What type of business is suitable for whom? யார் யாருக்கு எந்தெந்த வகை தொழில் ஏற்றது ?

Story.46.What type of business is suitable for whom? 

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

 இந்த பதிவில்  யார் யாருக்கு எந்தெந்த வகை தொழில் ஏற்றது ? அதனை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

 தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஒரு தனிக்காட்டு ராஜாவாக கொடிகட்டி பறக்க வேண்டும் என்று நினைக்காத நபர்களே இந்த உலகில் யாருமில்லை என்று நான் கூறுவேன்.

 ஏனோ அவர்களுக்கான சரியான நேரம் காலம் சூழ்நிலை அமையாத காரணத்தினால் அவர்கள் தொழிலை தொடங்கி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகிறது. 

 ஒரு சிலர் எக்குத்தப்பாக தொழிலை தொடங்கி பல்வேறு சிக்கல்களில் தன்னை உள்ளாக்கி தவித்து வருகின்றனர்.

 இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் கல்வி பயிலும் மாணவர்களைப் போல  ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்திறமை, நாட்டம்,  ஈர்ப்பு,  தேவை,  தனிப்பண்பு, என பல வகை தனித்தனியாக இருக்கத்தான் செய்கின்றது.

 அவை என்னென்ன என்று கண்டுபிடித்து அதன் அடிப்படையில் செயல்படும் பொழுது ஒவ்வொரு முனைவோரும் தன் தொழிலில் வெற்றி காண்பது என்பதை மிகவும் இலகுவான விஷயமாக உள்ளது.

 இவ்வாறாக ஒவ்வொரு தொழில் முனைவோரின் வகைகள் என்ன என்பதை கீழே பார்ப்போம்.

01. வாழ்க்கையின் லட்சியத்திற்காக தொழிலை செய்பவர்கள்.
02. விளையாட்டாக தொழிலைத் தொடங்குவார்கள்.
03.அடிப்படைதேவையைப் பூர்த்தி செய்ய தொழிலைத் தொடங்குவார்கள்.
04.கௌரவத்திற்காக தொழிலைத் தொடங்குவார்கள்.
05.குடும்ப தொழில் செய்பவர்கள்.

 இவர்கள் தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
06. தனித் திறமை மற்றும் கடின உழைப்பு
07.தொழில் முதலீட்டு தொகை
08.தொழிலில் கிடைக்கும் வருமானம்
09.எதிர்காலத்தை நோக்கிய தொழில்கள்.
10.தோல்வியை தாங்கும் திறமை.

 இவரகக பலவகை உள்ளன.

 முதலில் தொழில் முனைவோரின் வகைகள் என்ன என்பதை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம்.

 இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. வாழ்க்கையின் லட்சியத்திற்காக தொழிலை செய்பவர்கள்.
 தனது வாழ்வில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடையவேண்டும் என்ற ஒரு லட்சியத்திற்காக தொழிலைத் தொடங்கி நடத்துவது அவர்கள் ஒருவகை படுவார்கள்.

 ஒரு பெரிய மரத்தை வெட்டுவதற்கு பத்து மணி நேரம் அவகாசம் அளித்தால் அதில் 4 மணிநேரம் வெட்டும் கோடாலியை கூர்மை படுத்துவதற்காக  நேரத்தை செலவிடும் இத்தகைய நபர்கள் இவர்கள் பெரும்பாலும் தொழில் சூட்சமத்தை முற்றிலும் அழிந்து பின்பே தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

02. விளையாட்டாக தொழிலைத் தொடங்குவார்கள்.

 விளையாட்டாக தொழில் தொடங்குபவர்கள் இன்னொரு வகைகளாக காணப்படுகிறார்கள். செய்கின்ற வேலை பிடிக்கல அதற்காக ஒரு தொழிலை தொடங்கி விளையாட்டாக அதனை நடத்தி வரும் பொழுது அதில் பிற்காலத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு அந்த தொழிலில் வெற்றி அடைந்த அவர்களும் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

03.அடிப்படைதேவையைப் பூர்த்தி செய்ய தொழிலைத் தொடங்குவார்கள்.

 ஒரு சில தொழில் முனைவோர் தன் குடும்ப தேவைக்காக தொழில் நடத்தி வைக்கிறார்கள். இவர்களுக்கு தன் அடிப்படைத் தேவை பூர்த்தி இருந்தால் போதுமானது மாறாக இவர்கள் தொழிலின் எதிர்காலம்,  இலக்கு,  மேலாண்மை,  கணக்கியல்,  போன்றவற்றை அவ்வளவு பெரிதாக கருத்தில் கொள்வதில்லை.


04.கௌரவத்திற்காக தொழிலைத் தொடங்குவார்கள்.

சிறிய தொழிலோ பெரிய தொழிலோ ஒரு சிலர் தனது தொழில்களை கௌரவத்திற்காக தொடங்கி நடத்தி வருகின்றனர். இவ்வாறாக தொழில் செய்பவர்கள் தொழில் வெற்றியைக் பெரிதாக அடைய முடியாது.

 இவர்கள் பெரும்பாலும் தன் தொழிளின்  செயல்பாடுகளான வியாபாரம்,  மேலாண்மை,  கணக்கியல்,  போன்றவற்றை  மற்றவர்களின் உதவியை நாடியே தொழில் நடத்தி வருகிறார்கள்.

05.குடும்ப தொழில் செய்பவர்கள்.

 ஒரு சில தொழில் முனைவோர்  பரம்பரை பரம்பரையாக செய்து வரும் குடும்ப தொழிலை நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் சற்று விரிவாக தொழிலைத் தொடங்க முற்படுவார்கள்.

 குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்ற கூற்றின் அடிப்படையில் இவர்களின் முன்னோர் பயன்படுத்திய தொழில் திறமைகளைப் பின்பற்றியே இந்த தொழிலை நடத்த முனைவார்கள் இவர்களிடம் தொழிலை நடத்துவதற்கான தொழில் பண்புகள் இயற்கையாகவே இருக்கும்.


இவர்கள் தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
06. தனித் திறமை மற்றும் கடின உழைப்பு
07.தொழில் முதலீட்டு தொகை
08.தொழிலில் கிடைக்கும் வருமானம்
09.எதிர்காலத்தை நோக்கிய தொழில்கள்.
10.தோல்வியை தாங்கும் திறமை.

 இவற்றைப்பற்றி பலவற்றை விரிவாக இங்கே பார்க்க இருக்கிறோம்.

 அவற்றில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

06. தனித் திறமை மற்றும் கடின உழைப்பு

சிறிய தொழிலோ பெரிய தொழிலோ எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அந்த தொழில் முனைவோருக்கு தனித்திறமை மற்றும் கடின உழைப்பு  இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றி  பெற முடியும்.

 தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொடங்கியவனும்  கெட்டான், 
 என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் ஒவ்வொரு தனிநபருக்கும் அவருக்கென தனி திறமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அவை என்ன என்று கண்டுபிடித்து. அந்தத் திறமையின் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தும் ஒவ்வொரு தொழில் முனைவோரும் இறுதியில் வெற்றியை சந்திக்க தான் செய்கிறார்கள்.

 தொழிலை தொடங்க நினைக்கும் நினைக்கும் ஒவ்வொரு தொழில் முனைவோரும், 
 01.வியாபாரம், 
02. உற்பத்தி, 
03. சேவை, 
04. இடைத்தரகு, 
 என ஏதாவது ஒரு ஒரு துறையில் திறமை படைத்தவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

 உங்களுக்கான தனி திறமைஎன்ன என்று கண்டுபிடித்து அதனை ஆராய்ந்து அறிந்து அந்தத் துறையில் கடின உழைப்போடு செயல்படும்போது அந்த துறையில் நீங்கள் வெற்றி காண்பது சுலபமானது. 

தொழிலில் கடின உழைப்பு என்பது அனைவராலும் கொடுக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இருந்தபோதிலும் மற்ற தொழில் முனைவோர் தன் தொழிலில் இடும் கடின உழைப்பை விட ஒரு படி மேலே உங்களது கடின உழைப்பு உங்கள் தொழிலில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால் தராசு இயந்திரத்தில் ஒரு பக்கம் எடை கலையும் மறுபக்கம் அழைக்கப்படும் பொருட்களையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே எடை போடப் படும் பொருள் ஆனது தராசு கல்லின் எடையை நெருங்கும் வரை சுகமாகத்தான் இருக்கும் ஆனால் பொருட்களின் அளவானது தராசு கல்லின் எடையை நெருங்க நெருங்க நெருங்க பொருட்கள் இருக்கும் பக்கம் சற்று சாய தொடங்கும்.

 இதுபோலத்தான் உங்கள் தொழிலில் வெற்றியும் கூட மற்றவர்களிடம் அதைவிட உழைப்பை நீங்கள் உங்கள் தொழிலில் போதிய அளவு வெற்றி காண்பது என்பது முடியாது. சற்று கூடுதலான உழைப்பு போட்டால் மட்டுமே உங்கள் தொழில் வெற்றி என்பது கிடைக்கக்கூடும்.

07.தொழில் முதலீட்டு தொகை

 தொழிலை தொடங்க தேவையான பணத்தை உருவாக்குவது முதலீடு தொகை என்று அழைக்கப்படுகிறது.

 ஒரு சிலர் குறைவான முதலீடு செய்வர்
 ஒரு சிலர் மிதமான முதலீடு  செய்வர்.
 ஒருசிலர் அதிகப்படியான முதலீடு செய்வர்.

தொழில் முனைவோர்களின் தொழில் இடப்படும் முதலீட்டு தொகையானது அவர்களின் குடும்ப பொருளாதாரத்திற்கு ஏற்ற வாறு உள்ளது. 

08.தொழிலில் கிடைக்கும் வருமானம்

 ஒரு சில தொழில் முனைவோர் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் தொழிலில் இருந்து எதிர் பார்ப்பவர்களாக இருப்பார்கள்.

 ஒரு சில தொழில்முனைவோர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட தொகையை தன் தொழிலில் இருந்து எதிர்பார்ப்பவர்கள் ஆக இருப்பார்கள்.

ஒரு சிலதொழில்முனைவோர் ஆண்டுக்கு ஒரு முறை  ஒரு குறிப்பிட்ட தொகையை தன் தொழிலில் இருந்து எதிர்பார்ப்பவர்கள் ஆக இருப்பார்கள்.

ஒருசிலர் தொழில்முனைவோர் தன் தொழிலில் இருந்து எந்த வருமானத்தையும் எதிர்பார்க்காமல் ஒரு கௌரவத்திற்காக தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

தொழில் முனைவோர்கள் தன் தொழிலிருந்து எதிர்பார்க்கப்படும் தொகையானது அவர்களின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ற வாறு உள்ளது. எனவே தொழில் முனைவோர்கள் அனைவரும் அவர் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன் தொழிலை ஆராய்ந்து அறிந்து தொடங்கும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

09.எதிர்காலத்தை நோக்கிய தொழில்கள்.

 தொழிலில் லாபம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நடத்திவரும் தொழில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் தலையாய கடமையாக இருக்கிறது. ஏனென்றால் தொழில் எந்த காலம் வரை செல்கிறது அந்த காலம் வரை மட்டுமே தொழிலில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருமானத்தை ஒவ்வொரு தொழில் முனைவோரும் எதிர்பார்க்க முடியும் அவ்வாறு வருமானம் இல்லாத சூழ்நிலையில் தொழில் முனைவோரும் தொழிலும் என்ன ஆகும் என்று தொடக்க காலத்திலிருந்தே ஆராய்ந்து அறிவது மிக சிறப்பான ஒன்றாகும்.

10.தோல்வியை தாங்கும் திறமை.

 முக்கியமான தலைப்பாக தொழில் தொழில் தோல்வியை தாங்குவது. அனைத்து தொழில்களும் தன் துவக்க காலத்தில் இடப்படும் இலக்குகளை நோக்கி செயல்படுவது இல்லை. 

ஒரு சில தொழில்கள் தன் இலக்கை முழுமையாக  அடைந்ததாகவும், 

ஒரு சில தொழில்கள் நிறுவனத்தின் இலக்குகளை பாதி தூரம் அடைந்ததாகவும், 

 ஒரு சில தொழில்கள் நிறுவனத்தின் இலக்குகளை குறைந்த அளவு அடைந்ததாகவும் இருக்கின்றன.

 இந்த சூழ்நிலையில் தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கும் தொழிலிலிருந்து வருமானம் வருவதற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு தொழில் முனைவோரின் தன் மனதை எவ்வாறு பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன்னதாகவே திட்டமிடுவது  முற்போக்கு சிந்தனை உள்ள செயல் என்று நான் கூறுவேன்.


தொழிலில் சம்பாதித்த பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது மேலாண்மை செய்வது என்பது தெரியாமல் இன்றளவும் அந்த தொழிலிலே கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இருக்கும் தொழில் முனைவோர்கள் பலர். எனவே  ஒவ்வொரு தொழிலுக்கும் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கத்தான் செய்கிறது. 

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தனக்கென ஒரு தொழிலை கற்பதற்கு பல ஆண்டுகள் செலவு செய்கிறான். ஆனால் கற்ற தொழிலை சிறப்பாக செய்வதற்கு தொழில் மேலாண்மை எந்த அளவிற்கு முக்கியம் என்பது அவர்கள் ஏனோ அறியமுடியவில்லை. 

 எனவே நண்பர்களே நீங்கள் எந்த தொழிலை செய்வதாக இருந்தாலும் சரி. குறைந்தது ஓராண்டு காலம் ஆவது உங்கள் தொழிலை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும் என்பதை அறிந்து பின்னர் தொழிலை தொடங்குவது மிகச் சிறப்பான ஒன்றாகும்.இது உங்கள் தொழிலை சீரும் சிறப்புமாக பல ஆண்டுகள் வரை நிலைநிறுத்துவதற்கான அடிப்படையாகும்.


🙏 நன்றி வணக்கம்.🙏

 நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். 

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


S.Rajesh 
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group 
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business 
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?