What is Trading?வியாபாரம் என்றால் என்ன ?
எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும், ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும், காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும், இருக்கும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் வியாபாரம் என்றால் என்ன ? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வியாபாரம் என்பது ஒரு பொருளை அதன் சப்ளையர் இடம் இருந்து வாங்கி அந்தப் பொருளை எந்தவித மாற்றமும் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட லாபத்தை அதன்மீது வைத்து விற்பதை வியாபாரம் என்று சொல்கிறோம்.
ஒரு பொருளை அது தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் இடத்தில் தேவையான அளவிற்கு உரிய பணத்திற்கு வழங்குவதே சரியான வியாபாரம் என்று கூறலாம் .
இவ்வாறாக வியாபாரத்தை உற்பத்தியாளர் இடம் இருந்து பொருட்களை நுகர்வோர் வரை பொருட்களை கை மாறுவதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன
1. Traders B to B Business, manufacturer to Distributers
2.Traders B to B Business, Distributers to wholesellers
3.Traders B to B Business, wholesellers to Retailers
4.Traders B to C Business, Retailers to end useres
இவற்றில் நாம் முதலில் பார்க்க இருப்பது,
1. Traders B to B Business, manufacturer to Distributers இவ்வகை உற்பத்தி நிறுவனங்கள் யார் என்று பார்த்தோமானால், பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்த தனது பொருட்களை விநியோகஸ்தர்களிடம் விற்பதை கூறலாம்.
பொருள்களை மொத்தமாக மொத்த விலைக்கு சிறிய அளவிலான லாபத்துடன் தனது விநியோகஸ்தர்களிடம் விற்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக சொல்லப்போனால்
அழகு சாதன பொருட்கள்,
வீட்டு உபயோக பொருட்கள்,
FMCG பொருட்கள்,
மளிகை வியாபாரம்,
மற்றும் பல...
2.Traders B to B Business, Distributers to whole sellers இவ்வகை விநியோகிஸ்தர்கள் யார் என்று பார்த்தோமானால், உற்பத்தி நிறுவனத்திடமிருந்து தான் வாங்கிய பொருள்களில் மீது சிறிய அளவிலான லாபத்தை வைத்து தனது வாடிக்கையாளர்களான மொத்த வியாபாரிகளிடம் விற்பதையே நோக்கமாக கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக சொல்லப்போனால்
FMCG,
மளிகை
காய்கறிகள்
மற்றும் பழ வியாபாரம்,
மற்றும் பல...
3.Traders B to B Business, whole sellers to Retailers இவ்வகை மொத்த வியாபாரிகள் யார் என்று பார்த்தோமானால், விநியோகிஸ்தர்கள் இடமிருந்து தான் வாங்கிய பொருட்களின் மீது மீது சிறிய அளவிலான லாபத்தை வைத்து தனது வாடிக்கையாளர்களான சில்லரை வியாபாரிகளிடம் விற்பதையே நோக்கமாக கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக சொல்லப்போனால் ஆடைகள்,
வீட்டு பொருட்கள்,
அழகு சாதன பொருட்கள்,
FMCG பொருட்கள்,
மளிகை வியாபாரம்,
மற்றும் பல...
4.Traders B to C Business, Retailers to end useres இவ்வகை சில்லரை வியாபாரிகள் யார் என்று பார்த்தோமானால், மொத்த வியாபாரிகளிடமிருந்து தான் வாங்கிய பொருட்களின் மீது மீது சிறிய அளவிலான லாபத்தை அதாவது எம்ஆர்பி க்கு உட்பட்டு லாபத்தை வைத்து தனது கடைநிலை வாடிக்கையாளர்களான மக்களிடம் விற்பதையே நோக்கமாக கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக சொல்லப்போனால்
அழகு சாதன பொருட்கள்,
வீட்டு உபயோகப் பொருட்கள்,
மருந்து பொருட்கள்
FMCG பொருட்கள்,
மளிகை வியாபாரம்,
மற்றும் பல...
நீங்கள் ஒரு வியாபாரியாக மேற்கூறியவற்றை தனித்தனியே பிரித்து கண்டறிய கற்றுக் கொள்வது மிக அவசியம்
இப்போது இந்த பதிவின் மூலமாக இந்த உலகில் உள்ள பல்வேறு வியாபார நடவடிக்கைகள் பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேற்சொன்ன பலவகை வியாபாரத்திற்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு வியாபார தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான வியாபாரதொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக