Small size Business or Large size Business ?தொழிலை சிறிய அளவில் துவங்கலாமா? அல்லது பெரிய அளவில் துவங்கலாமா?

Story 23.Small size Business or Large size Business ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள்  தொழிலை சிறிய அளவில் துவங்கலாமா?  அல்லது பெரிய அளவில் துவங்கலாமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

வழக்கம் போல் இந்த பதிவை ஒரு சிறு கதையுடன்  ஆரம்பிக்க உள்ளேன். இரண்டு நபர்கள் தொழிலை துவங்குகின்றனர் அதில் A என்பவர் 10 லட்சம் முதலீடு செய்து  பெரிய அளவிலும் B என்பவர்1 லட்சம் முதலீடு செய்து சிறிய அளவிலும் ஒரே பகுதியில்  ஒரே வகையான துணிக்கடை தொழில்( Textile ) கடையைத் தொடங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
A ஏ என்பவர் தன் தொழிலுக்காக
பெரிய அளவிலான இடம்
பெரிய அளவிலானமுதலீடு
அதிகப்படியான வேலையாட்கள்
சொகுசான விற்பனை சூழல்
இவ்வாறாக தன் நிறுவனத்தின் சோலை மாற்றி அமைத்து தொழில் தொடங்குகிறார்.

B நீ என்பவர் தன் தொழிலுக்காக
சிறிய அளவிலான இடம்
சிறிய அளவிலான முதலீடு
வேலையாட்கள் யாரும் இல்லை
ஒரு சராசரியான விற்பனை சூழல்
இவர கைத்தொழிலை அமைக்கின்றார்.

A என்பவர் தன்  தொழிலின் விளம்பரத்தை பெரிது படுத்தி காட்ட பெரிய தொகையை செலவிடுகிறார்.அதேபோல்
B என்பவர் தன் தொழிலை எந்தவித விளம்பரமும் படுத்தாமல் சாதாரணமாக தொழிலை தொடங்கி நடத்துகிறார்.

A என்பவருக்கும் B  என்பவருக்கும் ஒரு மாதகால இறுதியில் அவரவர் நினைத்தது போல் முதலீட்டுத் தொகையில் இருந்து 20% லாபம் கிடைக்கிறது.

லாபம் A என்பவர்க்கு 2,00,000/-
லாபம் B என்பவர்க்கு    20,000/-

A என்பவர் தன்  தொழிலின் செலவீனங்களான,
முதலீட்டின் மீதான வட்டி
சம்பளம்
வாடகை
கரண்ட் பில்,
இதர செலவு
அனைத்தும் போக வந்த லாபத்தில் இருந்து 5% மட்டுமே இருப்பாக எடுத்து வைக்க முடிகிறது. அதாவது10, 000/-

B என்பவர் தன்  தொழிலின் செலவீனங்களான,
முதலீட்டின் மீதான வட்டி
வாடகை
கரண்ட் பில்,
இதர செலவு
அனைத்தும் போக வந்த லாபத்தில் இருந்து 50% இருப்பாக எடுத்து வைக்க முடிகிறது. அதாவது10, 000/-

இப்போது கூறுங்கள் நண்பர்களே இவர்களிடையே என்ன வித்தியாசம். கூட்டி கழித்து பார்த்தால் ஒன்றுமில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு தொழிலை எந்த அளவிற்கு ஆடம்பரமாக செய்கிறோம் என்பது பெரிதல்ல. அவள் தோளை எந்தளவுக்கு புத்திசாலித்தனமாக  செய்கிறோம் என்பதே பெரிதான விஷயமாக கருதப்படுகிறது.

இதன் நன்மை தீமைகளைப் பற்றி இங்கு சற்று விரிவாக  பார்ப்போம்.

01.பெரிய அளவிலான தொழிலின்
நன்மைகள்
1A. அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இருப்பதினால் அதிகம் இவர்கள் பேரம் பேசுவதில்லை.
1B. புதிய பொருட்களின் வரத்து அதிகம் இருப்பதினால் மக்களின் கவனயீர்ப்பு அதிகமாகிறது.
1C. நிறுவனத்தின் வளர்ச்சி விளம்பரங்கள் அடிப்படையில் இருப்பதனால் தொழில் விரைவாக வளரும்.
1D. தோழியின் வளர்ச்சியை பார்த்து வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவார்கள்.
1E. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

02.சிறிய அளவிலான  தொழிலின் நன்மைகள்

2A. சிறிய முதலீடு மட்டுமே இருப்பதால் அதிக கடன் தொல்லை கிடையாது.
2B. நிறுவனத்தின் விளக்குகள் மற்றும் பக்கங்களை உருவாக்குவது எளிது.
2C. மேலாண்மை சம்பந்தமான முடிவுகள் எடுப்பதில் எந்தத் தாமதமும் இல்லை.
2D. தொழிலாளர்களை நம்பி இல்லாமல் நிறுவனத்தின் அனைத்து வேலையும் பார்ப்பதினால்  அனைத்திலும் ஒரு தெளிவு இருக்கும்.
2E. இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தொழிலை மூடி விட்டு செல்லலாம்.

03.பெரிய அளவிலான தொழிலின் தீமைகள்

1A. பெரிய முதலீடு மற்றும் அதிகப்படியான நடப்பு செலவினங்கள்.
1B. நிறுவன  நோக்கங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
1C. சட்டென்று ஒரு முடிவை எடுத்து அதனை செயல்படுத்துவதில் பல நடைமுறைச்  சிக்கல்கள் உள்ளன.
1D. அதிகப்படியான விற்பனையாகாத பொருட்களின் தேக்கம், தொழிலை வலுவிழக்க செய்கிறது.
1E. எப்போதும் வங்கிக் கடனை அடிப்படையாக வைத்தே தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டிய சூழ்நிலை.

04.சிறிய அளவிலான  தொழிலின் தீமைகள்

4A. சிறிய முதலீடு மட்டும் வைத்து செயல்படுவதால் இவர்கள் பெரிய அளவில் தொழிலில் மாற்றங்களை உருவாக்க முடிவதில்லை.
4B. வங்கிக் கடன் கிடைப்பதில் சிக்கல்.
4C. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் புதுப்புது பொருட்களை வாங்கி வைக்க முடியாத சூழ்நிலை.
4D. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாத சூழ்நிலை.
4E. எதிர்கால திட்டமிடுதல் மற்றும் அதற்கு உண்டான பணத்தை எடுத்து வைப்பது என்பது கிடையாது.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?