What is Sales Tax ? விற்பனை வரி என்றால் என்ன?

Story 40A. What is Sales Tax ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலுக்கான விற்பனை வரி என்றால் என்ன?   அவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.

வழக்கம் போல் இந்த பதிவை ஒரு சிறிய கதையுடன் ஆரம்பிப்போம். வாருங்கள் கதைக்குள் போகலாம்.

ஒரு சமையல் எண்ணெய் வாங்கி விற்கும் தொழில் முனைவோர் தொழிலை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஏனோ அவருக்கு இன்றளவும் தொழிலின் விற்பனை வரி மற்றும் வருமான வரியை பற்றி விளக்கம் தெரியாமல் இருக்கிறது.
இதனால் அவர் பல இழப்புகளை தொழிலிலும் மற்ற வகையிலும் சந்தித்து வருகிறார். அவர்களால் அவர்களுக்காக மட்டுமே இந்த பதிவு.

ஓர் சமையல் எண்ணெய் குடுவையை ரூபாய் 3000+GST 18% வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இங்கே ஒரு குடுவை காண தரையிறங்கும் செலவு ரூபாய்3540/- இதனுடன் ரூபாய் 500 ரூபாய் லாபம் வைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 4040/- விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருசில ரெகுலர் இல்லாத வாடிக்கையாளர்கள் இவரது கடைக்கு வந்து அந்த தொகைக்கு  பொருளை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் பெருவாரியான வாடிக்கையாளர்களில் கடைக்கு வருவதை தவிர்க்கின்றனர் அப்படியே வந்தாலும் பொருட்களை ரூபாய் 3500+ GST18% விலைக்கு கேட்கிறார்கள். இந்த விலைக்கு இவரால் கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் இவர் ஒரு GST ஆள் பதிவு செய்யப்படாத விற்பனையாளர் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே.

இங்கு விற்பனை வரி உள்ளீடுகள் என்றால் என்ன என்பதை இந்த விற்பனையாளர் அறிந்திருக்காத ஒரே காரணத்தினால் இவருக்கு இங்கே விற்பனை இழப்பு  என்பது நடைபெறுகிறது.

அரசிடம் இருந்து கிடைக்கும்( input tax  credit ) என்று சொல்லக்கூடிய வரி உள்ளிடுக மூலம் கிடைக்கும் வரி சலுகை இவருக்கும் இவரது வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்காமலே போய்விடுகிறது.

இங்கே வரி உள்ளீர்கள் என்பதை ஒரு சிறிய விளக்கத்துடன் சொல்வது எனது தலையாய கடமையாக இங்கு இருக்கிறது. வாருங்கள் அதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஒரு உதாரணமாக ரமேஷ் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். சுரேஷ் என்பவர் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

ரமேஷ் நடத்திவரும் மளிகைக் கடையிலிருந்து சுரேஷ் என்பவர் தனது குடும்பத்திற்காக மளிகைப் பொருள்களை கடனுக்காக 3000 ரூபாய்க்கு வாங்கி செல்கிறார். சுரேஷ் நடத்தும் காய்கறி கடையில் இருந்து ரமேஷ் என்பவர் தனது குடும்பத்திற்காக 2000 மதிப்புள்ள காய்கறிகளை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இங்கே ரமேஷுக்கு தரவேண்டிய  3 ஆயிரத்தை சுரேஷ் வாங்கிய கடன் தொகையை இரண்டாயிரத்து கழித்துவிட்டு மீதமுள்ள ஆயிரத்தை மட்டும் ரமேஷுக்கு தந்தால் போதுமானது.

இதேபோல் தொழிலில் விற்கப்படும் பொருள்களுக்கான மொத்த வரியின் கூட்டுத்தொகையை வாங்கப்படும் பொருள்களுக்கான மொத்த வரியின் கூட்டுத் தொகையில் கழித்து மீதம் வரும் தொகை மற்றும் அதற்கு உண்டான கணக்குகளை அரசாங்கத்திடம்  சமர்ப்பிப்பது வரி உள்ளிடுக என்று அழைக்கப்படுகிறது.

அரசாங்கத்திடம் நாம் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே இத்தகைய வரிச்சலுகைகள் நமக்கு கிடைக்கும். இல்லாத சூழ்நிலையில் விற்பனையாளர்களின்  முழு வரி தொகையையும் கட்டி பின்பு பொருள்களை வாடிக்கையாக விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எத்தகைய சூழ்நிலையிலும் வியாபாரிகளுக்கு விற்பனை இழப்பு  என்ற ஒன்று உருவாகிறது.

இவ்வாறாக இந்த பதிவில்  நாம் விற்பனை வரி சம்பந்தமான பலவற்றை பார்க்க இருக்கிறோம்.


01. விற்பனை வரி என்றால் என்ன?
02. விற்பனை வரியின் வகைகள்(Types) என்னென்ன?
03. தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை வரியை எவ்வாறு(GST) அழைக்கிறார்கள்?
04.விற்பனை வரியை எவ்வாறு பதிவு (slaes  tax  filling ) செய்வது?
05. விற்பனை வரி (input tax  credit )உள்  இடுகை என்றால் என்ன?
06. விற்பனை வரியை எவ்வாறு மேலாண்மை செய்வது?

என்பது என்பது போல் பல விஷயங்களை இங்கே குறிப்பாக விரிவாகவும் தெளிவாகவும் பார்க்க இருக்கிறோம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. விற்பனை வரி என்றால் என்ன?

உற்பத்தியான பொருட்கள் விற்பனைக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில்  பொருட்களின் தயாரிப்பு விலையை கண்டுபிடித்து அதன்மீது இலாபத்தையும் கூட்டி வரும்  தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக கணக்கிடுவதை விற்பனைவரி என்று சொல்கிறோம்.

மொத்த விற்பனை விலையோ அல்லது சில்லரை விற்பனை விலையோ இதில் கணக்கிடப்படும் வரியை இறுதியாக அதை வாங்கும்  நுகர்வோர் விற்பனை வரியை ஏற்கிறார்.

02. விற்பனை வரியின் வகைகள்(Types) என்னென்ன?

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விற்பனையில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அரசிற்கு வருவாய் வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த விற்பனை வரி ஆகும். முந்தைய காலத்திலிருந்தே  விற்பனை வரியில் பல மாற்றங்கள்  செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் தலையாய நோக்கம் என்பது அரசுக்கு வரும் வரியானது எந்த  தடங்கலுமின்றி வேகமாக அரசிடம் வந்து சேரவேண்டும் என்பதே.

இந்தியாவில் VAT  எனும் வழிமுறை பயன்பாட்டில் இருந்து வந்தது வந்தது.01.07.2017 தேதிக்கு பிறகு GST (Goods and Service Tax) என்று சொல்லக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் இருந்து வருகிறது.

03. தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை வரியை எவ்வாறு(GST) அழைக்கிறார்கள்?

ஒரே நாடு ஒரேவரி  என்ற கூற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த சரக்கு மற்றும் சேவை வரி அல்லது GST என்று அழைக்கப்படுகிறது. இந்த வரியானது கடந்த  1ஜூலை 2017 ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. இது நாம் வரி செலுத்தும் முறையில் பெரும்மாற்றங்களை கொண்டு கொண்டுவந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. மிக முக்கியமாக நமது இந்திய நாட்டின் வரிவிதிப்பு முறைகளில் சீர் படுத்துவதற்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது இந்த வகையான வரி முறை. இதனடிப்படையில் இந்தியாவில் வாங்கப்படும் பொருட்களுக்கு ஒரே விலை ஒரே வழி என்ற கூற்றின் அடிப்படையிலேயே இந்த ஜிஎஸ்டி செயல்பட்டு வருகிறது.

04.விற்பனை வரியை எவ்வாறு பதிவு (slaes  tax  filling ) செய்வது?

விற்பனை வரி என்பது ஒவ்வொரு தொழிலும் மாதம் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை தனது நிறுவனத்தின்  கொள்முதல் மற்றும் விற்பனையை  அரசிடம் பதிவு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திடம் வரியாக செலுத்துவது விற்பனை வரி பதிவு என்று அழைக்கப்படுகிறது.

05. விற்பனை வழியில் (input tax  credit )உள்  இடுகை என்றால் என்ன?

மாதா மாதமோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ தொழிலில் விற்கப்படும் பொருள்களுக்கான வரியை மக்களிடமிருந்து  பெற்று அதன் கூட்டுத்தொகையை அரசிடம்  செலுத்தப்பட வேண்டும்.

மாறாக மக்களிடம் இருந்து வாங்கப்படும் வரியின் கூட்டுத் தொகையில் இருந்து நாம் நமது சபையிடம் இருந்து வாங்கும் பொருள்களுக்கான மொத்த வரியின் கூட்டுத் தொகையில் கழித்து மீதம் வரும் தொகை மட்டும் அரசாங்கத்திடம் வரியாகச் செலுத்துவது அல்லது சமர்ப்பிப்பது வரி உள்ளிடுக என்று அழைக்கப்படுகிறது.

06.விற்பனை வரியை எவ்வாறு மேலாண்மை செய்வது?

விற்பனை வரியை மேலாண்மை செய்வதில் பல நிலைகள்  மற்றும் செயல்பாடுகள் உள்ளன.

அவையாவன.
01. GST ஆல் பதிவுசெய்யப்பட்ட சப்ளையர் உடன் இருந்து மட்டுமே பொருட்களை வாங்குவது.
02. விற்பனை வரி உள்ளீடு கையை சரியாக கணக்கிடுவது.
03. GST ஆல் பதிவு செய்யப்படாத நபர்களிடம் இருந்து பொருட்களை வாங்கும்பொழுது என்ன செய்ய வேண்டும்?
04. மாதம் மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை GST ஐ பதிவு செய்யும் போது என்னென்ன செய்ய வேண்டும்.
05. அரசிடமிருந்து கிடைக்கும் வரிச் சலுகையை முழுமையாக எவ்வாறு பயன்படுத்துவது?
என்பன குறித்த பல செயல்பாடுகள் உள்ளன.

மேற்சொன்ன தொழிலின் வரிகள் மற்றும் அதற்கான  விளக்குகளுக்கான  கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?