Reserves and surplus of your business ?தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உங்கள் தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன? அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவுக்கு போகலாம்.
வழக்கம்போல் இந்த பதிவை சிறுகதை எழுத ஆரம்பிக்க போகிறேன் வாருங்கள் கதையுடன் ஆரம்பிக்கலாம்.
உற்பத்தி சாந்த தொழிலோ, அல்லது விற்பனை சார்ந்த தொழிலோ, அல்லது சேவை சார்ந்த தொழிலோ, எந்த ஒரு தொழிலிலும் வாடிக்கையாளரின் தேவை என்பது மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் தொழில் நிறுவனங்கள் தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வைக்க அவர்கள் விற்கும் பொருட்களிலும் சேவைகளிலும் சிறு சில மாற்றங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும் அவ்வாறு செய்துகொண்டே இருந்தால் மட்டுமே தொழிலில் தொடர்ந்து நிலைத்து நிற்க முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அவ்வாறாக பொருள்களின் அல்லது சேவைகளின் மாற்றத்திற்கு எதிர் கால முதலீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இவ்வாறாக எதிர்காலத்தில் தேவைப்படும் முதலீட்டை திடீரென்று ஒரு வங்கியிலிருந்து கடனாகவோ அல்லது மற்றவர்களிடம் இருந்து முதலீடாக பெறுவது மிகவும் கடினமாக செயலாக எந்த ஒரு தொழிலுக்கும் இருக்கும். எனவே தொழில் நிறுவனங்கள் மாதம் மாதம் சம்பாதிக்கும் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை எடுத்து சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது பெரிய தொகையாக மாறி இவ்வகையான எதிர்கால முதலீட்டுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உதாரணத்திற்கு சொல்லப்போனால், இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் துவக்க காலத்தில் மிகவும் சுலபமான முறையில் தனது வாகன உற்பத்திகளை தயாரித்து மக்களுக்கு வழங்கிய வழங்கி வந்தனர். காலப்போக்கில் மக்களுடைய அது சலிப்பு தட்டிய பழைய ஒன்றாக மாறும் போது அவர்கள் புதியது உற்பத்திகளை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
என்பதை உணர்ந்த உற்பத்தி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல புதிய புதிய மாடல்களை உற்பத்தி செய்து இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் புதிய வண்டிகளை உருவாக்கி வருகின்றனர்.
மேலும் இதனை சற்று விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.
01.தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன?
02. தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பு எந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும்?
03. தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பின் நன்மைகள் என்னென்ன?
04.தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பின் தீமைகள் என்னென்ன?
05.தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பு எவ்வாறு உருவாகிறது?
06. எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைபை எவ்வாறு மேலாண்மை செய்வது?
என்பது குறித்த பல விஷயங்களைப் பற்றி விவரி தெளிவாகவும் விளக்கமாகவும் விரிவாகவும் பார்க்க கீழே பார்க்க உள்ளோம் உங்கள் பதிவுக்கு போகலாம்.
இதில் முதலில் நாம் பார்க்க இருப்பது.
01.தொழிலின் எதிர்கால முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்றால் என்ன?
பிற்காலத்தில் வியாபாரத்தை அல்லது உற்பத்தியை பெருக்குவதற்காக தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொகையை சிறிது சிறிதாக துவக்க காலத்திலிருந்தே நிறுவன லாபத்தில் இருந்து சேமிக்க படுவதை எதிர்காலம் முதலீட்டுக்கான சேமிப்பு வைப்பு என்று அழைக்கிறோம்.
02. தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பு எந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும்?
சிறிய அளவு தொழில்கள் அல்லது பெரிய கட்டுமானங்கள் பெரிய உற்பத்திக் கூடங்கள் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பயணிக்கக்கூடிய தொழில் களுக்கு மட்டுமே எதிர் கால வைப்பு நிதி என்பது மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமாக இருக்கும்.
03. தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பின் நன்மைகள் என்னென்ன?
பிற்காலத்தில் தேவைப்படும் தொழில் முதலீட்டுக்கு தேவையான முழு தொகையோ அல்லது பகுதியளவு தொகையோ தனது சொந்த நிறுவனத்திலிருந்து சம்பாதித்து சேர்த்து வைக்கப்பட்ட தொகையானது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் களத்தில் தேவைப்படும் தொழிலுக்கு உண்டான முதலீட்டை கடன்கள் மூலம் பெறுவதினால் அதற்குண்டான வட்டியானது மாதமாதம் கூடிக்கொண்டே செல்லும் இந்த செலவினங்களையும் நிறுவனங்கள் மட்டுமே ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
04.தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பின் தீமைகள் என்னென்ன?
எதிர்கால முதலீட்டுக்காக சேகரிக்கப்படும் தொகையானது சரியான திட்டமிடலின் அடிப்படையில் முதலீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு சரியான திட்டமிடுதலின் அடிப்படையில் செயல்படாத சூழ்நிலையில் சேகரிக்கப்பட்ட அனைத்து முதலீட்டுத் தொகையானது ஒரு நிலையற்ற தன்மைக்கு தள்ளப்பட சூழ்நிலை உருவாகிறது.
05.தொழிலின் எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைப்பு எவ்வாறு உருவாகிறது?
தன்னுடைய தொழிலிலிருந்து உபரி வருமானத்தை ஈட்டும் தொழில்கள் மட்டுமே எதிர் கால முதலீடு சேமிப்பு அமைப்பை உருவாக்கி செயல்படுத்த முடியும். மாறாக மாதாந்திர செலவிற்கு லாபம் ஈட்ட முடியாத தொழில்கள் இதனை செய்வதில் சற்று கடினத்தை பார்க்க முடிகிறது.
06. எதிர்கால முதலீட்டு சேமிப்பு வைபை எவ்வாறு மேலாண்மை செய்வது?
எதிரி கால முதலீடு சேமிப்பு வைப்பை மலன்மை செய்வதில் பல முக்கிய கூறுகள் உள்ளன. அவையாவன,
6A.மாதாந்திர சேமிப்புத் தொகையின் அளவு.
6B.சேமிப்புத் தொகையில் மீதான வட்டி.
6C. சேமிப்பு தொகை வேறெங்கும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,
6D.பல்வேறு எதிர்காலத் திட்டமிடலுக்கு இந்த முதலீட்டுத் தொகை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கூடுதலாக கவனித்தல்.
இவ்வாறாக பல முக்கிய கூறுகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
மேற்சொன்ன தொழிலின் எதிர்கால முதலீட்டு விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக