Enterpreneurship Management training explained. தொழில் முனைவோருக்கான மேலாண்மை பயிற்சி வகுப்புகள்.

Story 2.Enterpreneurship Management training explained

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் மற்றும் தொழில் துவங்க புதிய அத்தியாயங்களை வகுத்துக் கொண்டிருக்கும் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொரு தொழில்முனைவோரும் 41 தொழில் மேலாண்மை கூறுகளை  ஆராய்ந்த பின்னரே தன் தொழில் ஆரம்பிக்க வேண்டும். என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

எனவே தொழில் முனைவோர் அனைவரும் அதற்கு உண்டான பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி மேலும் மேலும் சிறப்பாக சந்தையில் தனது தொழிலைச் செய்யுமாறு வேண்டி  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலாண்மை பயிற்சி வகுப்புகளில்
நீங்கள் பார்க்கப்போவது.

1.நீங்கள் யோசித்து வைத்துள்ள தொழிலுக்குண்டான போதிய அளவு   மூலதன  தொகை எவ்வளவு? அவற்றை எவ்வாறு கணக்கிடுவது?
2. அவ்வாறு இடப்படும் முதலீட்டையும், முதலீட்டுக்கு சமமான அளவிலான லாபத்தை எப்பொழுது எடுப்பது?
3. முதலீட்டுக்கு உண்டான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?
4. கூட்டுத் தொழிலாக  இருக்கும் சூழ்நிலையில் கூட்டாளிகளின்  முதலீட்டை எவ்வாறு  பிரிப்பது?
5.ஆக மொத்த முதலீட்டை எவ்வாறு மேலாண்மை செய்வது?
6.நீங்கள் நடத்திவரும் தொழிலின் பொருட்கள் மற்றும் சேவைகளின்  தனித்தன்மை என்ன?
7. அந்தப் பொருட்கள் மற்றும் சேவையின் லாப சதவீதம் என்ன?
8.  துவக்க காலத்தில் நீங்கள் தொழிலில் இடும் மூலதன தொகையிலிருந்து எத்தனை சதவீதம் இந்த பொருட்களை வாங்கி வைப்பது?
9. உங்கள் தொழிலில் அதிகப்படியான லாபம் தரக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளை கண்டறிவது எப்படி?
10. உங்கள் தொழில் அதிகப்படியான அளவிற்கு விற்று தீர்க்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை கண்டுபிடிப்பது எப்படி?
11. உங்கள் தொழிலில் அதிகப்படியான அளவு முதலீட்டை தனக்குள்ளே வைத்திருக்கும் விற்காத பொருட்கள் எவை எவை அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது?
12. நீங்கள் உங்கள் தொழிலில் ம
முதலீட்டிருக்கும் ஒவ்வொரு 100 ரூபாயம் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு எவ்வளவு வருமானத்தை  உருவாக்கி தருகின்றன என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
13. ஆக மொத்தம் உங்கள் தொழிலின் பொருட்கள் மற்றும் சேவையை எவ்வாறு மேலாண்மை செய்வது?
14. முதலிட்டு இருக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்களை கடனுக்கு கொடுப்பவர்களை  கடனீந்தோர் என்கிறோம். அத்தகைய கடனீந்தோரை
எந்த தொகை அளவிற்கு வைத்திருப்பது தொழிலுக்கு  சிறந்தது?
15. அவர்களுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் கால அளவு எவ்வளவு? 
16. தொழிலின் பொருள்களையோ சேவையோ  கடனுக்கு வாங்குபவர்களை கடனாளிகள்  என்கிறோம். அத்தகைய கடனாளிகளை எந்த தொகை அளவிற்கு வைத்திருப்பது தொழிலுக்கு  சிறந்தது?
17. அவர்களுக்கான பணத்தை திரும்ப பெரும்  கால அளவு எவ்வளவு? 
18. இதுபோன்று தொழில்கடனீந்தோர் மற்றும் கடனாளிகளை  எவ்வாறு மேலாண்மை செய்வது?
19. முதலீடு  தொகை அல்லாது  மேலும் தொழிலை வளர்ப்பதற்கு வங்கி கடன்
பெறும்போது அதன் உச்சவரம்பு எவ்வளவு?
20.வங்கி கடன் மீதான  வட்டியை எவ்வாறு கணக்கிடுவது  மேலும் அதன் உச்சவரம்பு எவ்வளவு?
21. ஆகமொத்தம் வங்கி கடன் மற்றும் இலாபத்தை எவ்வாறு மேலாண்மை செய்வது?
22. நிறுவன போட்டியாளர்களை எவ்வாறு மேலாண்மை செய்வது?
23. நிறுவன போட்டியாளர்களுடன் நமது நிறுவனத்தின் பொருட்களை சந்தையில் எப்படி நிலைநிறுத்துவது?
24. நிறுவனப் பொருட்களின் நிலையான தயாரிப்பு விலையை எவ்வாறு கண்டுபிடிப்பது?
25. நிறுவனப் பொருட்களின் மாறுபட்ட தயாரிப்புகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?
26. ஒவ்வொரு நிறுவனமும் அவற்றிற்கான இலக்கை எவ்வாறு கண்டுபிடிப்பது?
27. நிறுவன மேலாண்மை  கணக்கீடுகளை எவ்வாறு உருவாக்க வேண்டும். அவற்றை அடைய எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது?
28. உங்கள் நிறுவனத்தின் வரவேண்டிய வரவுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது?
29. உங்கள் நிறுவனத்தின் செலுத்துதல் களை எவ்வாறு மேலன்மை செய்வது?
30.அரசின்  விற்பனை வரியை எவ்வாறு கட்டுவது அதை எவ்வாறு மேலாண்மை செய்வது?
31. உங்களின் புதிய தொழில் அத்தியாயங்களுக்கு எவ்வாறு அடிக்கல் நாட்டுவது?

என்பது போன்ற பல முக்கிய அம்சங்கள் இந்த பயிற்சி வகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.

🙏 நன்றி வணக்கம் 🙏

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?