Biz -Analyst Application ?Biz -Analyst என்றால் என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் Biz -Analyst என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மைசெய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
உங்கள் தொழிலின் தினசரி செயல்பாடுக்கும் உங்களுக்குமான இடைவெளியை குறைப்பதற்காகவே உருவாக்கப்பட்டதே இந்த Biz -Analyst எனும் செயலி.
இதில் நாம்.
01.Biz -Analyst என்றால் என்ன?
02.இந்த செயலின் Biz -Analyst மூலம் நீங்கள் பெறக்கூடிய தகவல்கள் என்னென்ன?
03. ஒரு தொழில் மேலாண்மைக்கு இந்த செயலி Biz -Analyst எவ்வாறு உதவுகிறது?
04.பெறப்படும் தகவல்களை வைத்து எவ்வாறு உங்கள் தொழிலை முறைபடுத்துவது?
என்பதைப்பற்றி பார்க்கவிருக்கிறோம்.
இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.
01.Biz -Analyst என்றால் என்ன?
ஒரு தொழில் முனைவோர் அல்லது முதலாளி நிறுவனத்தின் கணக்காளரின் உதவி இல்லாமல் தன் நிறுவனத்தின் கணக்குகள் அனைத்தையும் உடனுக்குடன் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த செயலி.
02.இந்த செயலின் Biz -Analyst மூலம் நீங்கள் பெறக்கூடிய தகவல்கள் என்னென்ன?
இந்த செயலின் மூலம் நிறுவனத்திற்கு தேவையான பல தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது.
அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்.
2A. உங்கள் நிறுவனத்துக்கு வர வேண்டிய வரவினங்கள் (Bills Receivable)
2B. நீங்கள் செலுத்தவேண்டிய செலுத்துதல்கள்(Bills Payables)
2C. விற்பனை பதிவுகள் (Sales Bills and Register)
2D. கொள்முதல் பதிவுகள் (Purchase Bills and Register)
2E. சரக்கு இருப்பு மற்றும் விலை விவரங்கள் (Stock Availability and pricing )
2F. ஒரு குறிப்பிட்ட பொருளை விற்றதின் மூலம் கிடைத்த லாபம் (Profit from sales)
2G. ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் ஒரு வருடத்திற்கு உண்டான மொத்த பரிவர்த்தனைகள்.(Full Transaction of Particular Customers)
இதுபோன்ற மேலும் பல தகவல்களை நாம் இந்த செயலியின் மூலம் பெற முடியும்.
03. ஒரு தொழில் மேலாண்மைக்கு இந்த செயலி Biz -Analyst எவ்வாறு உதவுகிறது?
ஒரு தொழிலை தொடங்கினோமா, வரும் வாடிக்கையாளர்களை வைத்து தொழிலை நடாத்தினோமா, என்று இல்லாமல் மாதம் மாதம் தொழிலுக்குத் தேவைப்படும் செலவீனங்களுக்கு உண்டான லாபத்தை எவ்வாறு எடுப்பது?
அதற்கு நான்
வருடம் முழுக்க எத்தனை பொருட்களை விற்கவேண்டும்?
மாதம் முழுக்க எத்தனை பொருட்களை விற்கவேண்டும்?
வாரம் முழுக்க எத்தனை பொருட்களை விற்கவேண்டும்?
நாள் முழுக்க எத்தனை பொருட்களை விற்க வேண்டும்?
என்பது போன்ற தகவல்களை உடனுக்குடன் தினந்தோறும் பெற முடிகிறது.
04.பெறப்படும் தகவல்களை வைத்து எவ்வாறு உங்கள் தொழிலை முறைபடுத்துவது?
4A.தொழில் அதிகம் விற்கும் பொருட்கள் என்னென்ன?
4B.தொழில் அதிக லாபம் தரும் பொருட்கள் என்னென்ன?
4C.தொழில் விற்காமல் தேங்கி உள்ள பொருட்கள் என்னென்ன?
என்பது போன்ற பல மேலாண்மை கணக்கீட்டு விவரங்களுக்கு உதவிகரமாக இருப்பது இந்த Biz -Analyst எனும்செயலி.
மேலும் இந்த Biz -Analyst செயலி தொடர்பான பல தகவல்களுக்கும் மற்றும் பயிற்சிகளுக்கும் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Tally Trainer
Auro Enterprises
9003314640
கருத்துகள்
கருத்துரையிடுக