Relationship with your costomers ?தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு என்றால் என்ன? மேலும் அது எவ்வாறு இருக்க வேண்டும்?

Story 36. Relationship with your costomers ?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு எவ்வாறு இருக்க வேண்டும்? மேலும் அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

வழக்கம் போல ஒரு சிறுகதை உடன் இந்த பதிவை துவங்குவதில் வாருங்கள் கதையுடன் ஆரம்பிப்போம்.

புதிதாக துவங்கப்பட்ட தொழிலோ, அல்லது  தொடங்கி பல வருடங்கள் ஆன தொழிலோ, தொழிலின் உரிமையாளரோ, விற்பனையாளரோ, அவர்கள் தன் வாடிக்கையாளர்கள் கொண்ட தொழில் சம்பந்தமான உறவுகளின் அடிப்படையிலேயே வியாபாரம்  நடைபெறுகிறது மற்றும் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

வாடிக்கையாளருடன் கொண்ட ஒரு நல்ல உறவு உங்கள் தொழிலின் விற்பனைக்கான இலக்கை அடைவதற்கு ஒரு ஊன்றுகோலாக அமைகிறது. இருந்தபோதிலும் ஒரு விற்பனையானது எப்போதும் முடிவடைகிறது என்று என்னிடம் நீங்கள் கேட்டீர்கள் ஆனால்,  ஒரு பொருளை விற்று அதற்கான பணத்தை உரிய காலத்தில் ஒரு ரூபாய் கூட மிச்சம் வைக்காமல் தன் கையில் வாங்கி வாங்கியவுடன் மட்டுமே முடிவடைகிறது.

இவ்வாறான தொழில் வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரு நல்ல வளர்ந்துவரும் தொழிலுக்கு ஊன்று கோலாகவும் சப்போர்ட் ஆகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றார்கள்.

வாடிக்கையாளர்கள் மீது கொண்ட அதிக அளவு பற்று ஆனது  பொருளை விற்று விட்டு அந்த பொருளுக்கான பணத்தை வாங்க முடியாமல்  தவிக்கும் சூழ்நிலையானது எந்த ஒரு தொழில் முனைவோருக்கும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக அமைகிறது.

இவ்வாறாக எதற்கும் ஒரு அளவு உண்டு. "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது என்னும் பழமொழி இதற்கு ஒரு உதாரணமாக இருக்கிறது.

மேலும் இந்த பதிவில் வாடிக்கையாளர்களுடன் உண்டான தொழில் தொடர்பு பற்றி  சற்று விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கவிருக்கிறோம் பாருங்கள் பதிவுக்கு போகலாம்.

இதில்,
01.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு என்றால் என்ன?
02.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?
03.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் நன்மைகள் என்னென்ன?
04.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் தீமைகள் என்னென்ன?
05.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் விளைவுகள் என்னென்ன?
06. வாடிக்கையாளர்கள் உண்டான தொழில் தொடர்பை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும்?

என்பதைப் பற்றி விரிவாக  பார்க்க இருக்கிறோம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு என்றால் என்ன?
ஒரு தொழில் முதலாளியோ  அல்லது விற்பனை விற்பனையாளரோ தனது தொழில் வாடிக்கையாளருடன் விற்பனை ரீதியாக கொண்டுள்ள உறவை தொழில் வியாபார உறவு என்று அழைக்கிறோம்.

02.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?

இவ்வாறாக வாடிக்கையாளர்களுடன் கொண்ட உறவு என்பது ஒரு வாடிக்கையாளரை சந்தித்தோமா  பொருட்களை விற்றோமா  அதற்கான பணத்தை வாங்கினோமா  என்று இல்லாமல் அதையும் தாண்டி அந்த ஒரு வாடிக்கையாளர்கள் எந்த ஒரு தேவைக்கும் உங்களிடம் நாடும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி வைக்கும்பொழுது அவர்கள் நீங்கள்  சொல்லும் அனைத்தையும் கேட்கும் ஒரு நபராகவே மாறி மாறி விடுகிறார்கள். இவ்வகையான விற்பனை சூழல் என்பது விற்பனையாளர் அல்லது நிறுவனத்தின் உரிமையாளர் கூறும்  அனைத்தையும் தன் வாழ்க்கையில கேட்குமறு பல  வாடிக்கையாளர்களை உருவாக்கும்போது நிறுவனம் தனது மாதாந்திர விற்பனை பொருட்களுக்கான இலக்கை  மாதந்தோறும்  விரைவாகவும் இலகுவாகவும் அடைய முடியும்.

03.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் நன்மைகள் என்னென்ன?

03A.வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள நல்லுறவின் காரணமாக உங்கள் நிறுவனத்தின் பொருட்களை மிக சுலபமாக நல்ல லாபத்துடன் விற்க முடியும்.

03B. உங்கள் வாடிக்கையாளர் விற்கும் பொருட்களை சேவையோ ஒரு நல்ல விலைக்கு  அதாவது வாடிக்கையாளர்களின் கொள்முதல் விலைக்கு நீங்கள் வாங்கி பயன்பெற முடியும்.

03C. இவ்வாறாக பல நல்ல பணிகளை உங்களது வாடிக்கையாளர்களின் மூலமாக நீங்கள் பெறுவது மிக சுலபமாக ஆகிறது.

04.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் தீமைகள் என்னென்ன?

04A. உங்கள் வாடிக்கையாளர்கள் நீங்கள் வைத்துள்ள உறவு வியாபார உறவு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் அதிகப்படியான அளவு வியாபார தொடர்பு பல சிக்கல்கள் உருவாக்கும் விதம் அமைந்துவிடும்.

04B. பொருட்களை விற்று பொருட்களுக்கான பணத்தை சரியான காலத்தில் வாங்க முடியாமல் காலம் கழித்து வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இது வியாபாரத்திற்கும் வியாபார சூழ்நிலைக்கும் ஒரு நல்ல விஷயமாக இருக்காது.

04C. அதிகப்படியான அளவு வியாபார உறவு என்பது தேவையற்ற பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் உருவாக்கும்.

05.தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் வைத்துள்ள வியாபார தொடர்புகளின் விளைவுகள் என்னென்ன?

தொழில் வியாபார வாடிக்கையாளர்களும் உருவாகும் நிர்வாகம் நல்ல உறவின் காரணமாக பல நல்ல விளைவுகளும் சில கெட்ட விளைவுகளும் உருவாகின்றன.
அவை என்ன என்பதைப் பற்றி மேலே விரிவாக விவாதித்து விட்டோம். எனவே வாடிக்கையாளர்களுடன் மாணவர் உறவு என்பது வாழ்க்கையில் ஒரு புதுவிதமான ஒவ்வொரு மனிதனுக்கும் வளரக்கூடிய மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய ஒரு மகத்தான உறவு என்பதை நான் இங்கு கூற கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த உறவை வைத்து நம் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்ந்து செயல்பட வேண்டுமே தவிர பல பிரச்சினைகளையும் அழுகையும் தேடி செல்லக்கூடிய உருவாக்கும் சூழ்நிலையாக ஆகிவிடக் கூடாது.

06. வாடிக்கையாளர்கள் உண்டான தொழில் தொடர்பை எவ்வாறு மேலாண்மை செய்ய வேண்டும்?

வாடிக்கையாளர்களுடன் கொண்ட உறவின் மூலம் ஒரு தொழிலுக்கான நடவடிக்கையான பொருட்களை விற்றல் அதற்கு உண்டான பணத்தை வாங்குதல், அதிகப்படியான புது பொருட்களைப் பற்றி பேசுதல், புது வியாபார உத்திகளை ஆராய்தல்,  என அனைத்தையும் வாடிக்கையாளர்கள் உண்டான நான் மை பணியை செவ்வனே செய்து முடிக்கவேண்டும்.

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

🙏 நன்றி வணக்கம்.🙏

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?