Fixed & Variable Selling price and Business Goals ?நிலையான விற்பனை விலை என்றால் என்ன? (Fixed selling price )மாறுபட்ட விற்பனை விலை என்றால் என்ன? (Variable selling price)
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல், தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்yuuறும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
உங்கள் தொழிலில் நிலையான விற்பனை விலை என்றால் என்ன? (Fixed selling price )மாறுபட்ட விற்பனை விலை என்றால் என்ன? (Variable selling price)இவை அனைத்தும் உங்களின் உங்கள் நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு பாதிக்கின்றன? என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
எந்தவொரு தொழில் நிறுவனமும் அதற்கான இலக்கை தீர்மானித்து அதன் அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கும் போது அது கண்டிப்பாக என்றாவது ஒருநாள் வெற்றியடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அவ்வாறு ஒரு தொழில் இலக்கை நிர்ணயிக்கும் போது அதற்கு துணையாக நிற்பது ஒவ்வொரு பொருளின் விற்பனை விலை, இந்த விற்பனை விலையானது நிலையாக இருக்கும் பொழுது எந்த ஒரு தொழில் நிறுவனமும் தன் இலக்கை அடைவதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக, விற்பனை விலையில் மாறுபாடு ஏற்படும் பொழுது இந்த தொழில் நிறுவனங்கள் தன் இலக்கை அடைவதற்கு சற்று தடுமாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது.
இதற்காக ஒவ்வொரு தொழில் நிறுவனமும் முன்னேற்பாடாக இருக்கும் சூழ்நிலையில், மாறுபட்ட விற்பனை விலையை சமாளிப்பது என்பது மிக மிக எளிதான ஒன்று.
தொழில் நிறுவனங்களுக்கான மாறுபட்ட விற்பனை விலையை சமாளிப்பது எப்படி என்பதை என்பதை தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்பில் விரிவாக பார்ப்போம்.
தற்போது மாறுபட்ட விற்பனை விலையில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.
அவை யாவன?
01. தொழிலின் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலை என்றால் என்ன?
02. தொழிலில் மாறுபட்ட விற்பனை விலை உருவாக காரணங்கள் என்னென்ன?
03. உங்கள் தொழிலில் அதிகம் விற்பனை மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையிலேயே செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை எவ்வாறு அறிவது?
04.உங்கள் தொழிலில் அதிகம் மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையிலேயே செயல்பட்டு கொண்டிருக்கும்போது அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது?
05. மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையில் உங்கள் தொழில் செல்லும் பொழுது அதற்குண்டான நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு மாற்றியமைப்பது?
என்பது போன்ற பல முக்கிய கூறுகளை இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
01. தொழிலின் நிலையான மற்றும் மாறுபட்ட விற்பனை விலை என்றால் என்ன?
தொழில் நிறுவனங்களின் இலக்கை அடைவதற்கான ஒரு குறிப்பிட்ட பொருளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி அதனை நிலையான ஒரு குறிப்பிட்ட விலைக்கு தொடர்ச்சியாக விற்று வருவதை நிலையான விற்பனை விலை என்று கூறப்படுகிறது. அவ்வாறு இல்லாது விற்பனை விலையில் கால சூழ்நிலைக்கு ஏற்றார் போல விலையில் மாறுபாடு ஏற்படும் போது அதனை மாறுபட்ட விற்பனை விலை என்று கூறுகிறோம்.
02. தொழிலில் மாறுபட்ட விற்பனை விலை உருவாக காரணங்கள் என்னென்ன?
02A. தொழில் போட்டி இன் காரணமாக நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வழங்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. போட்டியா விளக்கு ஏற்றாமல் தனித்தனி விலையை ஏற்றி இறக்கி தன் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக தனது பொருளின் விற்பனை விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
02B. மூலப் பொருள்களின் மீது ஏற்படும் விலை மாற்றம், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே எந்த ஒரு நிறுவனமும் வாங்கி விற்க முடியும். அவ்வாறு உற்பத்திப் செய்யப்படும் பொருளுக்கு உண்டான மூலப்பொருள்களின் விலையானது சமநிலையற்ற இருப்பதன் காரணமாக உற்பத்தி பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் உருவாகின்றன இதன் காரணமாக பொருட்களின் விற்பனை விலையில் மாறுபாடு அடிக்கடி ஏற்படுகிறது.
இவ்வாறு மேலும் பல காரணங்களை, மாறுபட்ட விற்பனை விலைக்கு உதாரணமாக நாம் கூற முடியும்.
03. உங்கள் தொழிலில் அதிகம் விற்பனை மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையிலேயே செயல்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை எவ்வாறு அறிவது?
ஒரு தொழில் தனது மாதாந்திர இலக்கை அடைவதற்கான பொருட்களை எண்ணிக்கையில் விற்பனை செய்த பின்னரும், அதில் இருந்து கிடைக்க வேண்டிய மாதாந்திர வருமானம் தன் இலக்குகளின் கணக்குகளின் அடிப்படையில் இல்லாது சற்று குறைவாக இருக்கும் சூழ்நிலையில் இங்கே மாறுபட்ட விற்பனை விலை நடந்துகொண்டிருக்கிறது என்பதை மறைமுகமாக தொழில்முனைவோருக்கு தெரிவிக்கிறது.
04.உங்கள் தொழிலில் அதிகம் மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையிலேயே செயல்பட்டு கொண்டிருக்கும்போது அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது?
ஒரு தொழிலின் மொத்த விற்பனையில் 25 % சதவிகிதத்திற்கு உள்ளாக மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அது அந்த நிறுவனத்தின் இலக்கிய இலக்கை அடைவதில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது.
மாறாக 25 % சதவீதத்திற்கு மேல் மாறுபட்ட விற்பனை விலை நிலவுகின்ற சூழ்நிலையில் அது தன் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.
இந்த சூழ்நிலை நிறுவனத்தின் இலக்கை சற்று மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
05. மாறுபட்ட விற்பனை விலையின் அடிப்படையில் உங்கள் தொழில் செல்லும் பொழுது அதற்குண்டான நிறுவனத்தின் இலக்கை எவ்வாறு மாற்றியமைப்பது?
இவ்வாறாக ஒரு தொழிலில் மாறுபட்ட விற்பனை விலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நிறுவனத்திற்கான ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விற்பனைப் பொருள் இன் எண்ணிக்கை இலக்கை அடையும் லாபத்தின் அடிப்படையில் சற்று மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக