How to find out your business going to downhill?உங்கள் தொழில் கீழ் நோக்கு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Story.50.How to find out your business going to downhill?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழில் கீழ் நோக்கு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

வழக்கம்போல் இந்த பதிவினை சிறு கதையுடன் துவங்க இருக்கிறேன் வாருங்கள் போகலாம்.

மருத்துவத்துறையை போலவே தொழில்துறையிலும் அறிவியல் முறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் தொழில் தன் வெற்றிப் பாதையை விட்டு நகர்கிறது என்பதை அவ்வளவு எளிதாக யாராலும் கண்டுபிடிக்க இயலாது. ஏனென்றால் இது மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட வாடிக்கையாளர் மனநிலையைப் பொருத்து அமைகிறது.

வருடந்தோறும் நல்ல லாபத்தில் இயங்கி வரும் தொழிலை திடீரென்று மூடிவிட்டு செல்வதற்கும், அல்லது வேறு ஒரு நபரிடம் தொழிலை  விற்று செல்வதற்கும் எதிர்காலத்தை நோக்கிய பல நுண்ணிய அறிவு மற்றும் ஆராய்ச்சிகள் மற்றும் எதிர்கால சிந்தனைகள் உதவிகரமாக இருக்கின்றன.

இவ்வாறாக ஒரு தொழிலை 10 வருட காலம் தொடர்ந்து நடத்தி பெரும் லாபத்தை விட அந்தத் தொழிலை மற்றவர்களிடம் விற்கும்போதோ அல்லது மூடிவிட்டு செல்லும் பொழுது கிடைக்கும் லாபமானது அதிகமாக இருக்கும் இருக்கும் சூழ்நிலைகளில் தொழிலின் உரிமையாளர்கள் இவ்வாறு தங்கள் நிறுவனத்தை விற்று விட்டு செல்கின்றனர். ஏனோ இதைப் பற்றி ஆழ்ந்த  சிந்தனை இல்லாத பல நபர் இறுதிவரை தனது தொழிலின் நட்டத்தை சந்தித்து தானும் நான் நஷ்டமடைந்து அவர்களின் வாழ்க்கையும் வீணாக்கி கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே ஒரு பதில் மட்டுமே என்னிடம் இருந்து நீங்கள் பெற முடியும். தொழிலின் மேலாண்மை திறமை சரியாக இல்லாதது மட்டுமே.

சரி வாருங்கள் பதிவிற்குள் சென்று தொழில் எந்த எந்த காரணத்திற்காக கீழ்நோக்கு பாதையில் செல்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தொழில் கீழ்நோக்கு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கு இது போன்று பல வகையான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒரு சில சிலவற்றை நாம் கீழே பார்ப்போம்.

01. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள விற்பனைப் பொருட்களை அல்லது உற்பத்தி பொருட்களை அவற்றுக்கான தேவை மற்றும் பங்களிப்பை முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் தொழிலை தொடங்குவது.

02. பற்பல போட்டியாளர்கள் போட்டியாளர்கள் கிடையே உங்களது வாடிக்கையாளர்களை சரிவர திருப்தி படுத்தாமல் இருப்பது.

03. அதிகரித்துவரும் போட்டியாளர்களுக்கிடையே தனது தொழிலை தனித்துவம் வாய்ந்த முற்று உரிமையாளராக மாற்றிக்கொள்ள தெரியாமல் இருப்பது.

04. தொழில் நிறுவனங்கள் வங்கி கடன் தேவைப்படுகிறதா இல்லையா என்று தெரியாமல் தேவையற்ற வங்கிக் கடன்களை வாங்கி குவிப்பது.

05. பல போட்டிகள் நிலை வரும் சூழ்நிலையில் உங்கள் நிறுவனத்திற்கு திறமையற்ற பணியாளர்களை கொண்டிருப்பது.

06. உங்களது தொழில் போக்கையும் மாற்றத்தை போட்டியாளர்களின் போக்கையும் ஆழ்ந்து அறியாமல் இருப்பது.

இவைகளில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள விற்பனைப் பொருட்களை அல்லது உற்பத்தி பொருட்களை அவற்றுக்கான தேவை மற்றும் பங்களிப்பை முழுமையாக ஆராய்ச்சி செய்யாமல் தொழிலை தொடங்குவது.

தொழில் ஒவ்வொரு விற்பனை பொருளும் ஒவ்வொரு தனிப்பட்ட லாபத்தை கொண்டிருக்கும்.

அதிக அளவு லாபம் கொண்ட பொருள்கள். மிதமான  லாபம் கொண்டபொருட்கள்.
குறைவான  லாபம் கொண்ட பொருள்கள்.

என ஒவ்வொரு தொழில் விற்பனைப் பொருள்களின் லாபம் மாறுபட்டு இருக்கின்றன. அதிகமாக லாபம் கொண்ட பொருட்கள் சற்று குறைவாக விற்பனை ஆவதும்,  குறைவான லாபம் கொண்ட பொருட்கள் சற்று அதிகமாக விற்பனை ஆவதும்,  எந்த தொழிலும் சகஜமான ஒன்று!

இவ்வாறு தொழில்முனைவோர் குறைவான லாபம் கொண்ட பொருட்களை நோக்கத்திற்கு விற்றால் பரவாயில்லை, ஆனால் மாறாக லாபம் குறைவாகவும் கடனுக்கும் விற்கும் சூழ்நிலையில்  இங்கு அவர் தன் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு உண்டான தொகை கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது இந்த சூழ்நிலையில் இவர் வங்கிகளை நாடுகிறார்.

இங்கு சற்று ஆழ்ந்து யோசித்தால் உங்களுக்கு உங்களுக்கே புரியும் நண்பர்களே லாபம் குறைந்த பொருட்களை விற்கும் பொழுது மிகவும் குறைவான எண்ணிக்கையில் நீங்கள் கடன் விற்பனை செய்யும் பொழுது  உங்களின் லாபம் முழுக்க முழுக்க அந்த குறைவான எண்ணிக்கை உள்ள கடனாளிகள் இடம் மாட்டிகொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை நீங்கள் நீங்களும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

02. பற்பல போட்டியாளர்கள் போட்டியாளர்கள் கிடையே உங்களது வாடிக்கையாளர்களை சரிவர திருப்தி படுத்தாமல் இருப்பது.

ஏனோ இன்றளவும் பல தொழில்கள் தனது வியாபார பொருட்களையோ, உற்பத்தி பொருட்களையோ, நாடிவரும் வாடிக்கையாளர்களை முழு அளவில் திருப்தி படுத்த முனைவதில்லை. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள்  நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதுபோல பற்பல மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஒருமுறை தன் தொழில் நிறுவனத்தை நாடிய வாடிக்கையாளர்களை வாழ்நாள் முழுவதும் வாடிக்கையாளர்களாக தக்கவைத்துக் கொள்ள எந்த ஒரு தொழிலும் தற்காலத்தில் முனைப்பாக இருப்பதில்லை. மாறாக அவரிடம் பெரும் லாபத்தை மட்டும் பெற்று அவர்களை முழு மொட்டை அடிக்கவே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய போக்கு எந்த தொழில் நிறுவனத்தையும் சரியாக வளர்ப்பது இல்லை என்பதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் அறிந்து வைத்திருக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

03. அதிகரித்துவரும் போட்டியாளர்களுக்கிடையே தனது தொழிலை தனித்துவம் வாய்ந்த முற்றுரிமையாளராக மாற்றிக்கொள்ள தெரியாமல் இருப்பது.

ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையையோ ஒரு குறிப்பிட்ட பகுதியில்  ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதை முற்றுரிமை  தொழில்கள் என்றழைக்கப்படுகின்றன.

நம் தாத்தா பாட்டி காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் வாங்க வேண்டும் என்றால் அந்தப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே கிடைக்கும்.
மளிகை பொருட்களுக்கு ஒரு ஒரு கடை சமையல் எண்ணிக்கை ஒரு கடை
மரச்சாமான்களை ஒரு கடை
நெல் அரைக்க ஒரே ஒரு ரைஸ்மில்
இதை போன்ற ஒரு பகுதியில் ஒரு சாவை ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே இருப்பது முற்றுரிமை என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் அந்த காலத்தில் தொழில் போட்டி என்பது அந்த அளவு கிடையாது பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை திறம்பட நடத்தி வந்தனர்.

ஆனால் இப்பொழுது அவர்களை ஒரு சிறிய பானிபூரி கடையை எடுத்து கொண்டால் கூட அதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சூழ்நிலையில் தன் தொழிலுக்கு தேவையான வாடிக்கையாளர்களை நம்மிடம் இருந்து செல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளை வாடிக்கையாளர் வாங்க நினைத்தால் அடுத்து அவர்களே அவர் நினைவில் வருவது நம் தொழிலாக இருக்க  வேண்டும் அந்தஅளவிற்கு ஒரு மதிப்பை வாடிக்கையாளர் இடையே உருவாக்க வேண்டியது நமது அத்தியாவசிய கடமையாக இருக்கிறது.

04. தொழில் நிறுவனங்கள் வங்கி கடன் தேவைப்படுகிறதா இல்லையா என்று தெரியாமல் தேவையற்ற வங்கிக் கடன்களை வாங்கி குவிப்பது.

உங்கள் தொழிலுக்கான சரியான திட்டமிடல் இருக்கும்போது முதன்முதலில் தொழில் தொழில் இடப்படும் முதலீட்டுத் தொகையே போதுமானது அதை நாம் சரியாக நிர்வாகம் செய்தாலே  வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இங்கே சற்று ஆழ்ந்து யோசித்தால் உங்கள் நிறுவனத்தில் விற்கப் படும் பொருட்களுக்கு உண்டான பணத்தை லாபத்துடன் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் பெரும்பொழுது அதில் நீங்கள் முதலீட்டை தொகையும் அதற்குண்டான லாபமும் மீண்டும் உங்கள் கையில் கிடைக்கும். லாபத்தை மட்டும் எடுத்து வைத்து விட்டு மீண்டும் அந்த முதலீட்டை தொழிலில் முதலீடு செய்யும் பொழுது இங்கே வங்கிக்கடன் என்ற ஒன்று தேவையற்றது. ஆனால் நாம் இவற்றை சரிவர மேலாண்மை செய்யாமல் பொருட்களை கடனுக்கு விற்றுவிட்டு மீண்டும் தொழிலை நடத்துவதற்கு வங்கிக் கடன் வாங்குவது என்பது ஒரு பெரு முட்டாள்தனம் என்று மட்டுமே நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

இவ்வாறான வங்கிக் கடனும் அதற்குண்டான வட்டியும் நடத்திவரும் தொழிலுக்கு மேலும் மேலும் சுமையை ஏற்படுத்தி வருமே தவிர ஒருபோதும் லாபகரமாக இருக்காது.

05. பல போட்டிகள் நிலவிவரும் சூழ்நிலையில் உங்கள் நிறுவனத்திற்கு திறமையற்ற பணியாளர்களை கொண்டிருப்பது.

தகுதி வாய்ந்த தொழிலாளர்களை சரியான இடத்தில்  பணியமர்த்தல் என்பது ஒவ்வொரு  தொழில் முனைவோருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான திறமைகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் திறமை என்பது மாறுபடுகிறது. அவையாவன,

5A. பேச்சுத் திறமை,
5B. உற்பத்தி நுணுக்கத்தில் திறமை,
5C. மேலாண்மை திறமை,
5D. கணக்கியல் திறமை,
6E.எதிர்கால திட்டமிடுதல் திறமை,

இதெல்லாம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,

தன் பேச்சுத் திறமையால் மக்கள் இருப்பவர்கள் தனது வேலையை ஒழுங்காக செய்வதில்லை.

அதேபோல் தன் வேலையை ஒழுங்காக செய்பவர்கள் அதிகம் பேசுவதில்லை.

இவ்வாறாக பல வகை திறமை பலவகை மக்களிடையே பரந்து விரிந்து காணப்படுகிறது. உங்கள் தொழிலுக்கு எந்த திறமை வாய்ந்த மக்கள் தேவைப்படுகிறார்கள் என்று தேர்ந்தெடுப்பது உங்களின் உங்களது தலையாய கடமையாக இருக்கிறது.

06. உங்களது தொழில் போக்கையும் மாற்றத்தை போட்டியாளர்களின் போக்கையும் ஆழ்ந்து அறியாமல் இருப்பது.

தொழிலில் லாபம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நடத்திவரும் தொழில் போக்கையும் வாடிக்கையாளர் கோப்பையும் போட்டியாளர்களின் போக்கையும் பற்றி சிந்திப்பது ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் தலையாய கடமையாக இருக்கிறது. ஏனென்றால் நடத்திவரும் தொழில் எந்த காலம் வரை செல்லப் போகிறது என்பது மேலே கூறப்பட்ட மூன்றின் அடிப்படையில் அமைகிறது. எனவே ஒவ்வொரு தொழிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே தொழிலில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஒவ்வொரு தொழில் முனைவோரும் எதிர்பார்க்க முடியும் அவ்வாறு வருமானம் இல்லாத சூழ்நிலையில் தொழில் முனைவோரும் தொழிலும் என்ன ஆகும் என்று தொடக்க காலத்திலிருந்தே ஆராய்ந்து அறிவது மிக சிறப்பான ஒன்றாகும்.

🏅 நீ சாதித்துவிட்டாய்!

ஏனென்றால்

நீ சாதிக்க பிறந்தவன்!🏅

மேற்சொன்ன  பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.


🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?