What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?
Story 40A. What is Sales Tax ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் உங்கள் தொழிலுக்கான விற்பனை வரி என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம். வழக்கம் போல் இந்த பதிவை ஒரு சிறிய கதையுடன் ஆரம்பிப்போம். வாருங்கள் கதைக்குள் போகலாம். ஒரு சமையல் எண்ணெய் வாங்கி விற்கும் தொழில் முனைவோர் தொழிலை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏனோ அவருக்கு இன்றளவும் தொழிலின் விற்பனை வரி மற்றும் வருமான வரியை பற்றி விளக்கம் தெரியாமல் இருக்கிறது. இத...