What is Dumbing business and business loss ?உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு என்றால் என்ன ?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு என்றால் என்ன ? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வழக்கம் போல் இந்த பதிவை ஒரு சிறிய கதையுடன் விளக்கிக்கூற உள்ளேன் வாருங்கள் கதைக்குள் போகலாம்.
இரண்டு ஆற்றங்கரை நடுவே பரிசல் ஒன்று இக்கரையில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு அக்கரையில் இறக்கி விட்டு, மீண்டும் அக்கரையில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு இக்கரையில் இறக்குவதை வேலையாக கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
துவக்க காலத்தில் இவர் மட்டுமே பரிசிலை இயக்கி வந்தார். நாளடைவில் தொழில் போட்டியின் காரணமாக பல பரிசல்கள் அங்கே போட்டியாக உருவாகியுள்ளன இதனால் இவர் போட்டியாளர்களை சமாளிக்க விலையை குறைக்க நேரிட்டது.
இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு பரிசளிக்கும் மிதமான எடை, சராசரியான எடை, அதிகப்படியான எடை, மிக அதிகப்படியான எடை என்று ஒன்று உள்ளது.
தொழில் போட்டி வருவதற்கு முன் மிதமான எடையிலேயே இவருக்கு தேவையான வருமானத்தை அந்த பரிசில் தொழிலில் இருந்து அவர் எடுத்து வந்தார்.
ஆனால் தற்போது போட்டியின் காரணமாக அவர் மிக அதிகப்படியான எடையை பரிசலில் ஏற்றினால் ஆபத்து ஆகிவிடும் என்று தெரிந்தும் அவர் பரிசலில் அளவுக்கதிகமான எடையை அவர் சுமக்க வேண்டியுள்ளது.
பரிசலை இயக்குபவர் மிக அதிகப்படியான அளவு எடை வேண்டாம் என்று தெரிவித்தாலும், எடையை ஏற்றுபவர் இடையில் பொருட்களை வேற ஒரு பரிசலில் மாற்றிக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏற்றி செல்கின்றனர்.
இதனால் பரிசிலை இயக்குபவர் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அதிகப்படியான அளவு எடையை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்.
பொருட்களை ஏற்றியவர் சொன்னதுபோல் இடையில் வேறு பரிசல் சுமையை பகிர வந்தது என்றால் பரவாயில்லை. இல்லையென்றால்
ஒன்று பரிசல் அதிகப்படியான அளவில் எடையின் காரணமாக மூழ்கி விடும் அல்லது இது இறுதிவரை ஒரு மிக மிகுந்த கஷ்டத்துடன் அக்கரைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.
இதேபோன்றுதான் பல தொழிலின் உற்பத்தியாளர்கள் பலவகையான கழிவுகளை கொடுத்து வியாபாரிகளை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.
சுகாதாரமற்ற தொழில் போட்டியின் காரணமாக பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு அதிகமாக தனது பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்
விநியோகிஸ்தர்கள்
மொத்த விற்பனையாளர்கள்
சில்லறை விற்பனையாளர்கள்
கடைநிலை வாக்காளர்கள்
என ஒரு குறிப்பிட்ட காலத்தில் மெதுவாக விற்பனையாகி நகர்கின்றன.
இவ்வாறாக வாடிக்கையாளர்களின் வாங்கும் இடைவெளிக்கும் நிறுவனத்தின் உற்பத்திக்கும் நேரடி தொடர்பு அதிகமாகவே இருக்கிறது.
தொழில் போட்டியின் காரணமாக தேவைக்கு அதிகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அவ்வாறு உற்பத்தி செய்த செய்த பொருட்களை அவர்களால் குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.
தொடர்ச்சியாக.
01. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு என்றால் என்ன?
02. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு எத்தனை வகைப்படும்?
03. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு உருவாவதற்கான காரணம் என்ன?
04. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு வியாபாரிகளை எவ்வாறு நட்டத்தில் தள்ளுகிறது?
05. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பில் இருந்து வியாபாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது?
06. வியாபாரிகள் தங்கள் கொள்முதலை எவ்வாறு இலாபகரமாக மேலாண்மை செய்வது?
என்பது போன்ற பலவற்றைப் பற்றி விரிவாக இங்கே பார்க்க இருக்கிறோம்.
இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.
01. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு என்றால் என்ன?
வியாபாரத்தில் வழக்கமாக விற்கும் பொருட்களின் அளவை விட அதிகப்படியான அளவு பொருட்களை வாங்குமாறு வியாபாரிகளை உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவது விற்பனை திணிப்பு எனக் கூறப்படுகிறது.
02. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு எத்தனை வகைப்படும்?
பொதுவாக உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
02A. சுகாதாரமான விற்பனை திணிப்பு
உங்கள் வியாபாரத்தில் விற்கக்கூடிய பொருட்களை மாதம் மாதம் வாங்குவதற்கு பதிலாக மூன்று மாதத்திற்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்வதை சுகாதாரமான விற்பனை திணிப்பு எனக்கூறலாம்.
இதற்கான பேமென்ட் அனைத்தும் இருவரின் ஒப்புதல் அடிப்படையின் கீழ் வருகிறது.
02B. சுகாதாரமற்ற விற்பனை திணிப்பு
உங்கள் வியாபாரத்தில் பிரிக்க முடியாத பொருட்களை மாதம் மாதம் வாங்குவதற்கு பதிலாக மூன்று மாதத்திற்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்வதை சுகாதாரமற்ற விற்பனை திணிப்பு எனக்கூறலாம்.
இதற்கான பேமென்ட் அனைத்தும் சப்ளையர் எடுக்கும் முடிவின் அடிப்படையின் கீழ் வருகிறது.
03. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு உருவாவதற்கான காரணம் என்ன?
உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு உருவாவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டாக இங்கே பார்க்க இருக்கிறோம்.
03A. சுகாதாரமற்ற தொழில் போட்டி.
03B. இலக்குகளின் அடிப்படை நிறுவனங்கள் செயல்படுதல்.
03C.
04. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பு வியாபாரிகளை எவ்வாறு நட்டத்தில் தள்ளுகிறது?
பல நிறுவனங்கள் அதன் இலக்கை அடைவதற்காக இடையில் இருக்கும் விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் போன்றவர்களிடம் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை பலவித சலுகைகளுடன் வாங்குமாறு திணிக்கின்றனர்.
இதன் காரணமாக வியாபாரிகள் தேவையற்ற முதலீடுகளை விரையம் செய்ய இங்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்
இதன் விளைவாக பல வியாபாரிகள் லாபம் தரும் பொருட்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்து விற்பனையாகாத பொருட்களில் முதலீடு செய்வதின் காரணமாக நட்டத்தை சந்திக்க நேரிடுகிறது.
05. உற்பத்தியாளர்களின் விற்பனை திணிப்பில் இருந்து வியாபாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது?
ஒவ்வொரு தொழிலிலும் அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்றார் போலவும், ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார் போலவும் விற்பனையாகும் பொருட்களின் அளவு அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அந்தப் பொருட்களின் அடிப்படையில் பொருட்களை வாங்கி விற்றால் போதுமானது,
சில சூழ்நிலையில் கணக்கிடப்பட்ட பொருட்களுக்கு அதிகமாக விற்பனை நடக்கிறது.
ஒரு சில சூழ்நிலைகளில் கணக்கிடப்பட்ட பொருட்களுக்கு குறைவாகவும் விற்பனையாகிறது.
எனவே ஒவ்வொரு தொழிலிலும் ஒரு சராசரியான அல்லது பாதுகாப்பு சரக்கு இருப்பை உறுதி செய்து அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்தால் போதுமானதாக இருக்கும்.
06. வியாபாரிகள் தங்கள் கொள்முதலை எவ்வாறு இலாபகரமாக மேலாண்மை செய்வது?
ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்களது வியாபாரத்தில் அல்லது தொழிலில் விற்கப்படும் பொருட்களை எந்த அளவிற்கு வாங்க வேண்டும், வாங்கிய பொருட்கள் எத்தனை நாட்களில் விற்றுத் தீரும், இருக்கும் பொருள்களில் இருக்கும் பொருட்களின் மொத்த லாபம் எவ்வளவு, அவற்றுக்கு உண்டான முதலீட்டு வட்டி எவ்வளவு, வரும் லாபத்திற்கு முதலீட்டு லாபம் மற்றும் வித்தியாசம் என்ன? என்பது போன்ற பல மேலாண்மை கூறுகளை நீங்கள் சரக்கிருப்பு மற்றும் கொள்முதல் மேலாண்மையின் நாட்கள் வகுப்புகளில் மட்டுமே பெற முடியும்.
மேற்சொன்ன பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
கருத்துகள்
கருத்துரையிடுக