Future vision of the Business.தொழிலின் தொலைநோக்குப் பார்வை என்றால் என்ன?

Story.54. Future vision of the Business.

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலின் தொலைநோக்குப் பார்வை என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

தொழிலின் தொலைநோக்குப் பார்வை அனைத்து தொழில்முனைவோர் ஆளும் பார்க்கக்கூடிய மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றின் அடிப்படையில் மட்டுமே எந்த ஒரு தொழிலிலும்  நிலைத்து நிற்க முடியும்.

இந்த பதிவினை ஒரு  வரலாற்று பதிவுகள் உடன் எடுத்துச் செல்ல விரும்புகிறேன் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

தொலைநோக்கு பார்வை இன் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே, சீனா ஒரு கொள்கையை முன்னெடுத்தது. 

அதாவது,
உலக நாடுகளின் அறிவுசார் தொழில்நுட்பங்களின் மூலம் உருவாக்கப்பட்ட இயந்திரங்களை சீனாவிற்கு இறக்குமதி செய்வது,

அதன் மூலம் மிகப்பெரிய தொழிற்சாலைகளைக் கட்டமைப்பது,

அதன் மூலம் மிகப்பெரும் அளவில் உலகிற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஏற்றுமதி செய்வது,

அதன் மூலம் சீனாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது,

சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவது.

இவற்றைக் கடந்த 20 ஆண்டுகளில் சீனா எவ்வித மாற்றமும் இல்லாமல்,
எவ்வித கவனச்சிதைவும் இல்லாமல் செயல்படுத்துவது என்று முடிவெடுத்தது.

விளைவு
1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா இன்றைக்கு உலக ஏற்றுமதியில் முதலிடம்,
உலக அறிவுசார் சொத்தை உருவாக்குவதில் முதலிடம், GDP USD  - 13000 பில்லியன்,
பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதம். வேலைவாய்ப்பின்மை 2013- இல் 4.1 சதவிகிதம் 2017-இல் 3.9 சதவிகிதமாக குறைப்பு.
பொதுக்கடன் 16% GDP, அமெரிக்காவிற்கும், சீனாவிற்குமான வர்த்தக ஏற்றுமதி,
இறக்குமதி சமநிலை 2013-இல் மநஈ 259 பில்லியனில் இருந்து 2017-இல் USD 419 பில்லியனாக அதிகரிப்பு.
அப்படி என்றால் அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி குறைந்ததுள்ளது; சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி மிகவும் அதிகரித்திருக்கிறது.
இது எப்படி நடந்தது?

இதெல்லாம் ஒரு நாளில் நடக்கவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தொலைநோக்குப் பார்வையின் விளைவாக உருவானது.

மேற்கூறிய கதையில் உள்ள கூற்றுப்படி உங்கள் தொழிலுக்கான அடுத்த பத்தாண்டுக்கு தேவையான தொலைநோக்குப் பார்வையை உருவாக்கி அதன் அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால் மட்டுமே உங்கள் தொழிலை தலைமுறை தலைமுறை தாங்கும் என்பது அடித்து கூறப்பட்ட உண்மை.

இதில்,

01. தொழில்களின் தொலைநோக்கு பார்வை என்றால் என்ன?

02. தொலைநோக்குப் பார்வையில் முக்கிய கூறுகள் என்னென்ன?

03. எந்தெந்த தொழிலுக்கு தொலைநோக்குப் பார்வை முக்கியமானது?

04. தொலைநோக்குப் பார்வையில் நன்மைகள் என்னென்ன?

05. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த தொலைநோக்கு பார்வை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?

என்பது போன்ற பல முக்கிய கூறுகளை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. தொழில்களின் தொலைநோக்கு பார்வை என்றால் என்ன?

ஒரு தொழிலைத் தொடங்கி குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து தொடங்கப்பட்ட தொழிலின் நிலை என்னவாக இருக்கும் என்பதை, தொழிலைத் தொடங்கிய ஒரு சில ஆண்டுகளில் முன்கூட்டியே கணிப்பதை தொழில்களின் தொலைநோக்கு பார்வை என்று கூறலாம்.

02. தொலைநோக்குப் பார்வையில் முக்கியக் கூறுகள் என்னென்ன?

தொழில்களுக்கு தேவையான தொலை நோக்கு பார்வையின் பொதுவான சில கருத்துக்களை கீழே கூறியிருக்கிறேன் அவற்றை கவனியுங்கள்.

அடுத்த பத்தாண்டுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திருப்தியான வாடிக்கையாளர்களை உருவாக்குவது.

காலத்திற்கு ஏற்றார்போல் விற்பனைப் பொருட்களின் தரத்தையும் வடிவமைப்பையும் மாற்றி வாடிக்கையாளர்களை ஈர்ப்பது.

விலை குறைவானதும் தரத்திலும் மேம்பட்டது மான பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது.

வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்கும் பொருட்கள்  மீது சலிப்பு தட்டாத அளவிற்கு உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்களின் சாராம்சங்களை மாற்றிக் கொண்டே இருப்பது.

03. எந்தெந்த தொழிலுக்கு தொலைநோக்குப் பார்வை முக்கியமானது?

எந்தெந்த பொருட்களை சிரமமில்லாமல் விற்க முடிகிறதோ, அந்தப் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு தொலைநோக்குப் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

04. தொலைநோக்குப் பார்வையில் நன்மைகள் என்னென்ன?

தொலைநோக்கு பார்வையும் மூலம் நிறுவனத்திற்கு பலவித நன்மைகள் இருக்கின்றன அவற்றில் ஒரு சிலவற்றை கீழே பார்ப்போம்.

நிறுவனத்திற்கான மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான லாபம்

நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பல ஆண்டுகளுக்கு தொடர்வது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு.

நிறுவனத்திற்கான ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட அடையாளம்.

05. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த தொலைநோக்கு பார்வை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்?

பெரிய தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடுத்த 10 அல்லது 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வைக்கான திட்ட அறிக்கையை தயார் செய்கின்றனர்.

அவரை தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகள் கழித்து நிறுவனம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியுமா இல்லையா என்பதை யூகிக்கின்றனர்.

லாபமாக இருக்கும் சூழ்நிலையில் அவர்களது தொழிலை தொடர்ந்து நடத்துகின்றனர். மாறாக நட்டம் ஏதும் தென்படும் சூழ்நிலையில் நிறுவனத்தை சுலபமாக மற்றவர்களிடம் விற்று விட்டு செல்கின்றனர்.


🙏 நன்றி வணக்கம்.🙏

🎯 இரண்டு மணி நேர இலவச தொழில் முனைவோர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே  உள்ள விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பை தொடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdYvus06_Wi-Fr5WM-X2XmHi6QMm3UFeUO7IQJMIvvngoQ6Yg/viewform

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?