What is break-even point of business ?சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன?
Story 25.break-even point of business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் தொழில்களின் சம குறியீட்டு புள்ளி என்றால் என்ன? அதனை எவ்வாறு நிர்வாகம் செய்வது? என்பதை பற்றி இந்தப்பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். இங்கு ஒரு சிறிய கதை உடன் சொல்லவந்த விளக்கத்தைக் கூறி உள்ளேன், கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். ஒரு இளநீர் வியாபாரி இளநீர் ஒன்றை பத்து ரூபாய்க்கு வாங்கி அதன் மீது ஐந்து ரூபாய் லாபம் வைத்து 15 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தினம்தோறும் அவருக்கு ...