,  ஐந்தாம் மாதமும்,  ஆறாம் மாதமும் நகர்கின்றன.

கடனாளி களிடம் இருந்து போதிய அளவு பணம் வசூலிக்க முடியாத சூழ்நிலை.
அப்பொழுது எங்கிருந்தோ வருகிறது ஒரு தொலை பேசி அழைப்பு. அதில் இந்த நபரை ஊக்குவிப்பதற்கான பல வழிகளை கூறிய ஒரு நபர் இறுதியாக அந்த தொலைபேசியை துடிக்கிறார்.

ஒரு புதிய  அத்தியாயத்துடன் தொழில் முனைப்புடன் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன் மீண்டும் வங்கி கடன் பெற்று தொழில் கொண்டன பொருட்களை வாங்கி வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார்.

முன் செய்த தவறுகளை மறந்து முன் செய்த தவறுகளை மறந்து ரொக்க விற்பனையை அதிகரித்து கடன் விற்பனையை குறைத்து வியாபாரம் செய்கிறார். இப்பொழுதும் கணிசமான லாபத்தை அதாவது ஒரு மாதத்திற்கு ஆகக்கூடிய செலவினங்கள் கூட சம்பாதிக்க முடியாத சூழ்நிலை தொழிலில் உருவாகிறது.

இவ்வாறாக ஏழாம் மாதமும் எட்டாம் மாதமும் ஒன்பதாம் மாதம் நகை கின்றன.
இறுதியாக வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது நீங்கள் வாங்கிய வங்கிக் கடனுக்கு உண்டான வட்டியை செலுத்த வில்லை இந்நிலை தொடர்ந்தால் நீங்கள் அடமானம் வைத்திருக்கும் சொத்து ஏலத்தில் விடப்படும் என்று?

பயம் பதற்றம் தடுமாற்றம் ஏமாற்றம் எங்கேயோ நாம் வேலை செய்து கொண்டிருந்தால் கூட மாதம் மாதம் சம்பளம் வரும் என்ற ஒரு எண்ணம்.
யாரிடமும் இதனை சொல்ல முடியாத சூழ்நிலை.இவை ஒழுங்காக தூங்கவிடாமல் வாட்டிக் கொண்டிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நண்பர்களே

வாழ்வில் முன்னேறி காட்டவேண்டும் என்று நினைத்தது இவனுடைய தவறா?

இல்லை செய்துகொண்டிருந்த வேலையை விட்டு வந்தது உன்னுடைய தவறா?

இல்லை வியாபாரம் செய்து ஒரு பெரிய நபராக மாற வேண்டும் என்று நினைத்தது தவறா?

என்பன போல பல கேள்விகள் உங்களுக்குள் எழும்?

அதெல்லாம் சரி இவனை இவரைப்போலவே ஏற்கனவே சந்தையில் இருப்பவர்கள் எவ்வாறு தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள் வியாபாரத்தில் என்று யோசிக்கும்போது அப்போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது அவர்கள் பரம்பரை பரம்பரையாக கடின உழைப்பை போட்டு பல அனுபவங்களை நபர்களிடமிருந்து உறவினர்களிடமிருந்து வாடிக்கையாளரிடம் இருந்து கற்று தேர்ந்து தன் தொழிலை சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர்.

ஒரு வரியில் சொல்ல போனால் மிகுந்த அனுபவம் மட்டுமே இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

ஒருவர் தொழில் அனுபவத்தை இரண்டு வகைகளில் கற்றுத் தருகிறார்.

ஒன்று சுயமாக பெற்ற அனுபவ அறிவு அதற்கு கால அவகாசம் அதிகமாக பிடிக்கும்.

இரண்டு தனது ஆசானிடம் இருந்து பெற்ற பெரும் அனுபவ அறிவு மிகவும் குறைவான கால அவகாசம் மட்டுமே போதுமானது.

எனவே வாழ்க்கையில் போராடும் ஜெயிக்க நினைக்கும் இளைய தலைமுறைகளே எனது அன்பு உள்ளங்களே  போட்டி நிறைந்த இந்த காலத்தில் உங்கள் தொழிலுக்கான அனுபவத்தை ஒரு சிறந்த ஆசான் இடம் இருந்து கற்றுக்கொண்டு பிறகு தொழிலை துவங்குங்கள். இது உங்கள் வாழ்க்கைக்கும் வாழ்க்கை தரத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி  வணக்கம் 🙏.

வாழ்க வளமுடன்.

இப்படிக்கு,
ராஜேஷ்
9003314640
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?