How to Became a Best sales Man?ஒரு சிறந்த விற்பனையாளர் ஆக மாற என்ன செய்ய வேண்டும்?

Story 21.How to Became a Best sales Man?

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து  பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

உங்கள் தொழிலில் நீங்கள் பிற்காலத்தில் ஒரு சிறந்த விற்பனையாளர் ஆக மாற என்ன செய்ய வேண்டும்?  என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் வாருங்கள் போகலாம்.

ஒரு படிப்பை முடித்தோம் அந்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. எனவே கிடைத்த சேல்ஸ்மேன் வேலைக்கு காலையில் சென்றோம்  ஈவினிங் மேல இருக்கு ரிப்போர்ட் அனுப்பிவிட்டு வீட்டுக்கு திரும்பினோம்,

மற்றும் படிப்பை முடித்தோம் ஏற்ற வேலை கிடைக்கவில்லை பின்பு  ஒரு தொழிலைத் தொடங்கி வரும் வாடிக்கையாளர்களை வைத்து தொழில் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

என்று இல்லாமல் இது தான் நம் வாழ்க்கை இதுதான் நம் எதிர்காலம் இதுதான் என்  எதிர்கால மூச்சு  என்ற கூற்றுக்கு இறங்கிய வண்ணம் ஒரு முனைப்புடன் செயல்பட்டு தன் தொழிலில் வெற்றி காண்பவர் வெறும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கின்றன.

எந்த ஒரு தொழிலையும் ஆழம் உள்ளதாகவும்,  அர்த்தமுள்ளதா கவும்,  காலத்திற்கு ஏற்றார்போல் புதிப்பிக்க தெரிந்ததாகவும்,  இருக்கும் போது அந்த தொழிலில் சிறந்து விளங்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

ஒரு சிறந்த விற்பனையாளரின் தினசரி நடவடிக்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்று என்பதை இந்த பதில் பார்ப்போம் வாருங்கள் பதிவுகள் போகலாம்.
அவையாவன,

01. விற்பனைப் பொருள்களின் பொருட்களைப் பற்றிய குறிப்பெடுத்தல்.

02. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்தல்.

03. விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான கூடுதல்  பொருட்களின் விவரங்களை சேகரித்தல்.

04. ஒவ்வொரு பொருட்களின் மாறுபட்ட பயன்பாடுகளை ஆராய்தல்.

05. வாடிக்கையாளர்களின் இடையேயான உறவை மேம்படுத்துதல்.

06. விற்பனைப் பொருட்கலுக்காண மாறுபட்ட விலை விவரங்களை  அறிந்து வைத்திருத்தல்.

07. வாடிக்கையாளரிடம் இருந்து வரவேண்டிய வரவுகளைஆராய்ந்து அறிதல் மற்றும் குறிப்பெடுத்தல்.

08. புதிய வாடிக்கையாளர்களின் பல கேள்விக்கான பதில்களை பொறுமையாகவும் அன்புடனும் பதில் அளித்தல்.

09. பொருட்களின் விற்பனை விலைப் பட்டியலை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் தயாரித்து வெளியிடுதல்.

10. பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு சரியான நேரத்தில் சரியான பதில் அளித்தல்.

11. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடத்தல்.

இவரகக மற்றும் பல விஷயங்களை கீழே விவாதிக்க உள்ளோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

முதலில் நாம் பார்க்க இருப்பது.

01. விற்பனைப் பொருள்களின் பொருட்களைப் பற்றிய குறிப்பெடுத்தல்.

ஒரு சிறந்த விற்பனையாளர் தினந்தோறும் தன் தொழிலில் விற்பனையாகாத பொருள்களின் எண்ணிக்கையை ஆராய்ந்து அறிய வேண்டும்.

ஒரு தொழிலில் விற்பனையாகாத பொருட்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரிந்தால் மட்டுமே அதனை விற்க என்ன செய்ய வேண்டும் என்று மனம் யோசிக்கும்.

அவ்வாறு இல்லாது வரும் விற்பனை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனதுடன் இருந்தால் நிறுவனத்தின் இலக்கு மற்றும் விற்பனை என்பது சற்று தாமதமாக ஒரு ஆமை போல தான் செயல்படும்.

02. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்தல்.

உயிர்த்த புதிதாக தொழில் தொடங்கிய அல்லது புதிய நிறுவனத்தில் விற்பனை பணிக்கு சேர்ந்த அவர்களின் தினசரி பணியில் ஒன்றாக அவர்களின் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிப்பது இருக்க வேண்டும்.

இவ்வாறான வாடிக்கையாளரின் விவரங்களைச் அதிகரித்தால் மட்டுமே இருக்கும் வாடிக்கையாளர்களை வைத்து இருக்கும் பொருள்களை எந்த டிஸ்கவுண்ட் விலையில் விற்க முடியும் என்பதை பற்றி விவாதிக்க முடியும்.

ஒரு சிறந்த விற்பனையாளர் தனது முழு முயற்சியை 100% போடுகிறான் என்றால் அதிலிருந்து கிடைக்கும் பயன்கள் பத்திலிருந்து இருபது 10 to 20%வரை மட்டுமே இருக்கும்.

03. விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கான கூடுதல்  பொருட்களின் விவரங்களை சேகரித்தல்.

விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் பொருட்களுக்கான தேவை கண்டிப்பாக இருக்கும் அந்தத் தேவையை குறிப்பு எடுப்பதன் மூலம் தனது வாடிக்கையாளர்களின் மற்ற தேவைகளை உடனுக்குடன் அல்லது சிறிய நாட்கள் சிறிது நாட்கள் கழித்தோ பூர்த்தி செய்ய முடியும்.

உதாரணமாக சொல்லப்போனால் ஒரு வாடிக்கையாளர் புது மொபைல் போன் ஒன்றை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம் அந்த மொபைல் போனுக்கான பின்பக்கக் கவர் மற்றும் ஏற்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் இவ்வகையான பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே பொருட்களை விற்கும் பொழுது அந்த வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்கும் போது விற்பனை இல்லாத சூழ்நிலையில் அவர்களின் அவர்களை தொடர்பு கொண்டு அந்த பொருட்களை விற்பதற்கான பல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

04. ஒவ்வொரு பொருட்களின் மாறுபட்ட பயன்பாடுகளை ஆராய்தல்.

விற்பனை செய்யப்படும் எந்த ஒரு பொருட்களுக்கும் மாறுபட்ட பயன்பாடு என்பது கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது.அவை என்னென்ன என்பதை விற்பனையாளர் ஆராய்ந்து அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்போதுதான்  வாடிக்கையாளர் கேட்கும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடியும்.

05. வாடிக்கையாளர்களின் இடையேயான உறவை மேம்படுத்துதல்.

விற்பனைக்கு சென்றோம் ஒரு பொருளை விற்றோம் அந்தப் பொருளுக்கு உண்டான பணத்தை வாங்கினோம் என்று இல்லாமல் விற்பனையாளர் அவருக்கும் அவரின் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது மிகவும் விற்பனைக்கு மிகவும் சிறந்தது.

உதாரணமாக விழாக்காலங்களில் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மடல்களை அனுப்புவது.

வாழ்க்கையின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளை பங்கெடுத்தது கொள்வது.

விற்பனையை தவிர்த்து மற்ற வகையில் உதவிகரமாக இருப்பது. மற்றும் பலவற்றை உதாரணமாகக் கூறலாம்.

06. விற்பனைப் பொருட்கலுக்காண மாறுபட்ட விலை விவரங்களை  அறிந்து வைத்திருத்தல்.

எந்த ஒரு விற்பனைப்  பொருளும் அதன் உச்சபட்ச லாபத்தை வைத்து விற்பதையே  எந்த ஒரு விற்பனையாளர் விரும்புவார்.

போட்டியாளர்கள் அதிகம் உள்ள காலங்களில் இந்த விற்பனையாளர் விற்பனை விலை ஆனது மாறுபட்டு காணப்படும். அவ்வாறாக தனது வாடிக்கையாளர் அந்த விலையை அறிந்து அவற்றை நம்மிடம் முன்வைக்கும் போது அவருக்கு நாம் என்ன விலை கொடுக்கலாம்? என்பதை ஒரு விற்பனையாளர் முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அவ்வாறு அவர் கேட்கும் பொழுது விற்பனை விற்பனையாளர் விற்பனை விலையை எடுத்துரைப்பதில் எந்த தடுமாற்றமும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

07. வாடிக்கையாளரிடம் இருந்து வரவேண்டிய வரவுகளைஆராய்ந்து அறிதல் மற்றும் குறிப்பெடுத்தல்.

ஒவ்வொரு கடன் விற்பனையும் போதும் கடனுக்கு பொருளை வாங்கி செல்லும்  வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நாளை குறிப்பிடுவார்கள். அதனை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு அந்த நாள் நெருங்கும் போது அல்லது அந்த நாள் வரும்போது சரியாக அவர்களுக்கு ஞாபகப்படுத்தி அந்தப் பொருள் விற்பனை பொருள் கொண்டது பணத்தைப் பெறுவது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

08. புதிய வாடிக்கையாளர்களின் பல கேள்விக்கான பதில்களை பொறுமையாகவும் அன்புடனும் பதில் அளித்தல்.

முதல் முதல் ஒரு வாடிக்கையாளர் வியாபார நிறுவனத்திற்கு வந்து பொருளைப் பற்றியோ அல்லது அவரின் தேவையைப் பற்றியோ பலவித கேள்விகளை கேட்கும் போது ஒரு விற்பனையாளர் அவர்களுக்கு புரியும்படி நிதானமாகவும் பொறுமையாகவும பொறுப்புடனும் நிதானத்துடனும் பதில் அளிக்க வேண்டியது ஒவ்வொரு விற்பனையாளரின் முதன்மையான பணியாக கருதப்படுகிறது.

ஏனென்றால் பல பழைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு இருக்கும்போதிலும் புதிய வாடிக்கையாளர்களின் வருகை  மட்டுமே ஒரு  தொழிலை திறம்பட நடத்துவதற்கு உதவிகரமாக இருக்கும்.

09. பொருட்களின் விற்பனை விலைப் பட்டியலை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் தயாரித்து வெளியிடுதல்.

பொருட்களுக்கான விற்பனை விலை பட்டியல் என்பது வாங்க வரும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். ஒரு பொருளை வாங்க வரும் புதிய வாடிக்கையாளர் அந்த பொருளுக்கான விலையை பற்றி 10 இடங்களில்  விசாரித்து விட்டு வாங்குவார் தவிர  டபார்னு வந்து ஒரு பொருளை  வாங்கிட்டு போக மாட்டார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று.

இந்த சூழ்நிலையில் உங்களின் விற்பனை விலை பட்டியல் பத்துல ஒன்னு 11 போல இல்லாமல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.

10. பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு சரியான நேரத்தில் சரியான பதில் அளித்தல்.

ஒரு பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அந்த பொருளை பயன்படுத்துவதிலும்,   அதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதிலும்,  துவக்க காலத்தில் பல இடர்பாடுகளை சந்திக்கிறார். அதனை உடனுக்குடன் விற்பனையாளர் அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். அவ்வாறு தீர்த்து வைக்கும் பொழுது விற்பனையாளர் மீதும் விற்பனை நிறுவனத்தின் வீதம் ஒரு பற்றுதல் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

11. விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடத்தல்.

ஒரு பொருளைப் பற்றிய முழு விவரங்களை வாடிக்கையாளர் முன்பே அறிந்து வைத்திருந்து பின்பு அந்தப் பொருளை வாங்குவது விற்பனை என்று கூறப்படுகிறது.

ஒரு பொருளைப் பற்றி வாடிக்கையாளர் அறியாமல் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் தேவையை அறிந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பொருளை வாங்குவது சந்தைப்படுத்துதல் என்று கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு புதிய பொருட்களை அறிமுகப்படுத்தி அந்த பொருளை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து அதன் மூலம் தனது வியாபாரத்தை அதிகரிக்க செய்வது ஒரு தலைசிறந்த விற்பனையாளரின் விற்பனையாளருக்கு அழகு
🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?