How to choose sundry debtors?தொழில் விற்பனைப் பொருட்களுக்கான பலவகைப்பட்ட வாடிக்கையாளர்கள் யார்? அந்த வாடிக்கையாளர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Story.60. How to choose sundry debtors?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில்  தொழில் விற்பனைப் பொருட்களுக்கான  பலவகைப்பட்ட வாடிக்கையாளர்கள் யார்?  அந்த வாடிக்கையாளர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?   என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

நடத்திவரும் தொழிலின் விற்பனை பொருட்களையோ அல்லது உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களையோ பணத்திற்காக அல்லது கடனுக்காக உங்கள் வாடிக்கையாளர்களிடம் கொடுப்பதை உங்கள் நிறுவனத்தின்  ( கடனாளிகள்)(debtor's  )என்று அழைக்கிறோம்

அவராக நீங்கள் நடத்தும் தொழிலின் வாக்காளர்கள் அவரவர் தன்மைக்கு ஏற்றாற் போல் பலவகைகளில் இருக்கின்றனர். அவை யாவை

பெரிய அளவிலான முதலீட்டு நிறுவனங்கள்

நடுத்தர அளவிலான முதலீட்டு நிறுவனங்கள்

பெரிய அளவிலான முதலீட்டு நிறுவனங்கள்

குறைவான முதலீட்டில் இலக்குகளின் அடிப்படையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள்

விற்பனைப் பொருட்களில் இருந்து அதிக அளவு லாபம்  ஈட்ட நினைக்கும் நிறுவனங்கள்

விற்பனைப் பொருட்களில் இருந்து போட்டியாளர்களுக்கு இணையான அளவு லாபம்  ஈட்ட நினைக்கும் நிறுவனங்கள்

விற்பனைப் பொருட்களில் இருந்து மிதமான அளவு லாபம்  ஈட்ட நினைக்கும் நிறுவனங்கள்

தனது நிறுவனத்தின் பெயரை மக்களிடையே பரப்புவதற்காக செயல்படும் நிறுவனங்கள்.

பரம்பரைத் தொழிலாக செயல்படும் நிறுவனங்கள்.

சிறு தொழில் நிறுவனங்கள்.

குடிசை தொழில்கள்

இவராக தொழிலுக்கான வாடிக்கையாளர்கள் மாறுபட்டு காணப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு குணாதிசயங்கள் தனிப்பட்ட வடிவில் காணப்படுகின்றன.

இவர்களில் சிறு தொழில் முனைவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து தொழிலை நடத்தும் போது அதில் சிறப்புற்று விளங்க முடியும்.

இவ்வாறாக எந்த வகை வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி அவர்களை தேர்ந்தெடுப்பதில் மேலாண்மையின்  குறிப்பிடத்தக்க முக்கிய கூறுகள் இருக்கின்றன.

அவை என்னென்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம்.

01. வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு பொருட்களை கொடுக்கும் நாட்கள் மற்றும் அளவு?

02. வாடிக்கையாளர்கள் அமைந்துள்ள இடத்தின்  தூரம்?

03. வாடிக்கையாளரின் இன் விற்பனை பொருளும் அதன் சந்தை மதிப்பு எந்தளவிற்கு உள்ளது?

04. வாடிக்கையாளர் விற்கும் பொருட்களின் மீது அவர்களது வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை?

05. வாடிக்கையாளர் விற்கும் பொருள்களுக்கான விலை மற்றும்தரம்?

06. வாடிக்கையாளர்கள் பொருட்களை அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொழுது அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் அளவு?

என பல முக்கிய கூறுகள் இதில் உள்ளன மேலும் இவற்றைப் பற்றி விரிவாக ஒன்றாக கீழே பார்க்க இருக்கிறோம்.

அதில் நாம் முதலாவதாக பார்க்க இருப்பது

01. வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு பொருட்களை கொடுக்கும் நாட்கள் மற்றும் அளவு?

ஒவ்வொரு வாடிக்கையாளர் நிறுவனமும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு  பொருட்களை கடன் கொடுக்கும் நாட்களும் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அளவும் இருக்கின்றன.

பெரிய அளவிலான நிறுவனங்கள் அதிகப்படியான கடன் நாட்களும் பொருட்களின் அதிகப்படியான எண்ணிக்கையில் இருக்கின்றன.

சிறிய அளவிலான நிறுவனங்கள் குறுகிய அளவிலான கடன் நாட்களும் கடன் கொடுக்கும் பொருட்களின் எண்ணிக்கை சிறிய அளவிலும் இருக்கின்றன.

இவராக தொழில் முனைவோர் அவர்களுக்கு ஏற்றார்போல தனது வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

02. வாடிக்கையாளர்கள் அமைந்துள்ள இடத்தின்  தூரம்?

பல்வேறு தொழில்களில் விற்பனை அல்லது உற்பத்தி பொருட்களின் வாடிக்கையாளர்கள் எத்தனை தூரத்தில் அமைந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து விற்பனை ஆணை வந்தவுடன் எத்தனை நாட்களுக்குள் பொருட்கள் அவர்களை சென்று சேரும் என்பதைப் பற்றியும் தொழில் முனைவோர் இங்கு சிந்தித்து செயல்படவேண்டிய உள்ளது.

03. வாடிக்கையாளரின் இன் விற்பனை பொருளும் அதன் சந்தை மதிப்பு எந்தளவிற்கு உள்ளது?

வாடிக்கையாளர் விற்கும் பொருட்களுக்கு  சுற்றுவட்டாரப் பகுதியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. அத்தகைய பொருட்களை வாங்கி விற்கும் போது விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் தொழில் முனைவோர் இங்கே சற்று கூர்ந்து கவனிக்க வேண்டியது உள்ளது.

04. வாடிக்கையாளர் விற்கும் பொருட்களின் மீது அவர்களது வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை?

இவராக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் பிராண்ட் மற்றும் அதனின் விலை மட்டும் அதன் தரம் வாடிக்கையாளர்கள் இடையை  எவ்வாறு சென்று சேர்ந்துள்ளது என்பதைப் பற்றியும் தொழில் முனைவோர் இங்கே ஆராய வேண்டியுள்ளது.

05. வாடிக்கையாளர் விற்கும் பொருள்களுக்கான விலை மற்றும்தரம்?

இவ்வாறாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்  பொருட்களின் விலை வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் உள்ளதா,  அல்லது அதிகப்படியான விலை இருக்கிறதா என்பதையும் தொழில் முனைவோர் இங்கே கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.

06. வாடிக்கையாளர்கள் பொருட்களை அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கும் பொழுது அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபத்தின் அளவு?

மேற்கூறிய  பலவற்றை நாம் பார்க்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தாலும் இவ்வகை வாடிக்கையாளர்கள்  விற்கப்படும் பொருட்களின் மீது எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் தொழில் முனைவோர் சற்று இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால் விற்கும் பொருளில் இருந்து எடுக்கப்படும் லாபத்தின் அடிப்படையில் நிறுவனம் மீண்டும் தங்களிடம் பொருட்களை வாங்குவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதை கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

07. வளர்ந்து வரும் தொழிலில் வாக்காளர்களை எவ்வாறு மேலாண்மை செய்வது?

இவ்வாறாக பொருட்களை விற்கும் வாடிக்கையாளர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பார்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தனது நடப்பு செலவினங்களுக்கு தேவைப்படும் லாபத்தைத் கொடுக்கும் பொருட்களை தவிர்த்து மீதமுள்ள அளவிற்கு மட்டுமே விற்பனைப் அல்லது தயாரிப்பு பொருட்களை பொருட்களை தொழில் நிறுவனங்கள் கடனாக விற்க வேண்டும்.

இவ்வாறாக தொழில் நிறுவனம் தான் கொடுக்கும் கடனுக்கான தொகையை  முடிவெடுத்து அந்த தொகையை தொழிலின் முதல் 10 அல்லது 15 வாடிக்கையாளர்களுக்கு சமமாக அல்லது முன்னுரிமை அடிப்படையில் பங்கிட்டு   பொருட்களை விற்பது தொழில் நிறுவனத்திற்கு லாபகரமாக இருக்கும்.

அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் தொழில் நிறுவனங்கள் வெளியிலிருந்து கடன் வாங்கித்தான் தொழில் நிறுவனத்தின் நடப்பு செலவில் செலவினங்களையும்,  சப்ளையர் இடம் இருந்து கடன் வாங்கிய பொருள் காண பணத்தை திருப்பி அடைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது.

மேற்சொன்ன  தொழில் பொருட்களின் வாடிக்கையாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?  மேலும் அது தொடர்பான பல விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

👉முதல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை தொடவும்..
https://m.facebook.com/groups/657919231463185?view=permalink&id=725568714698236&sfnsn=wiwspwa&extid=SlI2oUjXru6kFEzX 

🎯 இரண்டு மணி நேர இலவச தொழில் முனைவோர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள கீழே  உள்ள விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பை தொடவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdYvus06_Wi-Fr5WM-X2XmHi6QMm3UFeUO7IQJMIvvngoQ6Yg/viewform

📢 🥁🥁 🥁🥁📢ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை Zoom App மூலம் நடைபெறும் இலவச தொழில் முனைவோர் மேலாண்மை முன்னுரை பயிற்சி வகுப்புகளுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/6922347684?pwd=NkJObURmSjhmV3ROVVJEUW9FZWpnZz09

Meeting ID: 692 234 7684
Passcode: 123456

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Entrepreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?