what is Monopoly of Business ?முற்றுரிமை தொழில்கள் என்றால் என்ன?
Story 24. Monopoly of Business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் முற்றும்மை தொழில்கள் Monopoly of Business என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? என்பதைப் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம். வணக்கம் வழக்கம்போல இந்த பதிவை சிறிய கதையுடன் தொடங்கியிருக்கிறேன். 80's kids என்று சொல்லக்கூடிய எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு நான் சொல்லவரும் கதை புரியும். நம் தாத்தா பாட்டி காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் வாங்க வேண்டும் என்றால் அந்தப் பொருட்க...