Working capital of your Business ? மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன?


Story 34. Working capital of your Business ?


ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் உங்கள் தொழிலில் மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பார்க்கப் போகிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

வழக்கம் போல் சிறு கதையுடன் இந்த பதிவை ஆரம்பிக்க உள்ளேன். வாருங்கள் கதையுடன் தொடங்குவோம். ஒரு இளநீர் வியாபாரி 100 ரூபாய் முதலீடு இட்டு தினமும் தனது சப்ளையர் இடமிருந்து இடமிருந்து ஒரு இளநீரை பத்து ரூபாய்க்கு வீதம் 10 இளநீர்களை 100 ரூபாய்க்கு வாங்கி வந்து. ஒவ்வோர் இளநீரையும்  ஐந்து ரூபாய் லாபம் வைத்து 15 ரூபாய்க்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இறுதியாக அந்த நாள் முடிவில் பத்து இளநீர்களையும்  விற்ற பின் அவரிடம் 150 ரூபாய் இருக்கும்.அதில் 50 ரூபாய் லாபமாக அவர் எடுத்துவைத்து மீண்டும் மறுநாள் காலை நூறு ரூபாயை மறு முதலீடு செய்து மீண்டும் 10 இளநீர் களை வாங்கி விற்பதையே தினசரி வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் தினந்தோறும் மறு முதலீடு செய்யக்கூடிய 100 ரூபாய்  ஒவ்வொரு நாள் இறுதியிலும் அவர் கையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதுவேஅவர் தொழிலின் வொர்கிங் கேப்பிட்டல் ( working capital)அதாவது மறு முதலீட்டு  தொகை என்று அழைக்கப்படுகிறது.

இதில் அந்த தொழிலாளி என்றாவது ஒருநாள் தொடர்ச்சியான மற்றும் நெருங்கிய வாடிக்கையாளர் சிலருக்கு கடனுக்கு இளநீரை இருக்கும்பொழுது அவரது வொர்க்கிங் கேபிட்டல் அதாவது மறுநாள் முதலீடு செய்யக்கூடிய தொகையானது குறைகிறது.

இதனால் அவர் மீண்டும் மறுநாள் தன் தொழிலை மீண்டும் நடத்த தேவையான இளநீரை வாங்கவும் விற்கவும் முடியாமல்  முடியாத சூழ்நிலை உருவாகிறது.

இதனால் அவர் தன் சப்ளையர் இடமிருந்து கடனுக்கு அல்லது பிற நபர்களிடமிருந்து இருந்து கடன் வாங்கி தொழில் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு சில சூட்சுமங்களை இந்த தொழிலாளி பின்பற்றும் சூழ்நிலையில் தொடர்ச்சியான வாடிக்கையாளர் கடன் கொடுத்தும்,  அவர் தொடர்ந்து தன் தொழிலை நடத்துவதற்கான மறு முதலீட்டுக்கான தொகையை தொழிலில் இருந்து எடுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீங்கள் தொழில் மேலாண்மை வகுப்புகளின் மூலமே அறிய முடியும்.

இங்கே நான் கூறிய கதையினை உங்கள் தொழிலுக்கும் பொருந்துமாறு யோசித்துப் பாருங்கள் நான் சொல்ல வரும் தொழில் மேலாண்மை சம்பந்தமான விஷயம் உங்களுக்கு புரியும்.

தொடர்ச்சியாக இந்த பதிவில்

01. மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன?
02. ஒவ்வொரு தொழிலுக்கும்மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital)  என்பது எவ்வளவு முக்கியமாக முக்கியமான விஷயம்?
03. தொழில்மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital)  குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?
04. தொழிலில் மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) அதிகரிக்க காரணங்கள் என்னென்ன?
05. ஒரு சிறந்த தொழிலுக்குமறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) எவ்வாறு இருக்க வேண்டும்?
05. மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) தொகையை எவ்வாறு மேலாண்மை செய்வது?

என்பன குறித்த பல விஷயங்களை தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

இதை நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலில் முதலீடு செய்து பொருட்களை வாங்கி அதனை ஒரு லாபம் வைத்து விற்று வரும் தொகையிலிருந்து லாபத்தை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு பின்பு முதலீட்டு  தொகை முழுவதையும் கையில் இருப்பாக வைத்து இருப்பது மறு முதலீட்டு தொகை என்று அழைக்கப்படுகிறது.

02. ஒவ்வொரு தொழிலுக்கும்மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital)  என்பது எவ்வளவு முக்கியமாக முக்கியமான விஷயம்?

தொழில் முதலீடு செய்யும் தொகையானது விற்று லாபம் சம்பாதித்துக் கொடுத்து மீண்டும் மருமுதலீட்டுக்காக தயாராக  கையில் இருந்தால் மட்டுமே மீண்டும் உங்கள் தொழிலுக்கான விற்பனை பொருளை  மீண்டும் நீங்கள் வாங்கி அதன்மீது லாபத்தை வைத்து விற்க முடியும். அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் தொழிலை  தொடர்ந்து நடத்த கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

03. தொழில்மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital)  குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?

விற்ற பொருட்களுக்கான தொகையை மீண்டும் முழுவதையும் முழுமையாக தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற முடியாத சூழ்நிலை,  மேலும் லாபத்தைக் காட்டிலும் அதிகப்படியான அளவு மாதாந்திர நிறுவன செலவுகள்,  இவை இரண்டும் மறு முதலீட்டு தொகை குறைவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

04. தொழிலில் மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) அதிகரிக்க காரணங்கள் என்னென்ன?

தொழில்  முதல் இடப்படும் தொகையை ஒரு மாதத்திற்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முன்பே கணக்கிட்ட அளவிற்கு அதிகமாக சுழன்று தொழிலில் அதிகப்படியான அளவில் லாபத்தை உருவாக்கித் தரும் போது ஒரு நிறுவனத்தின்  மறு முதலீட்டு தொகை லாபத்துடன் சேர்ந்து  கணிசமாக உயர்ந்து வருகிறது.

05. ஒரு சிறந்த தொழிலுக்குமறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) எவ்வாறு இருக்க வேண்டும்?

சிறப்பாக நடைபெற்றுவரும் எந்த ஒரு தொழிலிலும் மறு முதலீட்டு தொகை என்ற வார்த்தைக்கே இடம் இல்லாத அளவிற்கு தொழிலானது சிறப்பாக செயல்படும். இந்தத் தொழிலில் முதல் இடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயும் ஒரு மாதத்திற்குள் பலமடங்கு சுழன்று நிறுவனத்திற்கு முதலீட்டு தொகையை விட அதாவது நூறு ரூபாயை விட பன் மடங்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் கொடுத்து வரும்.

05. மறு முதலீட்டு தொகை( வொர்க்கிங் கேபிட்டல் working capital) தொகையை எவ்வாறு மேலாண்மை செய்வது?

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தொழிலுக்கு ஆன மறு முதலீட்டுத் தொகையை மாதந்தோறும் கையில் குறிப்பிட்ட தேதியன்று உருவாக்கி வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவ்வாறு இல்லாத சூழ்நிலையில் ஒரு தொழிலுக்கு தேவையான விற்பனைப் பொருட்களை வாங்கி வைக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது.

மேற்சொன்ன தொழிலின் மறு முதலீட்டு கென தனி கணக்குகள் உள்ளன. இங்கே கூறப்பட்ட கூறப்பட்டுள்ள சில விளக்கங்களுக்கு அன   கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?