Wholesale business or Retail Business ?மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் என்றால் என்ன?
Story 28. Wholesale business or Retail Business ?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில்
01.மொத்த வியாபாரம் என்றால் என்ன?
02.சில்லரை வியாபாரம் என்றால் என்ன?
03.மொத்த வியாபாரத்துக்கும் சில்லரை வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
04. மொத்த வியாபாரத்தையும் சில்லரை வியாபாரத்தையும் எவ்வாறுமேலாண்மை செய்வது?
என்பதைப் பற்றி பல விவரங்களை விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் பதிவுக்கு போகலாம்.
இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.
01.மொத்த வியாபாரம் என்றால் என்ன?
பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்த தனது பொருட்களை விநியோகஸ்தர்களிடம் விற்பதை கூறலாம். பொருள்களை மொத்தமாக மொத்த விலைக்கு சிறிய அளவிலான லாபத்துடன் தனது விநியோகஸ்தர்களிடம் விற்பதையே மொத்த வியாபாரம் என்று கூறலாம். உதாரணமாக சொல்லப்போனால் அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், FMCG பொருட்கள், மளிகை வியாபாரம், மற்றும் பல...
02.சில்லரை வியாபாரம் என்றால் என்ன?
விநியோகிஸ்தர்கள் இடமிருந்து தான் வாங்கிய பொருட்களின் மீது மீது சிறிய அளவிலான லாபத்தை வைத்து தனது வாடிக்கையாளர்களான சில்லரை வியாபாரிகளிடம் விற்பதையே சில்லறை வியாபாரம் என்று கூறலாம். உதாரணமாக சொல்லப்போனால் ஆடைகள், வீட்டு பொருட்கள், அழகு சாதன பொருட்கள், FMCG பொருட்கள், மளிகை வியாபாரம், மற்றும் பல...
03.மொத்த வியாபாரத்துக்கும் சில்லரை வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
3A. மொத்த வியாபாரத்தில் முதலீடு அதிகமாக இருக்கும், மாறாக சில்லரை வியாபாரத்தில் முதலீடு தொகை குறைவாக இருக்கும்.
3B. மொத்த வியாபாரத்தில் கொள்ளுதலும் விற்பனையும் பெரிய அளவில் இருக்கும் சில்லரை வியாபாரத்தில் அவ்வாறு இல்லாது சிறிய அளவில் இருக்கும்.
3C. மொத்த வியாபாரிகள் வாங்கக் கூடிய பொருட்களின் தரம் சரியாக இல்லாத சூழ்நிலையில் இழப்புகள் திடீரென்று அதிகமாக இருக்கக்கூடும், ஆனால் சில்லரை வியாபாரத்தில் அவ்வாறு கிடையாது வாங்கும் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கும் போதும் இந்த விஷயம் நடைபெறுவதில்லை.
3D. மொத்த வியாபாரிகள் வியாபாரிகள் தொகையை மீண்டும் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் எடுக்கும் ஆனால் சில்லரை வியாபாரிகள் முதலீட்டுத் தொகையை உடனுக்குடன் எடுக்க முடியும்.
3E. மொத்த வியாபாரிகள் வினியோகஸ்தர்களிடம் மட்டுமே விற்பனை உறவுகளை வைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் சில்லரை வியாபாரிகள் அனைவரும் அனைவருடனும் விற்பனை உறவை வைத்துக் கொண்டிருப்பார்கள்.
3F. மொத்த வியாபாரிகள் வியாபாரத்தை பெரிய அளவில் செய்தாலும் செய்தாலும் அதில் எடுக்கக்கூடிய லாபம் குறைவானதாகவே இருக்கும் ஆனால் சில்லரை வியாபாரிகள் குறைவான பொருட்களை விற்றாலும் அதில் இருக்கக்கூடிய லாபம் சற்று அதிகமாகவே இருக்கும்.
3G. மொத்த வியாபாரிகள் தாங்கக் கூடிய பொருட்களை உடனுக்குடன் விற்று விடுவார்கள் ஆனால் சில்லறை வியாபாரிகள் சற்று காலம் கழித்தே நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
3H. மொத்த விலை மொத்த விற்பனையாளர்கள் விநியோகிஸ்தர்கள் ஐ நம்பியுள்ளனர் ஆனால் ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் என சில்லரை வியாபாரிகள் பலவித மொத்த வியாபாரிகள் நம்பியுள்ளனர்.
3I. மொத்த விற்பனையில் சிறிதளவு விலை மாற்றம் லாபத்தில் பெரிய மாற்றத்தை உருவாகிறது, சில்லரை வியாபாரத்தில் விலை மாற்றம் அந்த அந்தளவு பெரிய பாதிப்பை லாபத்தில் உருவாக்குவதில்லை.
04. மொத்த வியாபாரத்தையும் சில்லரை வியாபாரத்தையும் எவ்வாறுமேலாண்மை செய்வது?
Products of business
ஒரு தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கும் அந்த தொழிலில் இருந்து ஒரு கணிசமான அளவு லாபத்தை தொடர்ந்து வியாபாரத்தில் இருந்து எடுப்பதற்கும் ஒரு முதல் மற்றும் முக்கிய காரணமாக இருப்பது நீங்கள் விற்கக்கூடிய அல்லது சேவை அளிக்கக் கூடிய பொருட்களின் அடிப்படையிலேயே அமைகிறது.அத்தகைய
1.பொருளுக்கு உண்டான தேவை
2. பொருளின் மீது தனது தொழிலின் பங்கு அளிப்பு
3.பொருளுக்கான சுழற்சி
இவைமூன்றும் மிக முக்கியமானது நீங்கள் ஒரு பொருளை தேர்ந்தெடுத்து தொழில் நடத்தும் போது.
Place of business
சரி ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை மட்டுமே தேர்ந்தெடுத்தால் மட்டும் போதுமா என்று நீங்கள் கேட்டால்
என்னிடம் இருந்து வரும் பதில் போதாது இதற்காக நீங்கள் உங்கள் தொழிலின் துவக்க காலத்தில் பல ஆலோசனைகளை மற்றும் கலந்தாய்வுகலை செய்வது மிகவும் அவசியம். அது என்னவென்றால்
1. நீங்கள் தொழிலை செய்ய நினைக்கும் பகுதி?
2. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை?
3. அந்த மக்கள் தொகையிலும் நீங்கள் கூர நீங்கள் விற்கக்கூடிய பொருட்களை வாங்கும் நபர்கள் எத்தனை பேர்?
4. அதிலும் அந்த குறிப்பிட்ட பகுதியில் உங்களுக்கு போட்டியாளராக நிற்கும் போட்டியாளர்களை பற்றியும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
5. மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் பொருளை வாங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் கால இடைவெளி அதாவது இன்டர்வெல் என்று சொல்லக்கூடிய ஒரு பொருளை வாங்கிய பின் அடுத்த பொருளை வாங்குவதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய கால இடைவெளி எவ்வளவு?
மேற்கூறிய அனைத்தையும் நீங்கள் ஒரு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ அல்லது வருடக்கணக்கில் உட்கார்ந்து அலசி ஆராய வேண்டும் என்பது ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலான தொழில் செய்யும் மக்கள் இந்த இடத்தில் தவறு செய்து விடுகிறார்கள். பின்பு சிறிது காலம் கழித்து அவர்கள் செய்த தவறுகளை நினைத்து புலம்புவதை பெருவாரியாக பார்க்க முடிகிறது. ஆகவே எவ்வளவு நேரம் எடுத்தாலும் சரி நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலுக்கு உண்டான அலசுதல்கள் மற்றும் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் முடித்து ஒரு தெளிவான சூழ்நிலைக்கு வந்தபின்பு நீங்கள் உங்கள் தொழிலை ஆரம்பிப்பது சாலச்சிறந்தது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
Capital of businesses
நிறுவனத்தின் பொருளையும் இடத்தையும் தீர்மானித்த பிறகு நிறுவனத்தை துவங்குவதற்கான தொடக்க செலவுகளுக்கு செலவு செய்யும் பணம் முதலீடு என்று அழைக்கப்படுகிறது
துவக்க செலவு கொள்முதல் செலவு என மொத்தமாக எவ்வளவு ஆகும் என முன்னரே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இதெல்லாம் சரி, தொழில் குண்டான சரியான முதலீட்டுத் தொகையை எவ்வாறு கண்டறிவது என்பது ஒரு பெரிய குழப்பம் உள்ளது?
இங்குதான் நீங்கள் வருடக்கணக்கில் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து நிறுவனத்திற்கான ரிப்போர்ட் என்று சொல்லக்கூடிய அறிக்கைகள் உதவுகின்றன?
நீங்கள் நினைத்து வைத்திருக்கும் பொருளுக்கு உண்டான வாடிக்கையாளர்களை கணக்கிட்டு பின் அவர்களின் பர்ச்சேஸ் இன்டர்வல் அதாவது ஒரு பொருளை ஒரு நபர் வாங்கிய பின் மீண்டும் அந்தப் பொருளை அவர் வாங்குவதற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம். மற்றும் ஒரு வாடிக்கையாளர் எவ்வளவு மதிப்பு கொண்ட பொருட்களை வாங்குகிறார் என்பதே கணக்கில் கொண்டு, இதைப்போன்று ஒரு மாதத்திற்கு மொத்தம் எத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட பொருட்களை வாங்குகிறார் வாங்குகிறார் கணக்கு செய்து பின்பு ஒரு மாதத்திற்கு விற்கக்கூடிய பொருட்களை மட்டும் வாங்கி வைத்து தொழிலை ஆரம்பித்தால் போதுமானது.
மாறாக நான் பெரிய அளவில் ஆரம்பித்தால் மட்டுமே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதற்காக பெரிய முதலீடுகள் இட்டு பின் ஆறு மாதம் கழித்து அய்யயோ இப்படி ஆகிவிட்டது, அப்படி ஆகி விட்டது என்று நீங்கள் புலம்பித் தீர்ப்பது படு முட்டாள்தனம் என்று நான் சொல்லுவேன்.
எனவே நீங்கள் கணக்கிட்டு வைத்துள்ள அளவிற்கு மட்டுமே பொருட்களை வாங்கி வைத்து அவற்றை மட்டும் விற்பனை செய்தால் மட்டும் போதுமானது. பின்பு தொழில் வளர்ந்த பின்பு நான்கு பேர் பார்க்கும் அளவிற்கு விரிவுபடுத்தி நடத்துவது சாமர்த்தியம்.
Break Even Point of business
தற்போது இருக்கும் காலங்களில் தொழில் முதலிடப்பட்ட தொகை கைக்கு மீண்டும் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இந்த பிரேக் ஈவன் பாயிண்ட் பற்றி அறிவது மிகவும் முக்கியமான ஒன்று.
தொழில் உரிமையாளர் தான் இட்டிருக்கும் முதல் தொகை மீண்டும் அவர் கையில் கிடைக்க எத்தனை பொருட்களை அவர் விற்க வேண்டும் என்பதே வணிகவியலில் சம குறியீட்டு புள்ளி என்று கூறுகிறார்கள்.
தொழில் உரிமையாளர் முதலீட்டில் இருக்கும் தொகை அளவிற்கு சமமான தொகை மீண்டும் அவர் கையில் கிடைக்க எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என்பதை கூறுவது தான் இந்த சம குறியீட்டு புள்ளி என்று கூறலாம்.
முதலீட்டு தொகைக்கு சமமான தொகை லாபமாக கைக்கு கிடைக்கும் காலம் வரை அவர் தான் இருக்கும் தொழிலில் இல்லாது வேறு தொழிலில் இருந்து சம்பாதிக்கும் தொகையைவிட அதிகமாக இந்த தொழில் லாபம் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக