Nature of Business?பல்வேறு தொழிலின் தனித்தன்மைகள் என்னென்ன?
எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும், ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும், காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும், இருக்கும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் பல்வேறு தொழிலின் தனித்தன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.
வாழ்க்கையில் மக்கள் பணம் சம்பாதிக்க தனக்கு தெரிந்த தொழில்களான,
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை,
மின்சாரப் பொருட்களை விற்கும் கடை,
பேருந்து சேவை அளிக்கும் நிறுவனங்கள்,
கார் மற்றும் இதர சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள்,
மளிகை கடை,
ஜவுளி கடை,
பழம் மற்றும் காய்கறி கடை,
உணவுகள் விற்கும் கடை,
சிற்றுண்டி கடை,
தேனீர் கடை,
கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடை,
மோட்டார் வாகனங்களை சரி செய்யும் கடை,
மின்சாதனங்களை சரி செய்யும் கடை,
மேலும் பற்பல உற்பத்தி மற்றும் சேவை அளிக்கும் நிறுவனங்கள்,
போன்ற பலவகை தொழில்களை செய்து வருகிறார்கள். இவ்வாறாக இந்த உலகில் உள்ள பல தொழில்கள் அனைத்தும் குறிப்பிட்ட நான்கு தலைப்பின்கீழ் வந்துவிடுகின்றன. இவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
இவ்வாறாகத் செய்யும் தொழில்களை,
1. Traders வியாபாரிகள்,
2. Manufacturer உற்பத்தியாளர்கள்,
3. Service provider சேவை தொழில் செய்பவர்கள்,
4. Broking & Brokerage இடைத்தரகு தொழில் செய்பவர்கள்,
என நான்கு பெரும் தலைப்பின் கீழ் வந்து விடுகின்றன.
இவற்றில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது,
1. Traders யாருன்னு பாத்தீங்கன்னா இவங்க ஒரு பொருளை வாங்கி விற்கின்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு பொருளை தனது supplier சப்ளையர் இடம் இருந்து வாங்கி அதன் மீது லாபத்தை வைத்து விற்பதை வேலையாக கொண்டிருப்பார்கள்.
இவர்களை பத்தி சுருக்கமா சொல்லணும்னா ஒரு பொருட்களை வாங்குதல் லாபத்தை கட்டமைத்தல் விற்றல் இதையே முழு வேலையாக கொண்டிருப்பார்கள்.
உதாரணமாக சொல்லப்போனால்
மளிகை கடை
துணிக்கடை
நகை கடை
வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் பல...
2. Manufacturer இவர்கள் உற்பத்தித் துறையை சார்ந்தவர்கள்.
இவர்கள் மூலப்பொருள்களை வெளியில் இருந்து வாங்கி அதனை ஒரு முழுமையடைந்த பொருளாக உற்பத்தி செய்து பின்பு அதன் தயாரிப்பு விடையை கண்டுபிடித்து பின்பு அதன் மேல் லாபம் வைத்து விற்பனை செய்வதையே இவர்கள் நோக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால்
மூலப்பொருட்களை வாங்குவது
முழுமையடைந்த பொருள்களை தயாரிப்பது
தயாரித்த பொருட்களின் லாபத்தை நிர்ணயிப்பது
லாபம் வைத்து பொருட்களை விற்பது.
உதாரணமாக
பின்னலாடை நிறுவனங்கள்
உணவு தயாரிப்பு நிறுவனங்கள்
வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்
போன்றவற்றைக் கூறலாம்.
3.service provider இந்த துறையை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஒரு சேவையை மக்களுக்கு அளிப்பவராக இருப்பார்கள்.
இவர்கள் ஏதேனும் ஒரு பொருளை உருவாக்குவதிலும் ஒரு சேவையை மக்களுக்கு அளிப்பதிலும் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
பொதுவாக இவர்களை
professional service provider,
non- professional service provider,
என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
professional service provider,
உதாரணமாக
டாக்டர்ஸ்,
இன்ஜினியர்,
ஆடிட்டர்
போன்றவற்றைக் கூறலாம்.
non- professional service provider, உதாரணமாக
கார்பெண்டர்
பெயிண்டர்
வெல்டர்
போன்றவர்களை கூறலாம்.
4.Broking & Brokerage இந்தத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரு லாப நோக்கத்திற்காக ஒன்றிணைப்பதே முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.
இவர்களை
ஆன்லைன் brokers என்றும்
நேரடி brokers என்றும்
இரு வகைப்படுத்தலாம்.
ஆன்லைன் புரோக்கர்களுக்கு உதாரணமாக
அமேசான்
ஃப்ளிப்கார்ட்
சுகி
யூபர்,
போன்றவற்றைக் கூறலாம்,
மேலும் நேரடி புரோக்கர்களுக்கு உதாரணமாக
நிலம்
வீடு
மனை
வாகனங்கள்
திருமணங்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய
தொழில் செய்பவர்களை கூறலாம்..
நீங்கள் சாலையில் செல்லும் போதும் தெரிகின்ற
வியாபாரக் கடைகள்,
உற்பத்தி நிறுவனங்கள்,
பல்வேறு சேவை நிறுவனங்கள்,
மற்றும் தரகு நிறுவனங்கள்
நீங்கள் தனித்தனியே பிரித்து கண்டறிய கற்றுக் கொள்வது மிக அவசியம்
இப்போது இந்த பதிவின் மூலமாக இந்த உலகில் உள்ள பல்வேறு தொழில்களை பற்றியும் அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் அவற்றின் தனித்தன்மைகள் பற்றியும் விரிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேற்சொன்ன பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக