Landing cost and selling price?தொழிலில் விற்கும் பொருட்களின் தரையிறங்கும் செலவு மற்றும் விற்பனை விலை போன்றவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Story 16. Landing cost  and selling price?

எந்த ஒரு தொழிலும் ஆர்வமுள்ளதாகவும்,  ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும்,  காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும்,  இருக்கும் போது இன்னும்  சிறப்பாக செயல்பட முடியும்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் தொழிலில் விற்கும் பொருட்களின் தரையிறங்கும் செலவு மற்றும் விற்பனை விலை போன்றவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வாங்க பதிவுக்கு போகலாம்.

01.தரை இறங்கும் செலவு என்றால் என்ன?.

02. தரையிறங்கும் செலவில் வரும் முக்கிய காரணங்கள் எவை எவை?

03. தரையிறங்கும் செலவை எவ்வாறு கணக்கிடுவது?

04. தரையிறங்கும் செலவிலிருந்து லாபத்தை எவ்வாறு நிர்ணயம் செய்வது?

என்பது போன்ற பல விஷயங்களை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

அவற்றில் முதலாவதாக.

01.தரை இறங்கும் செலவு என்றால் என்ன?.

விற்பனைத் தொழிலோஅல்லது உற்பத்தி தொழிலோ அந்த தொழிலுக்கு உண்டான விற்பனைப் பொருளோ அல்லது உற்பத்தி பொருளோ அதனுடைய விற்பனை இடத்திற்கோ அல்லது உற்பத்தி செய்யும் இடத்திற்கு வந்து இறங்குவதற்கான ஆகும் மொத்த மொத்த செலவை (landing  cost)அவற்றின் தரையிறங்கி செலவு என்று தொழிலில் கூறப்படுகிறது. இந்த தரையிறங்கு செலவின் அடிப்படையில் மட்டுமே எந்த ஒரு விற்பனை  நிறுவனமோ அல்லது உற்பத்தி   நிறுவனமோ செயல்படுகிறது. மேலும் இந்த செலவுகளின் அடிப்படையிலேயே அந்தந்த தொழில் நிறுவனத்தின் லாபம் அமைந்துள்ளது.

இவ்வாறாக எந்தவகை செலவுகளை தொழில்நிறுவனங்கள் சந்திக்கின்றன மேலும் எவ்வாறு தொழில் நிறுவனம் தன் நிறுவனத்தின் இலக்கை அடைய இது உதவிகரமாக இருக்கிறது.

02. தரையிறங்கும் செலவில் வரும் முக்கிய காரணங்கள் எவை எவை?

விற்பனை பொருளை தனது கடனீந்தோர் இடம் இருந்து வாங்கி அதனை தன் வியாபார இடத்திற்கு கொண்டு வரும் பொழுது இடையில் நடைபெறும் பலவித செலவுகளை நாம் இங்கே பதிவிட்டு பார்க்க முடியும்.
அவை

2A. பொருட்களை கையாளுவதற்கான   கட்டணம்
2B. ஏற்று மற்றும் இறக்கு கூலி
2C. வண்டி வாடகை
2D. இடைத்தரகு

மேலும் பல செலவினங்களை ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ற அதுபோல நாம் இங்கே வகைப்படுத்தவும் வரிசை படுத்த முடியும்.

03. தரையிறங்கும் செலவை எவ்வாறு கணக்கிடுவது?

ஒரு கடனீந்தோர் அவர் தன் விற்கும் பொருளுக்கான விற்பனை விலைப்பட்டியலை தயாரிக்கும் பொழுது அதில் அந்த பொருளுக்கு உண்டான மதிப்பை மட்டுமே பதிவு செய்வார்.
மாறாக மற்ற தரையிறங்கிய செலவினங்களை வாங்குவர் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

இங்கே இந்த பொருளை வாங்குபவர்கள் அந்த பொருளுக்கான விற்பனை மதிப்பு மற்றும் தரையிறங்கு செலவுகளை கூட்டி வாங்கும் பொருட்களின் மொத்த எண்ணிக்கையில் வகுத்தால் ஒவ்வொரு பொருளுக்கான தரையிறங்கு செலவு செலவு என்பது மிகச் சுலபமாகக் கிடைத்துவிடும்.

இவை அனைத்தும் கைவிட்டு எண்ணக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மாறாக அடைக்கப்பட்ட,  மூடப்பட்ட,  பாதுகாக்கப்பட்ட, பொருட்களுக்கு இந்த தரையிறங்கு செலவை கண்டுபிடிப்பது ஒரு சில நிறுவனங்களுக்கு சற்று சவாலாகவே இருக்கின்றது.

இவ்வாறான சவாலான சூழ்நிலைகள் என்னென்ன என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

3A. தொலைதூரத்திலிருந்து பொருட்கள் வாங்கும் சூழ்நிலையில் அந்த பொருள்களுக்கான வண்டி வாடகை மற்ற வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது இவற்றைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

3B. வண்டி வாடகை முன்கூட்டியே கடனீந்தோர்  கணக்கில் வரவு வைப்பதும் சற்று குழப்பமான சூழ்நிலையை தொழிலில் உருவாக்கிவிடுகிறது.

3C. தொலைதூரத்திலிருந்து வரும் பொருட்களை மாற்ற வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட செலவினங்களுக்கான தொகை மொத்த வாகனத்திற்கும் சேர்ந்தாற்போல் வரும் சூழ்நிலையில் எங்கு சென்றாலும் மாற்றங்களை சந்திக்க நேருகிறது.

இது போன்ற பல காரணங்களை ஒரு பொருளின் தரையிறங்கு செலவில் கண்டுபிடிக்க ஒரு சில வியாபார நிறுவனங்கள் தடு தடு மாறிக் கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றை எவ்வாறு எளிமை படுத்துவது என்பதை பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

04. தரையிறங்கும் செலவிலிருந்து லாபத்தை எவ்வாறு நிர்ணயம் செய்வது?

கடனீந்தோர் கொடுக்கும் விற்பனைப் பட்டியலில் உள்ள பொருட்களுக்கான மொத்தக் கூட்டுத் தொகை பிறகு தரையிறங்க செலவை அனைத்தையும் கூட்டிக்கொண்டு பிறகு வந்து இறங்கும் மொத்த சரக்குகளின் பொருட்களின் எண்ணிக்கையால் வகுத்தால் உங்களுக்கான சரியான தரையிறங்கு விலை என்பது உங்களுக்கு கிடைத்துவிடும். இதன் பின் நீங்கள் உங்கள் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான லாபத்தை அந்த பொருளின் மீது கூட்டிக்கொண்டு பின்பு விற்பனை செய்யலாம்.

ஒரு சில வியாபாரிகள் அவர்தன் கடனீந்தோர் கொடுக்கும் விற்பனைப் பட்டியலில் உள்ள விலையில் இருந்து தனது நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான லாபத்தை அதில் நிர்ணயித்து மட்டுமே பொருட்கள் விற்கின்றனர். இங்கு அவர் செலுத்தும் பொருட்களுக்கான தரையிறங்க சிலவை செலவை இவர் கருத்தில் கொள்வது இல்லை. இத்தகைய ஆன கவனமின்மை காரணமாக ஒரு சில தொழில் நிறுவனங்கள் தன் நிறுவனத்தின் இலக்கை அடைய முடியாமல் நாற்றத்தில் செல்கின்றன நட்டத்தில் செல்கின்றன. இது நான் தான் அது ஏன் என்னுடைய சொந்த அனுபவத்தில் கற்ற ஒரு வகையான பாடமாகவும் இருக்கிறது.

அவ்வாறு இல்லாமல் எந்த ஒரு தொழில் முனைவோரும் ஒரு பொருளுக்கான தரையிறங்கி செலவை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து அதன் பின் தன் நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கான லாபத்தை அதன் மீது வைத்து விற்பனை செய்யும் பொழுது அவர் கண்டிப்பாக தனது நிறுவனத்தின் இலக்கை அடைவர் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.


மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான  கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?