How to manage high and low profit stocks in your business ?தொழிலில் குறைந்த மற்றும் அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை எவ்வாறு மேலாண்மை செய்யவேண்டும்?
Story.62. How to manage high and low profit stocks in your business ? ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர். 🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏 இந்த பதிவில் தொழிலில் குறைந்த மற்றும் அதிக அளவு லாபம் கொண்ட பொருட்களை எவ்வாறு மேலாண்மை செய்யவேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம். ஒவ்வொரு தொழிலும் தன் தொழிலுக்கு தேவையான இலக்கை தீர்மானித்து அவற்றின் அடிப்படையில் செயல்படும் பொழுது, தொழில்களின் இலக்கை அடைவதற்கு இந்த அதிக அளவு லாபம் கொண்ட பொருட்கள...