Repayment of bank loan on time?தொழில் கடனை சரியான காலத்தில் திருப்பி கட்டுவதில் உள்ள நன்மைகள் என்ன?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை 9வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
தொழில் கடனை காலம் தவறாமல் திருப்பி செலுத்துவதில் உள்ள நன்மைகளை பற்றி பார்க்கவிருக்கிறோம்.
வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
பல தொழில்களில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்யவும், நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, ஆலை மற்றும் இயந்திரங்கள் மேம்படுத்தவும், சரக்குகளை பராமரிக்கவும், அல்லது மூலதனத்தை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையாக இருக்கிறது. இதனை பூர்த்தி செய்துக்கொள்ள பல தொழில்கள் வங்கி கடன்களை நாடுகின்றனர்.இந்த தனிப்பயனாக்கப்பட்ட கடன்கள், உங்கள் தொழில் அளவிலான போட்டித்திறன் மற்றும் இலாப தன்மையை அதிகரித்து புதிய திட்டங்களின் மூலம் உங்களின் தொழிலின் வெற்றிக்கான உயரத்தை தொட உதவுகிறது.
ஒரு தொழில் கடனை இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம்:
>உங்களுடைய தொழில் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும்
>குத்தகை பெரிய அலுவலக வளாகம்
>உங்களுடைய அலுவலகத்தைப் புதுப்பிக்கவும்
>இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, குத்தகைக்கு அல்லது சரிசெய்தல்
>சமீபத்திய தொழில்நுட்பத்துக்கு தரம் உயர்த்தவும்
>இன்வேண்டரியில் சரக்கை ஏற்றவும்
>பருவகால தொழிலாளர்களை அமர்த்தவும்
>பல்க் ஆர்டர்களுக்கு கச்சாப்பொருளை வாங்குவது
>மற்றொரு பகுதி அல்லது நகரத்திற்கு விரிவுபடுத்தவும்
>உங்கள் செயல்பாடுகளை அதிகரித்து >இன்னும் பெரிய புராஜெக்ட்கள் மற்றும் பலவற்றை எடுத்திடுங்கள்
01.தொழில் கடனை சரியான காலத்தில் திருப்பி கட்டுவதில் உள்ள நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
01A.தொழிலின் மீது வங்கிகளுக்கு ஏற்படும் நம்பிக்கை.
01B.தொழில் மூலம் அதிக கடன் பெறுவதற்கான வாய்ப்பு.
01C.பல வங்கிகள் கடன் கொடுக்க முன்வருதல்
01D. தொழில்களின் சீரான வளர்ச்சி
02. தொழில் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதில் உள்ள நன்மைகளை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
02A.கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதன் மூலம், வட்டி வீதம் குறைந்து காணப்படுகிறது இதனால் அதிகப்படியான வட்டி கட்டுவதில் இருந்து குறைவான வட்டி கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
02B. வங்கிக் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதன் மூலம் கடன் வாங்கிய தொழிலுக்கும் கடன் கொடுத்த வங்கி இருக்கும் ஒரு நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கை உருவாகிறது
02C. வங்கி கடன் பெற்றவர்களுக்கும் வங்கிக்கும் ஒரு நல்ல கடன் வரலாற்றை உருவாக்குவதன் மூலம் புதிய கடனைப் பெறுவதற்கான திறன் அதிகரித்து காணப்படுகிறது.
02D. பல தொழில்முனைவோர்கள் தனது தொழில் கடனை திருப்பிச் செலுத்துவதைப் புரிந்து கொள்ளாமல் வங்கிகளில் விண்ணப்பித்த கடனுக்கான தொகையை வாங்குவதில் பற்பல தவறுகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறாக தொழில்முனைவோர் பெரும் கடன்களை முன்கூட்டியே செலுத்தும் செலுத்தும்போது அதற்கான வட்டி விகிதத்தை பற்றி வங்கிகளிடம் முன்கூட்டியே ஆராய்ந்து அறிவது நன்று. அதுமட்டுமல்லாது முன்கூட்டியே கடன் தொகையை செலுத்துவதற்கான சாத்தியத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
03. லாப நோக்கத்தின் அடிப்படையில் கடன் கொடுக்கும் வங்கி நிறுவனங்களின் கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவது தொழில்முனைவோருக்கு லாபகரமானதா என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஒரு சிறு தொழில் முனைவோர் வாங்கிய கடனை சரியான காலகட்டத்தில் கட்டி வருகின்றனர் ஒரு சிலர் வாங்கிய கடனுக்கான நிலுவைத் தொகையை முன்கூட்டியே செலுத்தி வருகின்றனர்.
3A. எந்த ஒரு கடன் கொடுக்கும் வங்கியும் தான் கொடுக்கும் கடன் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட வருவாயை வட்டியாக பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இத்தகைய வங்கிகளில் கடன் வாங்கும் தொழில் முனைவோர் இதில் உள்ள சட்ட திட்டங்களை மட்டும் வட்டி விகிதங்களை பற்றி தெளிவாக ஆராய்ந்து அறிந்திருத்தல் வேண்டும். ஏனென்றால் வட்டியையும் முதலையும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பி அடைக்கும் சூழ்நிலையில் அதற்கான
முழு வட்டியையும் அவர் கண்டிப்பாக திருப்பி அடைக்கும் வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
வங்கி கடனுக்கான தவணைக் ஏதோ ஒரு மாதம் செலுத்தாத சூழ்நிலையில் அந்த ஒரு மாதத்திற்கான வட்டியும் முதலும் தனியாக கூட்டிக்கொண்டு வருவது இன்னொரு இழப்பாக தொழில் பார்க்கப்படுகிறது.
மேற்கூறியவை அனைத்தும் தொழிலில் வளர்ச்சிபெற பெருவாரியான அளவு பாதிக்கும் வகையில் அமைகிறது மேலும் இந்த வட்டி தொகையானது நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்திலிருந்து எடுத்து கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது சற்று ஆழ்ந்து யோசித்தோமானால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த லாபத்தை வட்டியாக கொடுப்பது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.
எனவே தொழில் முனைவோர்கள் அனைவரும் தொழிலுக்கான வங்கி கடன் பெறும் பொழுது.
01. உண்மையாகவே நிறுவனத்திற்கு தொழில் கடன் தேவைப்படுகிறதா?
02. பெற்ற கடனை தொழிலில் நாம் முழுவதுமாக பயன்படுத்துகிறோமா?
03. பெற்ற கடனை எவ்வாறு எப்படி நாம் திருப்பி அடைக்கப் போகிறோம்?
04. பெரும் கடன் நிறுவனத்துக்கு லாபமாக அமையுமா அல்லது நாட்டமாக அமையுமா?
என்பதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் தொழில் கடன் பெறுவதற்கு முன்னரே பல நுட்பங்களை ஆராய்ந்து அறிய வேண்டும் இதற்கான ஒரு சிலர் மேலாண்மை கணக்குகளைப் போட்டு அதில் தெளிவு பெறவேண்டும்.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக