Debtors repayment period ?கடனாளிகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்றால் என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோருக்காலுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் உங்கள் தொழிலின் கடனாளிகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்றால் என்ன? அது அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது பற்றி இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
இந்த பதிவில்
01.வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம்Debtors repayment period என்றால் என்ன?
02. வாடிக்கையாளர் திரும்ப செலுத்தும் காலத்தினை எத்தனை வகைப் படுத்தலாம்?
03. வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
04. வாடிக்கையாளர் திருப்பி செலுத்தும் காலத்தையும் நிறுவனம் தனது சப்ளையர்கள் திருப்பி செலுத்தும் காலத்தையும் எவ்வாறு செய்வது மேலாண்மை செய்வது?
05. ஒரு முறையான பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களை எவ்வாறு கட்டமைப்பது?.
போன்றவற்றை விரிவாகப் பார்க்கவிருக்கிறோம் வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
01.வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம்Debtors repayment period என்றால் என்ன?
உங்கள் தொழில் விற்கப்படும் பொருளை கடனுக்கு வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களை பற்பல கடனாளிகள் என்று அழைக்கிறோம். இவரகக கடனுக்கு வாங்கி செல்லும் பொருட்களுக்கு உண்டான பணத்தை எந்த கால கட்டத்திற்குள் வாடிக்கையாளர்கள் திருப்பித் தருகிறார்கள் என்பதைப் பற்றி விளக்குவதே இந்த வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் அது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவி கரமாகவும் பாதகமாகவும் இருக்கின்றது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
02. வாடிக்கையாளர் திரும்ப செலுத்தும் காலத்தினை எத்தனை வகைப் படுத்தலாம்?
இந்த வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம் என்பது
தொடர்ச்சியாக பொருட்களை வாங்குபவர்கள்,
இவர்கள் தான் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை உடனுக்குடன் தந்து விடுகிறார்கள்.
சிறிது காலம் விட்டு பொருட்களை வாங்குவீர்கள், இவர்கள் தான் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை சற்று காலம் இடைவெளி விட்டு தருகிறார்கள்.
எப்போதாவது ஒருமுறை பொருட்களை வாங்குபவர்கள், எப்போதாவது வாங்கும் இவர்கள் அடுத்த பொருளை வாங்கும்போது மட்டுமே பழைய பணத்தை கொடுத்து அடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
என் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பார்க்கப்படுகிறது.
03. வாடிக்கையாளர் திரும்பச் செலுத்தும் காலம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன?
தொடர்ச்சியாக பொருட்களை வாங்குபவர்கள் தான் கடைசியாக ஒரு ஒரு பொருளை வாங்கி அதை விற்ற பின் அடுத்த பொருளை வாங்குவதற்கு ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கொடுப்பார்கள்.
இந்தப் பரிமாற்றம் மாதத்திற்கு பல முறை அல்லது நான்கு முறை ஐந்து முறை அதிகப்படியான முறையில் இருக்கும்.
சிறிது காலம் கழித்து பொருட்களை மற்றும் எப்போதாவது ஒரு பொருட்களை வாங்குபவர்கள் அவர்கள் அடுத்த பொருளை வாங்கும் வரையிலும் தான் வாங்கிய பொருட்களை உண்டான பணத்தை அவர்களிடம் வைத்துக் கொண்டிருப்பார்கள் இத்தகைய வாடிக்கையாளர்களின் மூலம் நிறுவனத்தின் முதலீட்டு தொகை எனது அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
04. வாடிக்கையாளர் திருப்பி செலுத்தும் காலத்தையும் நிறுவனம் தனது சப்ளையர்கள் திருப்பி செலுத்தும் காலத்தையும் எவ்வாறு செய்வது மேலாண்மை செய்வது?
எப்படி இருந்தாலும் சரி ஒரு பொருட்களுக்கான சப்ளையர் நமக்கு கொடுத்த கடனுக்கு உள்ளான தேதிக்குள் விட்ட பொருளுக்கான பணத்தை தனது வாடிக்கையாளர் இருந்து வாங்கி விட்டால் சரி.
சப்ளையர் கொடுத்த நாட்களை தாண்டி விற்ற பொருட்களுக்கு உண்டான பணம் தனது வாடிக்கையாளர்களின் கைகளில் மாட்டி இருக்கும் பொழுது தொழில் நிறுவனம் சப்ளையருக்கு தர வேண்டிய பணத்திற்குகுண்டான முதலை கடனாக வங்கியில் இருந்து பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
05. ஒரு முறையான பெறுதல்களையும் மற்றும் செலுத்துதல்களை எவ்வாறு கட்டமைப்பது?.
வியாபாரத்தில் ஒரு பொருள் கொள்முதல் செய்யும் பொழுது பொழுதே அந்தப் பொருளின்
5A.கொள்முதல் விலை என்ன?
5B. விற்பனை விலை என்ன?
5C.எத்தனை நாட்களுக்குள் அந்த பொருட்கள் விற்க வேண்டும்?
5D.என்ன இந்த வாடிக்கையாளர்களுக்குக் எல்லாம் இந்த பொருட்களை விற்கலாம்?
5E.விற்ற பொருள்களுக்கான பணம் எத்தனை நாட்களுக்குள் நிறுவனத்திற்கு வர வேண்டும்?
என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து வைக்கும் போது இவ்வாறான சூழ்நிலை எந்த ஒரு நிறுவனத்துக்கும் ஒரு ஏற்படாது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
மேற்கூறிய கணக்குகள் அனைத்தையும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் நாம் விரிவாக பார்க்க முடியும். தொழில் முனைவோர் அனைவரும் மேலாண்மை பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம் அறிந்து அதனை அறிந்து பின்பு தொழில் தொடங்குவது மிக சிறப்பாக அமையும்.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக