what is Cash Credit Bank Account?ரொக்க கடன் வங்கி கணக்கு என்றால் என்ன?.

Story 22.what is Cash Credit Bank Account?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும்   எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலுக்கான ரொக்க  கடன் வங்கி கணக்கை (Cash Credit (CC)Bank Account) பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

01.ரொக்க கடன் வங்கி கணக்கு என்றால் என்ன?.
02.ரொக்க கடன் வங்கி கணக்கு எவ்வாறு செயல்படுகிறது?
03.ரொக்க கடன் வங்கி கணக்கு மற்ற வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?.
04.ரொக்க கடன் வங்கி கணக்கினை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும்?

என்பது போல பல முக்கிய விஷயங்களை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம் வாருங்கள் பதிவுகள் போகலாம்.

இதில் நாம் முதலாவதாக பார்க்க இருப்பது,

01.ரொக்க கடன் வங்கி கணக்கு என்றால் என்ன?.
Working Capital  வொர்க்கிங் கேபிட்டல் என்று சொல்லக்கூடிய தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான பணத்தை பெறுவதற்கு தொழில்நிறுவனங்கள் பல வங்கிக் கடன்களை நாடுகின்றனர்.

இவ்வாறாக வங்கிகளை நாடும்போது அந்த வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை திருப்பி அளிப்பதில் பல சிக்கல்கள் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் ஏற்படுகின்றன.

இதனைக் குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய வங்கி கணக்கு இந்த ரொக்க கடன் வங்கி கணக்கு என்று அழைக்கப்படுகிறது.

02.ரொக்க கடன் வங்கி கணக்கு எவ்வாறு செயல்படுகிறது?

பிணைய சொத்துக்களின் அடிப்படையிலேயே இந்த ரொக்க  கடன் வங்கி கணக்கு செயல்படுகிறது.

தொழிலுக்கு வேண்டிய கடன் தொகையை ரொக்க  கடன் கணக்கின் மூலம் பெற வங்கியை நாடும்போது அதற்கு தேவையான அரைக்க தேவையான பிணைய சொத்துக்களின் அடிப்படையிலேயே கடன் தொகையானது தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணமாக 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை அடமானம் வைத்து இந்தக் ரொக்க  கடன் வங்கி கணக்கினை துவங்கும்பொழுது, வங்கியாளர்கள் அதில் 70 சதவீதம் மட்டுமே இந்த வங்கி கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றன.

மாதாந்திர இறுதியில் வங்கிகள் இந்தவகை வங்கிக்கணக்கில் எடுத்திருக்கும் தொகைக்கு வட்டியை சேர்த்து மொத்த நிலுவைத் தொகையாக நெகட்டிவ் பேலன்ஸ் ஆக காட்டுகின்றனர்.

03.ரொக்க கடன் வங்கி கணக்கு மற்ற வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?.
பொதுவாக தொழில் நிறுவனங்கள் தனது நிறுவனத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களை நிர்வகிக்க வங்கியில் கணக்கை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுப்பது (Current Account ) என்று சொல்லக்கூடிய நடப்பு கணக்கு. இதில் இடப்படும் தொகையானது மொத்த கூட்டுத் தொகையில் இணைந்து இருப்பாக காண்பிக்கிறது. எடுக்கப்படும் தொகையில் எடுக்கப்படும் தொகையானது மொத்த இருப்பில் இருந்து பறிக்கப்பட்டு மீதமுள்ள தொகை காண்பிக்கப்படுகிறது.

ஆனால் இந்த ரொக்க  கடன் வங்கி கணக்கு என்பது இது இந்திய சற்று மாறுபட்டு காணப்படுகிறது.

அதாவது அந்தக் கணக்கில் இடப்படும் தொகையானது அந்தக் கணக்கில் இறுதி இருப்பிலிருந்து  கூட்டி காண்பிக்கப் படுவதற்கு பதிலாக கழித்து காண்பிக்கப்படுகிறது.

அதேபோல் எடுக்கப்படும் தொகையானது கழித்து காண்பிக்க படுவதற்கு பதிலாக கூட்டி காண்பிக்கப்படுகிறது.

04.ரொக்க கடன் வங்கி கணக்கினை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும்?

இந்த ரொக்க கடன் வங்கி கணக்கை வைத்திருக்கும் தொழில்கள் நிறுவனத்தின் அனைத்து பெறுதல்கள்  மற்றும் செலுத்துதல்கள் அனைத்தையும் இந்த குறிப்பிட்ட வங்கி கணக்கில் மட்டுமே காண்பிக்க வேண்டியது மிக கட்டாயம்.

ஏன் என்றால் உங்களை நம்பி கடன் கொடுத்த வங்கிகளுக்கு அப்போதுதான் ஒரு நற்பெயர் உங்களின் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீதும்ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகுவதற்கு காரணமாக அமையும்.

அதுமட்டுமல்லாமல் அதிகப்படியான அளவு (Cash Flow ) என்று சொல்லக்கூடிய பண பரிமாற்றங்கள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் கிரெடிட்  லிமிட்கி (Credit Limit) என்று சொல்லக்கூடிய கடனுக்கான உச்சவரம்பு ஏற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும்.

அதுமட்டுமல்லாது மாத இறுதியில் உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவிற்கு குறைந்த அளவு இருப்பை கையாள்வதன் மூலம் அங்கே கணக்கிடப்படும் வட்டியின் அளவும் குறைவாக இருக்கும்.  இறுதி இருப்பு மற்றும்  அதற்கான வட்டி சேர்த்து மொத்தமாக உங்களுக்கு அந்த மாத இறுதியில் உங்கள் கணக்கில் வைப்பில் இடப்படும்.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?