Right Way of my business ?உங்கள் தொழிலில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா?
தொழில் என் மூச்சு, தொழில் என் வாழ்க்கை, தொழில் தான் எனக்கு எல்லாமே என்று நினைத்து தொழில் செய்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் என் அன்பான உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் தொழிலில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதுதானா? என்று இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வாங்க பதிவுக்கு போகலாம்.
ஒரு தொழில் முனைவோர் ஒரு தொழில் தொடங்கி நடத்தி வைக்கிறார் துவக்க காலத்தில் கணிசமான அளவு லாபத்தை அவரால் அந்த தொழிலில் இருந்து எடுக்க முடிகிறது.
ஒரு சில காலம் கழித்து அவரவருக்கு வரும் லாபமானது போதுமானஅளவிற்கு இல்லை என்பதை அவர் உணர்கிறார். அப்போது மட்டுமே சற்று ஆழ்ந்து தொழிலை பற்றி யோசிக்க துவங்குகிறார் அப்படி யோசிக்கும் பொழுது அவர் தன் தொழிலில் செய்த சில தவறுகளை நினைத்து வருத்தப்படுகிறார் ஐயோ நான் அப்படி செய்திருக்கலாமே, இப்படி செய்திருக்கலாமே என்று,
அவர் தொழில் தொழில் செய்து வரும் ஒவ்வொரு மாதமோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் அவர் தான் தொழிலில் செல்லும் பாதை சரிதானா என்று யோசித்திருந்தால் ஒருவேளை அவர் தற்போது நல்ல பாதையை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பார் நண்பர்களே இதை பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம் பாருங்கள் பதிவுக்கு போகலாம்?
ஒரு புது இடத்திற்கு சுற்றுலா செல்ல நினைக்கிறோம் அவ்வாறு செல்லும் எந்த ஊருக்கு செல்லப்போகிறோம், எப்படி செல்லப்போகிறோம், இதற்காக எவ்வளவு செலவு செய்யப்போகிறோம், என்பதை முன்கூட்டியே அனைவரும் ஆராயக்கூடிய ஒன்று, இப்படி ஒரு சுற்றுலா செல்லும் பொழுதே பல விஷயங்களை யோசிக்கும் பொழுது, தம் வாழ்க்கை நடத்துவதற்கான வருமானம் கொடுக்கும் தொழிலைப் பற்றி நாம் யோசிப்பதே கிடையாது, தொழில் முனைவோர் தன் தொழிலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எங்கு இருக்க வேண்டும், எவ்வாறு செல்ல, என்று மேலோட்டமாக சிந்தித்து விட்டு பின் தொழிலைத் தொடங்கி விடுகிறார்கள்.
ஒரு சிலர் யாரோ ஒரு மூன்றாம் நபர் சொல்லும் பேச்சை கேட்டு தொழிலை ஆரம்பித்து பின் வருத்தப்படுகிறார்கள்.
பின்பு தொழிலை ஆரம்பித்து விட்டும் வேறு எதுவும் செய்ய முடியாது தொடர்ந்து இந்த தொழிலில் உழைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர போராடிக்கொண்டிருக்கிறார்கள் இருந்தாலும் இவர்களால் ஒரு நல்ல நிலையை தன் தொழிலில் எட்டிப்பிடிக்க முடியவில்லை. அங்காங்கே சிறு சில தோல்விகளை இவர்கள் கண்டு கொண்டு விடுகிறார்கள். இவ்வாறாக மட்டுமே ஒரு தொழில்முனைவோர் தன் தோளில் தோல்வியை காண முடிகிறது.
ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் அனுபவம் என்பது மிக மிக முக்கியமானது.
இந்த அனுபவத்தை நான் ஏற்கனவே கூறியது போல
தன் குருவிடம் இருந்து கற்பது அல்லது
தனது சொந்த அனுபவத்தை கொண்டு தொழில் தொடங்குவது
என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம் இருந்தபோதிலும் ஒரு தொழில்முனைவோர் 41 தொழில் மேன்மை கூறுகளை தன் தொழில் ஆராய்ந்த பின்னரே தன் தொழில் ஆரம்பிக்க வேண்டும்.
அதோடு மட்டுமில்லாது ஆரம்பித்த தொழிலில் முன்னரே கணக்கிட்டது போல சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோமா? என்பதை மாதம் மாதம் அவரவர் ஆராய்ந்து அறிய வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
உங்கள் தொழில் தான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என்பதை உணர்த்தும் முக்கிய 5 குறிப்புகளை பற்றி இங்கே கூறியுள்ளேன் உள்ளேன். அவை
01. Stability Of Working Capital
Working Capital வொர்க்கிங் கேபிட்டல் என்று சொல்லக்கூடிய தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கான மாதாந்திர தொகை உங்கள் கையில் மாதம்தோறும் தவறாமல் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
02. Continued income calculated earlier
முன்னதாகவே கணக்கிடப்பட்ட மாதம் மாதம் உங்கள் தொழிலில் இருந்து உங்கள் கிடைக்க வேண்டிய வருமானம் உங்களுக்கு தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதை நான் நேற்றைய பதிவில் விரிவாக கூறியுள்ளேன்.
03. Break Even Point of business
சம குறியீட்டு புள்ளி நீங்கள் உங்கள் தொழிலில் மாதம் மாதம் இரும் தொகை சரியான காலத்தில் முதல் மற்றும் லாபத்தோடு மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேர்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
04. Less Credit Sales and More Cash Sales
உங்கள் தொழிலுக்கான கடன் விற்பனை உங்கள் முதலீட்டு தொகைக்கு அதிகமாக செல்கிறதா அல்லது முதலீட்டு தொகைக்கு குறைவாக நடக்கிறதா என்பதனை நீங்கள் கணக்கிட வேண்டும்.
05. Quality of Balance Sheet
இருப்புநிலைக் குறிப்பு என்று சொல்லக்கூடிய பேலன்ஸ் ஷீட் ( Balance Sheet) என்பதை நீங்கள் ஒவ்வொரு மாதமும் சரிபார்க்க வேண்டும். அதாவது நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் இவற்றை ஒவ்வொரு மாதமும் நீங்கள் சரி பார்ப்பது மிக முக்கியம் இதில் பொறுப்புகளை விட சொத்துக்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது வணிகவியல் பேராசிரியர்களின் கூற்று. இவ்வாறு இருக்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சார் ஏதோ சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல சார் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இவைகளையெல்லாம் நீங்கள் மேலாண்மை பயிற்சி வகுப்பில் மட்டும் தெரிஞ்சுக்க முடியும்.
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்சொன்ன தொழிலின் விளக்குகளுக்கான கணக்குகள் அனைத்தும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலுக்கும் கணக்கீடுகள் என்பது மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தொழில்முனைவோர் அனைவரும் தொழில் மேலாண்மை வகுப்புகளின் சிறப்புகளை அறிந்து தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் கலந்து திறமையை வளர்த்து பின் தொழிலை தூங்கும்போது உங்கள் தொழில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. உங்கள் தொழிலை சிறப்பாக கணக்கிடவும் நடத்திடவும் மேலாண்மை செய்யவும் நான் உதவி வருகிறேன்.
🙏 நன்றி வணக்கம் 🙏
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக