Reserves and surplus of your business ?தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது?
Story 37. Reserves and surplus of your business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம். வழக்கம்போல் இந்த பதிவை சிறுகதை எழுத ஆரம்பிக்க போகிறேன் வாருங்கள் கதையுடன் ஆரம்பிக்கலாம். உற்பத்தி சாந்த தொழிலோ, அல்லது விற்பனை சார்ந்த தொழிலோ, அல்லது சேவை சார்ந்த தொழிலோ, எந்த ஒரு தொழிலிலும் வாடிக்கையாளரின் தேவை என்பது மாறிக...