Balancing of your Business?தொழிலின் நிதிநிலை அறிக்கையை( Balance Sheet) எவ்வாறு மேலாண்மை செய்வது?

Story 20. Balancing  of your Business?

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்.
என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  தொழிலை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றாக வேண்டும் என்று முனைப்பில் தினந்தோறும் மாடாய் உழைத்து  பெரும்பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏தயவுசெய்து இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த உங்கள் தொழிலின் நிதிநிலை அறிக்கையை( Balance Sheet) எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

இங்கு ஒரு சிறு கதையை உதாரணமாக கூறி இந்த பதிவை தொடங்குகிறேன்.

நீங்கள் திருவிழாக்காலங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான பல பொருட்களை வாங்க ஒரு தொகையை எடுத்துவைத்து கடைத்தெருவிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு பொருளை வாங்கிய பின்பும் நாம் முதல்ல எவ்வளவு பணம் கொண்டு வந்தோம்?  பொருளை வாங்கிய பின்பு மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது மேலும் அடுத்த பொருளை வாங்குவதற்கு போதிய பணம் நம்மிடம் இருக்கிறதா? என்பதை பற்றி அறிவது சகஜமான ஒன்று. இறுதியாக வைத்திருக்கும்  பணத்தின் அளவிற்கு மட்டுமே நாம் பொருட்களை வாங்கி கொண்டு செல்ல முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறாக ஒவ்வொரு பொருளையும் வாங்கிய பின்பு தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அனைவரும் பின்பற்றக்கூடிய ஒன்று.

ஆனால் மக்களே இந்த சலவை செய்யும் பணத்தை கொடுக்கும்  தொழிலின் சொத்துக்களின் இருப்பு என்ன?   இருப்புபொறுப்புகளின் இருப்பு என்ன? நாம் தொழிலில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி ஏனோ நாம் ஆராய தவறுகிறோம்.

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தனது தொழிலின் நெருக்கடி காலங்களில் மட்டுமே இந்த இருப்புநிலை குறிப்பை பற்றி ஆராய்கின்றனர், அவையாவன
01. வருமான வரித் தாக்கல் செய்யும் பொழுதும்,
02.புதிதாக கூட்டாளி சேரும் போதும், 03.பழைய கூட்டாளிகள் நிறுவனத்தை  விட்டு விலகும் போதும்,
04. நிறுவனத்திற்கான வங்கி கடன் பெறும் போதும்,
05. நிறுவனத்தை இன்னொரு நபரிடம் விற்கும் போதும்,

மேலும் ஒரு சில சூழ்நிலைகளில் மட்டுமே இந்த நிதி நிலை அறிக்கையை ( Balance Sheet)உங்கள்  ஆடிட்டர் உருவாக்கித் தருகிறார். உங்கள் தொழில் என்ன நடக்கிறது என்பதை மூன்றாம் நபரான ஆடிட்டர் புரிந்து கொண்டிருக்கிறார். அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.

ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையை நீங்கள் தெரிந்து வைக்கும் போது அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

இந்தப் பதிவு முழுக்க
01. நிதிநிலை அறிக்கை என்றால் என்ன?
02. நிதிநிலை அறிக்கை எவ்வாறு உருவாக்குவது?
03. ஒரு நல்ல தொழிலுக்கு நிதிநிலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?
04. உங்கள் தொழிலின்  நிதிநிலை அறிக்கை உங்களுக்கு விளக்கிக் கூறுவது என்ன?
05. உங்கள் தொழிலில் நிதிநிலை அறிக்கையை எப்போது தயாரிப்பது?
இவற்றைப்பற்றி விரிவாக கீழே பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

01. நிதிநிலை அறிக்கை என்றால் என்ன?

ஒவ்வொரு தொழிலின் தற்போதைய நிலையை விரிவாகவும், தெளிவாகவும்,  எடுத்துக் கூறும் ஒரு தராசு இயந்திரமே நிதிநிலை அறிக்கை ( Balance Sheet)என்று கூறப்படுகிறது.

தொழில் நிறுவனங்களின் சொத்துக்களின் மொத்த கூட்டு தொகை என்ன? உறுப்புகளின் மொத்த கூட்டுத்தொகை என்ன? இவற்றை எதன் மூலம் இதன் மூலம் சமன்பாடு செய்வது என்பதைப் பற்றி விரிவான பதிவை நிதிநிலை அறிக்கை ( Balance Sheet)என்று பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

02. நிதிநிலை அறிக்கை எவ்வாறு உருவாக்குவது?

நிதிநிலை அறிக்கையில் ( Balance Sheet)இடப்பக்கம் வலப்பக்கம் இன்று இரண்டு பக்கங்கள் உள்ளன.
அதில் இடப்பக்கம் பொறுப்புகள் ஆகவும், வலப்பக்கம் சொத்துக்கள் ஆகவும் அமைந்திருக்கும்.

இடப்பக்கம் பொறுப்புகள் பக்கத்தில்
A. முதலீட்டு தொகை
B. வங்கி  மற்றும் மற்ற கடன்கள்
C. பற்பல கடனீந்தோர்
D. நிலுவையில் உள்ள செலுத்துதல்கள்
E. மற்றும் பல பொறுப்புகள்

வலப்பக்கம் சொத்துக்கள் பக்கத்தில்
A. தொழிலின் சொத்துக்கள்
B. பற்பல கடனாளிகள்
C.ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு
D. நிலுவையில் உள்ள பெறுதல்கள்
E. மற்றும் பல சொத்துக்கள்

மேற்கூறிய அனைத்தையும் ஒவ்வொன்றாக ஆழ்ந்து சிந்தித்து அவற்றின் மொத்த கூட்டுத் தொகையை இரண்டு பக்கங்களாக வகுத்து வைத்து கிடைப்பதே நிதிநிலை அறிக்கை  என்கிறோம்.

03. ஒரு நல்ல தொழிலுக்கு நிதிநிலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் சொத்துக்கள் பக்கம் உள்ள எண்களின் கூட்டுத் தொகை அதிகமாகவும், பொறுப்புகள் பக்கம் உள்ள எண்ணிக்கையின் கூட்டுத் தொகை குறைவாகவும் இருப்பது, ஒரு நல்ல வளர்ச்சி அடைந்து வரும் தொழிலுக்கு  உதாரணம் கூறப்படுகிறது.

04. உங்கள் தொழிலின் நிதிநிலை அறிக்கை உங்களுக்கு விளக்கிக் கூறுவது என்ன?

பொறுப்புகள் மற்றும் சொத்துக்கள் பக்கம் சமமான சூழ்நிலை நிலவி வரும் தொழில் அதுதன் வளர்ச்சியில் ஒரு சராசரி நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இந்த  தன் வளர்ச்சிப் பாதைகள் மிதமான வேகத்தில் செல்கிறது என்பதை உணர்த்துகிறது.

பொறுப்புகள் பக்கம் குறைவாகவும் சொத்துக்கள் பக்கமும் அதிகமாகவும் இருக்கும் தொழில்கள் தனது வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன என்பதை  விலக்கி காட்டுகிறது.

பொறுப்புகள் பக்கம் அதிகமாகவும் சொத்துக்கள் பக்கமும் குறைவாகவும் இருக்கும் தொழில்கள் தனது வளர்ச்சியில் பல தடுமாற்றங்களை சந்தித்துக்  கொண்டிருக்கின்றன என்பதை  விலக்கி காட்டுகிறது.

05. உங்கள் தொழிலில் நிதிநிலை அறிக்கையை எப்போது தயாரிப்பது?

புதிதாக தொழில் தொடங்கி உள்ள தொழில் முனைவோர் தொழில் தன் வளர்ச்சிப் பாதையில் ஒரு நிலையை அடையும் வரை தன் தொழிலுக்கான இருப்புநிலை  குறிப்பை ( Balance Sheet)ஒவ்வொரு நாளும் உருவாக்கி சரி பார்ப்பது மிகவும் நன்று.

தொழில் தொடங்கி பல வருடங்கள் ஆனால் தொழில் முனைவோர் தனது நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு என்று சொல்லக்கூடிய பேலன்ஸ் ஷீட் ( Balance Sheet) என்பதை நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரிபார்க்க வேண்டும். அதாவது நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் இவற்றை ஒவ்வொரு மாதமும் நீங்கள் சரி பார்ப்பது மிக முக்கியம் இதில் பொறுப்புகளை விட சொத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது வணிகவியல் பேராசிரியர்களின் கூற்று. இவ்வாறு இருக்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சார் ஏதோ சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல சார் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இவைகளையெல்லாம் நீங்கள்  மேலாண்மை பயிற்சி வகுப்பில் மட்டும் தெரிஞ்சுக்க முடியும்.

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?