How to create Business Goals ? நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு உருவாக்குவது
தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப் பதிவில் ஒரு தொழில் அல்லது நிறுவனங்களின் இலக்கை எவ்வாறு உருவாக்குவது என்பதை விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
புதிதாக தொழில் தொடங்கியவர்கள் இடம் மற்ற நபர்கள் வந்து டேய் தொழில் புதுசா தொழில் தொடங்க நீயே என்ன ஆச்சு? எப்படி போகுது? என்று கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அதற்கு அவர்கள் நல்லா போயிட்டு இருக்கு, சூப்பரா போய்ட்டு இருக்கு, என்று சொல்வார்கள்.
ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு கஷ்டமா டைட்டா இருக்கும்னு சொல்வாங்க. சிலர் எங்க உண்மையை சொன்னால் பிறர் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து சிரிச்சிட்டே நல்லா போயிட்டு இருக்குன்னு சொல்லிட்டு போவாங்க.
அப்படி இருக்கும் போது அவனுக்குள் ஏதோ ஒரு மனப்பான்மை ஏதோ ஒன்றைப்பற்றி பத்தி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். நாளடைவில் அவன் சரியா இல்லை என்று மற்றவர்களுக்கு தெரிய வரும்போது நோண்டி ஆழமாக விசாரிக்கும் பொழுது தொழிலில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவன் எடுத்துக் கூற முன் வருவான்.
இதற்கெல்லாம் ஒரே காரணம் மட்டும் தான் சரியாக தொழில் நிர்வாகம் தெரியாமல் தொழிலை துவங்கி பின் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பது.
தொழில் மேலாண்மை பயிற்சி முடித்த ஒவ்வொரு தொழில் முனைவோரும் முதல் மற்றும் தலையாய கடமையாக தொழிலின் இலக்கை தீர்மானிப்பது மட்டுமே இருக்கும்.
எவ்வாறு தோழிலின் இலக்கை தீர்மானிப்பது என்பதை மட்டுமே இந்த பதிவில் நாம் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
நான் ஒரு லட்சம் முதலீடு செய்கிறேன் எனக்கு இந்த தொழில் இரண்டு வருடம் கழித்து 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது ஒருவகையான தொழிலின் இலக்கு என்று கூறலாம்.
ஆனாலும் நீங்கள் இடும் தொகைக்கும் அதிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் லாபத்திற்கும் ஒரு அடிப்படை தொடர்பு என்று இருக்கவேண்டும்.
ஒரு லட்சம் போட்டு இரண்டு வருடத்தில் 10 லட்சம் எடுப்பது அது உங்களுடைய மன உறுதி மற்றும் உழைப்பு நம்பிக்கையாக இருந்தாலும் ஒரு லட்சம் இடப்படும் தொழிலில் இரண்டு வருடத்தில் வருடத்திற்கு 10 லட்சம் கிடைத்தால் போதுமானது என்பது மிகவும் அதிக ஆசை என்று நான் கூறுவேன்.
இதெல்லாம் அதிகப்படியான ஆசை என்று கூறுகிறீர்கள் சார் அப்ப சரியான கரெக்டான இலக்கை எவ்வாறு தீர்மானிப்பது என்று கூறுங்கள் நீங்கள் என்று கேட்டால் உங்களுக்கான பதில் இதோ?
ஒரு மாதத்திற்கு உண்டான
முதலில் மீதான வட்டி
வாடகை
சம்பளம்
மின்சார செலவுகள்
அழகுபடுத்தும் செலவுகள்
ஏற்று மற்றும் இறக்கு கூலி
மற்றும் இதர செலவுகள்
இந்த செலவினங்களை எல்லாம் போக தொழில் உரிமையாளர் மாதம் மாதம் எவ்வளவு அந்தத் தொழிலிலிருந்து லாபமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்து இருக்கக்கூடிய ஒரு தொகை.
இவைகளை கண்டுபிடித்து அதனை இரண்டு வருடங்களுக்கு பெருக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு நீங்கள் விற்கக்கூடிய பொருள் ஒன்றாக இருக்கும் சூழ்நிலையில் அதன் லாபம் அல்லது பல பொருள்களை விற்கும்போது அந்த பொருள்களின் சராசரி சராசரி லாபத்தோடு வகுத்தால் உங்களுக்கு நீங்கள் மொத்தமாக இரண்டு வருடத்திற்கு நிற்கவேண்டிய பொருட்களின் அளவு அல்லது எண்ணிக்கை கிடைத்துவிடும்.
இந்த மொத்த எண்ணிக்கை இந்த இரண்டு வருடங்களுக்கு வரும் மாதங்களில் மாதங்கள் ஆல் வகுத்தால் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பொருட்களை விற்க வேண்டும் என்ற எண்ணிக்கை சுலபமாகக் கிடைத்துவிடும்.
அதன் மீது உங்களது கவனத்தை திருப்பி அந்த மாதத்திற்கான சராசரி விற்பனை நீங்கள் மாதாமாதம் கண்டிப்பாக விற்று கொண்டிருக்கிறீர்களா ஆராய்ந்து கண்டுபிடித்து உங்கள் தொழிலை நடத்த வேண்டும்.
அவ்வாறு விற்காத சூழ்நிலையில் விற்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து நீங்கள் உங்கள் தொழிலை மேலும் நடத்தவேண்டும்.
இவ்வாறாக உங்கள் தொழிலுக்கான இலக்கை நிர்ணயித்து அவற்றை வகுத்து அதன் அடிப்படையில் நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறுவனத்தை செயல்படுத்தும் போது நிறுவனம் கண்டிப்பாக நஷ்டம் அடையாது என்பதை நான் அடித்துக் கூற இங்கு விரும்புகிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கீழே பதிவிடுங்கள்.
இங்கு சற்று உதாரணத்துடன் எனது தொழிலை எவ்வாறு உருவாக்குவது என்பது என்பதை நான் கூற விழைகிறேன்.
வாழ்க்கையில நீங்க ஒரு இடத்துக்கு போக முடிவு பண்ணிட்டு அந்த இடத்துக்கு போனா உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் கிடைக்கும் என்று முடிவு பண்றீங்க அது பக்தியா இருக்கலாம் அல்லது சுற்றுலாவாக இருக்கலாம் அல்லது சொகுசு வாழ்க்கை சொகுசு வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது மகிழ்ச்சிக்காக போவதா இருக்கலாம் எதுக்காக வேணாலும் இருக்கலாம் அங்க போனா உங்க கிட்ட ஒரு விஷயம் கிடைக்கும்போது அதான் உங்களுடைய வாழ்க்கை வாழ்க்கையின் இலக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்ப அந்த இடத்துக்கு போகணும் முடிவு பண்ணிட்டீங்க. உதாரணமாக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு போகணும்னு முடிவு பண்ணி வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது துவக்க இடத்திலிருந்து செல்லும் இடம் வரையிலும் இருக்கும் தொலைவு எவ்வளவு கிலோமீட்டர் அதை நீங்க ஆராய வேண்டும்.
( இரண்டு வருடத்திற்கான மொத்த செலவு முதலாளியின் லாபத்தையும் சேர்த்து)
அப்புறம் அந்த இடத்துக்கு எவ்வாறு போக வேண்டும். போவதற்கு நீங்க எந்த கருவியை பயன்படுத்தி பயன்படுத்துகிறீர்கள் என்பது அடுத்த விஷயம் அதாவது நடந்து போகப் போகிறீர்களா அல்லது டூவீலரில் போகபோறீங்களா அல்லது பேருந்தில் பயணிக்க போகிறார்களா அல்லது ட்ரெயினில் போகப் போகிறீர்களா அல்லது உங்களுக்கு என தனியான கார் அமைத்து அதில் பயணிக்க போகிறீர்களா என்பதை முதலில் ஆலோசிக்க வேண்டும்.
( இங்கே நான் கூற விரும்புவது நீங்கள் உங்கள் தொழிலில் தேர்ந்தெடுத்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் மக்கள் மக்களிடையே அதற்கு உண்டான ஈர்ப்புகள் குறிப்பிடும்)
சார் சரி குறிப்பிட்ட இடத்தை அதாவது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு போக திட்டமிட்டுள்ளோம் ஒரு குறிப்பிட்ட நாளில் அதாவது இரண்டு வருடம் எடுத்துக்கொள்வோம் இரண்டு வருட காலங்களில் போக முடியாத சூழ்நிலையில் ஒரு ஆறு மாதம் கூடுதலாக இருக்கும் சூழ்நிலையில் நான் செலவினங்களுக்கு என்ன செய்வது?
( இங்கேயே தொழில் நாம் ஏற்கனவே கணக்கிட்ட மாதாந்திர இலக்கை அடையாத சூழ்நிலையில் சற்று தாமதம் ஏற்படும் சூழ்நிலையில் மாதாந்திர செலவையும் ஏன் தொழிலையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது முக்கியம் என்பதை கூறி இருக்கிறேன்)
முன்னதாகவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு போவதற்கு ஒரு அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு வழியை நாம் பயன்படுத்த போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் சற்று ஒருசில இடங்களில் நாம் மாற்றுப் பாதையை செல்ல வேண்டியுள்ளது இதனை என் தொழிலில் எவ்வாறு உதாரணமாக எடுத்துக் கொள்வது.
( மாற்றுப்பாதை என்றாலே தொழிலில் உங்களிடம் உங்களின் போட்டியாளர்களை பற்றி தான் இங்கு கூறுகிறேன் அவர்களை எவ்வாறு தாண்டி செல்ல வேண்டும் என்பதை இந்த மாற்று பாதை விளக்குகிறது)
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின் தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. உங்கள் தொழிலை சிறப்பாக கணக்கிடவும் நடத்திடவும் மேலாண்மை செய்யவும் நான் உதவி வருகிறேன்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக