How to run Business from home ?தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாமா?

 26. How to run Business from home ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலை வீட்டிலிருந்தே செய்யலாமா? மேலும் அதனை எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் கணவன் மனைவி என இருவரும் சம்பாதித்தாலும் வருமானம் அவ்வளவு போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் இவர்கள் ஏதேனும் தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாமா? என்று பல வழிகளை சிந்தித்து பிறகு ஒரு தொழிலைத் தொடங்கி அதை செயல்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு வீட்டிலிருந்தே தொழிலைத் தொடங்கி நடத்துவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான பதிவு இது.

இவ்வாறு வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்கி நடத்த முடியும் என்று நினைப்பவர்கள் தனக்கென ஒரு தனி திறமையை இவர்களுக்குள் வைத்திருப்பார்கள் அது என்ன என்று கண்டுபிடித்து அவற்றின் அடிப்படையில் செயல்படும்போது வெற்றி என்பது மிக சுலபமாக இவர்களுக்குக் கிடைத்துவிடும்.

தனிநபர் தொழில் தொடங்கும் பொழுது அவரின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவதில் எந்தவித குறைபாடும் இருக்காது ஏனென்றால் அவர் ஒருவர் மட்டுமே அந்த தொழிலை செய்கிறார்.

ஆனால் ஒரு தம்பதியர்கள் ஒரு தொழிலை நடத்தும்போது தம்பதியர்கள இருவருக்கும் தொழில் மீது 100% ஈடுபாடு இருந்தால் மட்டுமே அதனை வெற்றிகரமாக நடத்த முடியும் மேலும் அதிலிருந்து சொல்லக் கூடிய அளவிற்கு லாபத்தை எடுக்கவும் முடியும். என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

01. முதலீடு, தொழில் சிறிய அளவில் என்பது இருப்பதால் முதலீடு என்பது அந்த அளவுக்கு அதிகமாக தேவைப்படாது. மேலும் இங்கு அதிகளவில் முதலீடு செய்து இளைய தொடங்குவது ஒரு சரியான முடிவாக இருக்கும் முடியாது. மாறாக இந்தத் தொழிலுக்கான முதலீட்டுத் தொகை உங்கள் வாழ்வாதாரத்தை எந்தவிதத்திலும் இடையூறு செய்யா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

02. பொருட்களின் தன்மை,
நீங்கள் ஏதேனும் பொருளை முடிவு செய்து அந்த பொருளை வாங்கி விற்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்விற்க.
அந்த பொருள் சுற்றுவட்டார பகுதியில் எங்கும் கிடைக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது ஏனென்றால் நீங்கள் விற்கும் பொருள் அருகாமையில் கிடைக்கும் போது உங்களிடம் அந்த பொருளை வாங்குவதற்கு மக்கள் சற்று தயக்கம் காட்டுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

03. பேச்சுத்திறமை,
ஒரு பொருளை வாங்கி விற்க நினைத்தால் மட்டும் போதாது அந்தப் பொருளைப் பற்றிய விவரங்களை சேகரித்து அதனை பற்றி வாடிக்கையாளர் இடையே பேசுவதற்கான திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்களின் சந்தேகத்தை உடனுக்குடன் தீர்த்து வைக்க முடியும் .

04. தேவையுள்ள பொருள்.
நீங்கள் விற்கும் பொருளானது மக்களிடையே அதிகம் தேவைப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு தேவைப்படும் பொருளாக இருந்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் வாங்கி அனைத்து பொருட்களின் வீட்டிற்கு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட லாபத்தை நீங்கள் எடுக்க முடியும்.

பெரும்பாலும் நீங்கள் போடும் முதலீட்டை 2 வார காலத்திலோ அல்லது மூன்று வார காலத்திலோ அல்லது  ஒரு மாதத்திற்குள் பணமாக மாற்றி விடும் அளவிற்கு உங்களது பொருட்கள் இருக்க வேண்டும்.
அப்போதுதான் உங்கள் முதல் அந்த பொருள்களில் மாட்டாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

05. விற்பனை விலையில் மாற்றம்,
நீங்கள் விற்கும் பொருளின் விலை ஒரு நிலையாக இருந்தால் மட்டுமே ஒரு கணிசமான அளவு லாபத்தை  உங்கள் தொழிலில் இருந்து எதிர்பார்க்கலாம். இவ்வாறாக அனைத்து தொழில்களிலும் நடப்பதில்லை தெரிந்தவர்கள் உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்களின் பொருட்களின் விற்பனை விலையை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அவர்களுக்கு ஏற்றார் போல் உங்கள் விற்பனை இலையில் சற்று நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும்.

06. தொழில் வளர்ச்சி,
ஒரு குறிப்பிட்ட  பகுதியில் சிறிய அளவில்  தொழில் செய்வதினால் உங்களுக்கான தொழில் விளம்பரம் என்பது பல நபர்கள் மீது மூலம் சுலபமாக மற்றவர்களுக்கு போய் சேர்ந்து விடும்.

இங்கு உங்கள் தொழில் வளர்ச்சி என்பது ஒரு கணிசமான அளவு மட்டுமே இருக்குமே தவிர ஒரு பெரிய அளவு நிறுவனங்களின் லாபத்திற்காக நீங்கள் இங்கு எதிர்பார்க்கக்கூடாது.

07. லாபத்தை மட்டும் தனியே எடுத்து வைத்தல்.
உங்கள் தொழில் கிடைக்கக்கூடிய லாபத்தை மாதம்தோறும் தனியாக எடுத்து வைப்பது சிறந்தது. அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் மீண்டும் தொழில் கிடைக்கக்கூடிய லாபத்தை முதலீடு செய்யும்போது அது ஒரு பெரிய தொகையாக ஏதேனும் ஒரு இடத்தில் சென்று மாட்டிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நீங்கள் சிறிய அளவில் தொழில் செய்வதனால் துவக்கத்தில் இட்ட முதல் மட்டுமே மறு முதலீடு செய்தால் மட்டும் போதுமானது.

இவரது நிகழ் மாதாமாதம் எடுத்து வைக்கும் தொகையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் ஒரு கணிசமான தொகையாக உங்கள் கையில் உள்ள வங்கிக் கணக்கில் இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

மேலும் இவ்வாறாக பல பல விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இதில் ஒரு சில மேலாண்மை சம்பந்தமான கணக்குகளை கணக்கிடவேண்டிய சூழ்நிலை உருவாக்குகின்றன. அவற்றை என்னவென்று கண்டுபிடித்து சற்று நிதானித்து செயல்படும் போது உங்கள் தொழில் வெற்றி நிச்சயம்.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?