Purchase Return & Sales Return?உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன?
வாழ்க்கையில் நாம என்னதான் சாதிக்கப் போகிறோம் என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
உங்கள் தொழிலில் கொள்முதல் திருப்பம் என்றால் என்ன? விற்பனை திருப்பம் என்றால் என்ன? என்பதைப் பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
ஒரு சிறு கதையுடன் இந்த பதிவை துவங்க இருக்கிறேன், அது என்னவென்றால். நீங்கள் ஏதோ ஒரு பொருளை கடையில் சென்று வாங்கி நினைக்கிறீர்கள், அவ்வாறு கடையில் வாங்கிய பொருளை வீட்டிற்கு வந்து பிரித்து பார்க்கும் பொழுது, அது உங்களுக்கு பிடிக்காதமாறும் மற்றும் பொருத்தமானதாக இல்லை என்பது உங்களுக்கு தெரிய வருகிறது.
இப்போது மறுபடியும் மீண்டும் அந்த கடைக்கு சென்று அந்த பொருளை மாற்ற முன்வருவீர்கள். அவ்வாறு மாற்ற முயலும் போது அந்தப் பொருளை விற்ற கடை கடைக்காரர் புதிதாக வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பது தவிர, உங்களை ஓர் இரண்டாம் பட்ச மூன்றாம் பச்ச வாடிக்கையாளர்களாக மட்டுமே பார்ப்பார்.
அவரும் விற்பனை விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதனை கவனிக்க மாட்டார் என்பது எல்லாரும் அறிந்த ஒன்பது அறிந்த ஒன்று.
இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் வாங்கும் பொருள்ஐ வாங்கும் பொழுது அதனைப் பிரித்து சரிபார்க்க வேண்டியது உங்களது தலையாய கடமை அவ்வாறு சரியாகாத சூழ்நிலையில் உங்களுக்குமிஞ்சியது ஏமாற்றம்
அலைச்சல்
பணவிரயம்
மன உளைச்சல் மற்றும்
அந்த கடையின் மேல் நம்பிக்கை இழப்பு ஆகியவை நடக்கின்றன.
இந்தக் கதையை அப்படியே உங்கள் தொழிலில் ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் விற்பனை செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான மூலப் பொருளை அல்லது விற்பனை செய்யும் பொருட்களை வாங்கும் போது அதனை சரிவர ஆராய்வது உங்களது கடமை.
அவ்வாறு ஆராயாமல் விட்டுவிடும் சூழ்நிலையில் உங்கள் தொழிலின்
மகத்தான நேரம்
பணம் விரயம்
உழைப்பாளர்களின் நேரம்
வாக்காளர்களின் நம்பிக்கை
முதலீட்டுத் தொகையின் வட்டி போன்ற
பல இழப்புகளை சந்திக்க நேரிடும்.
நீங்கள் வாங்கி விற்கும் பொருட்களின் தரத்தை அப்போதே சோதித்து ஏதும் குறைபாடு இருக்கும் சூழ்நிலையில் அப்போதே உங்களது சப்ளை இருக்கு நீங்கள் வாங்கிய பொருட்களை திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையில் உங்கள் நிறுவனத்தின் விற்பனையில் எந்தவித சந்தேகம், குழப்பங்களும், குளறுபடிகள் இருக்காது என்பது உறுதி.
அவ்வாறு சோதிக்காமல் உங்களது வாக்காளர்களுக்கு விற்று விட்டால் அந்த வாடிக்கையாளர் பொருளின் தரத்தை மதிப்பீட்டு மீண்டும் உங்களிடம் தரும்பொழுது என்ன நடக்கும்? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த பதிவில் உங்கள் தொழிலில்
01. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
02. விற்பனை திருப்பம் என்றால் என்ன?
03. கொள்முதல் மற்றும் விற்பனை சிற்பங்கள் உருவாக காரணம் என்ன?
04. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கவிருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்வது எப்படி?
05. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
என்பதைப் பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம்.
01. கொள்முதல் திருப்பம் என்றால் என்ன?
நீங்கள் உங்களது சப்ளையர் இடம் இருந்து வாங்கிய பொருட்களை தரம் இல்லை தரம் இல்லை என்ற காரணத்திற்காக திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையில் அதனை கொள்முதல் திருப்பம் (Purchase Return) என்கிறோம்.
02. விற்பனை திருப்பம் என்றால் என்ன?
விற்ற பொருட்களை உங்கள் வாடிக்கையாளர் தரம் இல்லை என்று உறுதி செய்து உங்களுக்கு திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலையில் அதனை விற்பனை திருப்பம் (Sales Return) என்கிறோம்.
03. கொள்முதல் மற்றும் விற்பனை சிற்பங்கள் உருவாக காரணம் என்ன?
3A. பொருட்களின் தரம்
3B. எண்ணிக்கையில் குறைபாடு
3C. பழுதடைந்த பொருட்கள்
3D. கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் மாற்றம்
3E. காலதாமதமாக பொருட்களை விநியோகித்தல்
3F. நெருப்பு, புயல், வெள்ளம், திருட்டு
04. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கவிருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்வது எப்படி?
4A. நீங்கள் வாங்கும் பொருட்களின் கொள்முதல் ஆணையில் பொருட்களின் எண்ணிக்கை, அதற்குண்டான விலை, அதற்குண்டான வரி, அதற்குண்டான ஏற்றிருக்கும் செலவுகள், மற்றும் வண்டி வாடகை போன்றவற்றை சரிவர குறிப்பிடாமல் இருப்பது.
4B. உங்கள் சப்ளையேர் இடம் நீங்கள் வாங்கும் பொருட்களின் இருப்பு போதிய அளவு கையிருப்பு இல்லாமல் இருக்கும் இருப்பது.
4C. நீங்கள் வாங்கும் பொருட்களை உங்கள் சப்ளையர் வேறு ஒரு நபரிடம் இருந்து கைமாற்றி விடுவது.
05. கொள்முதல் மற்றும் விற்பனை திருப்பங்கள் நடக்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?
5A. பொருட்களை விற்பவர்களுக்கு தகவல் அளித்தல்
5B. மாறிவந்த பொருட்களுக்கு போதிய பக்கங்களை பெற்று பின்பு அந்த பொருளை பயன்படுவது.
5C. பணம் செலுத்துதல்களை நிறுத்தி வைத்தல்
5D. வாங்கிய அல்லது விற்ற பொருட்களின் GST வரிக்கு உட்பட்ட இருக்கும் சூழ்நிலையில் அதனை தனது பட்டயக் கணக்கர் ஆலோசனைப்படி அணுகுதல் வேண்டும்.
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக