How to reduce credit sales and bad Debtors in your Business? . உங்கள் தொழில் கடன் விற்பனையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

Story 6. How to reduce credit sales and bad Debtors in your Business? .

தொழில் செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்.  நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

வாழ்க்கையில் நாம என்னதான் என்ன சாதிக்கப் போகிறோம்.என்று யோசித்து கொண்டு இருப்பவர்கள் நடுவில் தனக்கென ஒரு முன்னேற்றப் பாதையை கண்டுபிடித்து அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று உங்களது தனித்திறமையை வளர்த்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் தொழிலில் கடன் விற்பனை அதிகரித்து சொல்கிறதா?

கடனுக்கு விற்ற பொருளுக்கு உண்டான தொகை மீண்டும் கைக்கு வருவது தாமதமாகிறதா?

வாராக்கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறதா?

இதன் மூலம் வங்கியில் நிறுவனம்  பெற்ற கடனுக்கான வட்டியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதா?

கவலையை விடுங்கள் இந்த பதிவை முழுசா பாருங்க இதிலிருந்து ஒரு சில முக்கியமான பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் வாங்க பதிவுகளை போலாம்.

முதல்ல  கடன் விற்பனை என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

கடன் விற்பனை என்பது மூன்று பரிமாணங்களில் பார்க்கப்படுகிறது. அது என்னவென்று கீழே பார்ப்போம்.

1. ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் விற்று அதற்கு உண்டான பணத்தை கையில் வாங்கவில்லை என்றால் அது கடன் விற்பனை என்று எல்லோராலும் அறியப்படும் ஒன்று.

2. ஒரு பொருளை வாடிக்கையாளரிடம்  விற்று அதற்குண்டான பணத்தை தன் கையில் வாங்குவதற்கு ஒரு நாளைக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்டால் அதுவும் கடன் விற்பனை என்று கூறப்படுகிறது.

3. ஒரு பொருளை தன் சப்ளையர் இடம் இருந்து கடனுக்கு  வாங்கி அதற்கு மேல் லாபத்தை வைத்து  வாடிக்கையாளரிடம்  விற்று முடித்து,  பின் தான் வாங்கிய பொருளுக்கு உண்டான தொகையை தன் சப்ளையர் கேட்கும்பொழுது அப்பொழுதும் அந்த விற்ற பொருளுக்கான  தொகை முழுவதுமாக கையில் வராமல் இருக்கும் சூழ்நிலையும் கடன் விற்பனை என்று கூறப்படுகிறது.

இவ்வாறாக மூன்று வகைகளில் கடன் விற்பனையை நாம் பார்க்க முடிகிறது.

நீங்கள் செய்துவரும் தொழில் கடன் விற்பனை என்பது எல்லாராலும் சந்திக்கக்கூடிய ஒரு நிலை என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும். இது ஒரு சகஜ  சூழ்நிலை மட்டுமே.  இத்தகைய கடனாளிகளுக்கு ஓர் உச்ச வரம்பு ஒன்று உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதனை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால் ஒரு வகுப்பறையில் 100 மாணவர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் 10% பேர் ஆசிரியர் நடத்தும் பாடங்களை உடனே பிடித்துக் கொள்வார்கள். 20% பேர் இதற்கு  மேலும் இரண்டு முறை பயிற்சி வேண்டும் அப்போதுதான் அவரை அந்த பகுதியை புரிந்துகொள்வார்கள். மீதமுள்ள 20% சதவீதம் பேர் மூன்று மூன்று முறை  அவர்களுக்கு எடுத்து வைத்தால் மட்டுமே அவர்களுக்கு புரியும். 30% பேர் ஐந்து முறைக்கு மேல் அவர்களுக்கு எடுத்து வைத்தால் மட்டுமே அவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை கற்றுக் கொள்வார்கள். மீதம் உள்ள 20% சதவீதம் பேர் என்னதான் அவர்களுக்குப் பாடம் கற்பித்தலும் அதனை ஒரு துளி அளவு கூட தன் மனதில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இதை நீங்கள் மனதளவில் புரிந்து கொண்டால் வியாபாரத்தில் நான் சொல்லவரும் கருத்து உங்களுக்கு ஈசியாக புரிந்துவிடும்.

வியாபாரத்தில் கடன் விற்பனை என்பது ஒருவித சகஜ நிலை என்றாலும்

புதிதாக தொழில் தொடங்கியவர்கள் எந்த அளவிற்கு கடன் கொடுக்க வேண்டும் கடனாளிகள் பராமரிக்க வேண்டும்?

தொழிலை தொடங்கி ஒரு சில ஆண்டுகள் கழித்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் எந்தளவு கடனாளிகள் பராமரிக்க வேண்டும்?

தொழிலை 5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுக்குள் நடத்துபவர்கள் தன் கடனாளி களை  அளவையும் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்?

நிறுவனங்கள் தன் தொழிலை தொடங்கி 20 வருடம் வருடம் கழித்த பின்பு தன் கடனாளிகள் ஐ  எவ்வாறு கருத்தில் கொள்ளவேண்டும் என்பது சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மாறுபட்டு வருகிறது தொழில் நிறுவனங்கள் கருத்தில்கொள் வேண்டும்.

எனவே பெரிய  நிறுவனங்கள் தங்களுக்கு உண்டான கடனாளிகள் நிர்வகிப்பதில்  ஒருசில கணக்கீடுகளை இட்டு பின்பு மட்டுமே அவரவர்களுக்கு தகுந்த கடன்களை அளித்து வருகிறது.

உதாரணமாக சொல்லப்போனால் நீங்கள் உங்கள் mobile நெட்ஒர்க் கு உண்டான post paid சூழ்நிலையில் தொடக்ககாலத்தில் உங்களுக்கு உண்டான credit limit என்று சொல்லக்கூடிய கடன்  தொகை மிகவும் குறைந்த அளவில் இருக்கும் நீங்கள் எவ்வாறு மாதம்தோறும் தவறாமல் பணத்தை செலுத்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில் அந்த credit limit என்பது வருடத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ கூட்டிக் கொண்டே வருவார்கள் என்பதை நாம் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வாறாக உங்கள் தொழிலில் உள்ள கடனாளிகளை  ஒருசிலர் கணக்கீட்டு கருவிகள் மூலம் கணக்கிட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு கடன் கொடுத்து உங்கள் அதிகப்படியான கடன் விற்பனையை நீங்கள் குறைக்க முடியும்.

இதுபோல உங்கள் நிறுவனத்தின் கடனாளிகளுக்கு கடன் கொடுப்பதில் உள்ள தொகையை நீங்கள் ஒரு சில கணக்குகளின் மூலம் குறைக்க முடியும் இந்த கணக்கீடுகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவை என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.

கடனாளிகளுக்கு கடன் கொடுப்பதில் உள்ள கணக்கீடுகளை கணக்கிடுவதற்கு ஒரு சில இங்கே முக்கிய பரிமாணங்கள் உள்ளன அவற்றை பார்ப்போம்.

1.வாடிக்கையாளர்களின்  கொள்முதல் திறன்

2. நீங்கள் விற்கும் பொருட்களுக்கு மக்களுடைய உள்ள தேவை

3.வாடிக்கையாளர்கள் தான் வாங்கிய பொருட்களை திருப்பி செலுத்துவதற்கு உண்டான நாட்கள்

4.வாடிக்கையாளரிடம் நிறம் கொண்ட நீண்ட நாள் உறவு

இவை அனைத்தும் மூன்று பெரும்  பரிமாணம் கொண்ட கணக்கீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறுபட்டு நிற்கிறது. இதனடிப்படையில் நீங்கள் ஒரு வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்க முடியும்,  அவர்கள் அந்த கடன் தொகையை திருப்பித் தர எத்தனை நாட்கள் பிடிக்கும் என்பது என் என்பதை சுலபமாக கண்டறிந்து அவர்களுக்கு உண்டான உச்சகட்ட கடகடன்னு நீங்க அளிக்கமுடியும் இவ்வாறாக  உங்கள் தோழியின் கடனாளிகள் மேலாண்மை உங்களையும் உங்கள் நிர்வாணத்தையும் ஓர் நல்வழிப்படுத்தி செல்லும் என்பதில் ஐயமில்லை.

இதில் நான் கூறியுள்ள  முப்பரிமாண கணக்குகளை கணக்கிடுவது எப்படி என்பது என்பதை உங்கள் மேலாண்மை பயிற்சி வகுப்பில் நான் விரிவாக கூற உள்ளேன் வியாபாரத்தில் இது மிகவும் முக்கியமான பகுதி என்பதை நீங்கள் உணர்ந்து எங்களை தொடர்புகொண்டு மேலாண்மை பயிற்சி வகுப்புகள் எடுத்து உங்களின் தொழில் திறமையை வளர்த்து பின் நீங்கள் தொழில் செய்யும்போது உங்கள் தொழில் மென்மேலும் சிறப்பு சிறப்பு அடையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே தொழில்முனைவோர் தொழில் மேலாண்மையின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து   தொழிலை  சிறப்பாக நடத்த  நான் உதவி வருகிறேன். 

🙏 நன்றி வணக்கம் 🙏

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com

Google business
https://g.page/entrepreneurship-development-and?gm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?