what is Monopoly of Business ?முற்றுரிமை தொழில்கள் என்றால் என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் முற்றும்மை தொழில்கள் Monopoly of Business என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? என்பதைப் பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
வணக்கம் வழக்கம்போல இந்த பதிவை சிறிய கதையுடன் தொடங்கியிருக்கிறேன்.
80's kids என்று சொல்லக்கூடிய எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு நான் சொல்லவரும் கதை புரியும். நம் தாத்தா பாட்டி காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் வாங்க வேண்டும் என்றால் அந்தப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டுமே கிடைக்கும்.
மளிகை பொருட்களுக்கு ஒரு ஒரு கடை சமையல் எண்ணிக்கை ஒரு கடை
மரச்சாமான்களை ஒரு கடை
நெல் அரைக்க ஒரே ஒரு ரைஸ்மில்
இதை போன்ற ஒரு பகுதியில் ஒரு சாவை ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே இருப்பது முற்றுரிமை என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் அந்த காலத்தில் தொழில் போட்டி என்பது அந்த அளவு கிடையாது பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை திறம்பட நடத்தி வந்தனர்.
ஆனால் இப்பொழுது அவர்களை ஒரு சிறிய பானிபூரி கடையை எடுத்து கொண்டால் கூட அதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
சரி வாங்க பதிவுக்கு போகலாம். இந்த பதிவில்.
01. முற்றுரிமை தொழில்கள் என்றால் என்ன?
02. முற்றுரிமை தொழில்கள் உருவாக காரணங்கள் எவை?
03. உங்கள் தொழிலில் நீங்கள் முற்றுரிமை ஆன நபராக மாற என்ன செய்ய வேண்டும்?
04. பொதுவாக முற்றுரிமை எத்தனை வருடங்கள் நீடிக்கும்?
05. முற்றுரிமைக்கு எதிராக அரசு செய்யும் நடவடிக்கைகள் என்னென்ன?
போன்றவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்க வைக்கிறோம்.
இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது.
01. முற்றுரிமை தொழில்கள் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையையோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதை முற்றுரிமை தொழில்கள் என்றழைக்கப்படுகின்றன.
இன்றளவும் ஒரு சில கிராம பகுதியிலும் ஒரு சில நகர் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒரு சில நபர்கள் மட்டுமே பரிந்துரைக்க படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
02. முற்றுரிமை தொழில்கள் உருவாக காரணங்கள் எவை?
புதுமையான கண்டுபிடிப்புகளான
இயந்திரம் அறைகலன்கள் டூவீலர் கார் மற்றும் கட்டுமானத் துறையின் புது தொழில்நுட்பங்கள் இவ்வாறாக பல வற்றை நாம் உதாரணமாகக் கூறலாம்.
புது வகையான சேவை முறைகள், கணினி மற்றும் இணைய தளங்களில் மாறுபட்ட சேவை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதன்மூலம் முற்றுரிமை வாய்ந்த நிறுவனங்களாக திகழ்ந்து வருகின்றன.
03. உங்கள் தொழிலில் நீங்கள் முற்றுரிமை ஆன நபராக மாற என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக இந்த முற்றொருமை முறைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை
01. பொருட்களுக்கான முற்றுரிமை
02. இடத்திற்கான முற்றுரிமை
03. சேவைக்கான முற்றுரிமை
இதனை இங்கு சற்று விரிவாக பார்ப்போம்.
01. பொருட்களுக்கான முற்றுரிமை
பொருள்களுக்கானமுற்றுரிமை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் உங்களிடம் மட்டுமே கிடைக்கப்படும் இதற்கு நீங்கள் நிர்ணயிப்பதே விலை என்பது நீங்கள் அறிந்திருக்கும் ஒன்று.
02. இடத்திற்கான முற்றுரிமை
ஒரு பொருள் பல இடங்களில் கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உங்களிடம் மட்டுமே இந்தப் பொருள் கிடைப்பது இடத்திற்கான முற்றுரிமையை குறிப்பிடுகிறது.
03. சேவைக்கான முற்றுரிமை
ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சேவை ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே கிடைப்பது சேவைக்கானமுற்றுரிமை என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் அல்லது சேவையை உங்களது வாடிக்கையாளர் உங்களிடம் தொடர்ந்து வாங்குவதற்கு நீங்கள் உங்கள் போட்டியாளர் பண்படுத்தும் வழியில்லாது ஒரு தனி வழியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது இங்கு முக்கியமாக கருதப்படுகிறது.
ஒரு பொருள் அனைத்திலும் கிடைத்தாலும் உங்களிடம் வாங்குவதில் ஒரு தனிச்சிறப்பு இருக்க வேண்டும்.
அவ்வாறான தனிச் சிறப்பு என்ன என்று என்பதை உங்கள் தொழில் நீங்கள் கண்டுபிடித்து அதனை செயல்படுத்தி வரும்போது உங்களது பொருள்களையும் சேவைகளையும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் வாங்க முற்படுவார்கள்.
04. பொதுவாக முற்றுரிமை எத்தனை வருடங்கள் நீடிக்கும்?
இவ்வகையான முற்றுரிமை தொழில்கள் தொடர்ந்து தன் விற்கும் பொருட்களில் முற்றுரிமை ஆக இருக்கு அதன் செயல்பாடுகளில் ஒரு சில கொள்கைகளை உருவாக்கி அதன்படி செயல்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் உங்கள் தொழிலின் மற்றும் முற்றுரிமை காலம் ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கும்.
அல்லது உங்கள் தொழிலின் போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழ்நிலையில் உங்கள் முற்றுரிமை வீரியம் குறைந்து காணப்படும்.
05. முற்றுரிமைக்கு எதிராக அரசு செய்யும் நடவடிக்கைகள் என்னென்ன?
மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள், மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருட்கள், மற்றும் பல முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்யும் முற்றுரிமை தொழில் துறைகள் வளர்வதை பார்த்துக்கொண்டு அரசானது சும்மா இருக்காது. இந்த முற்றுரிமைக்கு எதிரான போட்டியாளர்களை உருவாக்குவதில் வழிதேடி அவர்களை ஊக்குவித்து முற்றுரிமை ஒழிக்க போராடி வரும். என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை
மேற்சொன்ன தொழிலின் விளக்கங்களுக்குகான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின் தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக