ups and downs in business ? தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் என்றால் என்ன? அதனை எவ்வாறு சமாளிப்பது?
ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உருவாக காரணம் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
வழக்கம் போல் இந்த பதிவினை கதையுடன் துவங்க இருக்கிறேன். வாருங்கள் கதைகளும் பதிவு கொள்ளும் போகலாம்.
ராமு-சோமு என இரு நண்பர்கள் தனித்தனியாக ஒரே விதமான தொழிலை ஒரே பகுதியில் ஆரம்பிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் துவக்க காலத்தில் தொழிலின் ஏற்றதற்காக மிகவும் கடினமாக உழைக்கின்றனர்.
இவ்வாறான தொழிலின் ஏற்ற இறக்கங்கள் இவர்களின் தொழிலில் வந்து செல்கின்றன.
ஏனோ ராமு தன் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளித்து தொடர்ந்து தொழில் நடத்திவருகிறார். ஆனால் சோமா ஏற்ற இறக்கங்களை சமாளிக்க முடியாமல் தொழிலை மூடுகிறார்.
இவ்வாறாக நீங்கள் தொடங்கும் தொழிலில் ஏற்ற இறக்கங்கள் உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன சூழ்நிலைக்காக வருமானம் ஏற்ற இறக்கங்கள் உருவாகின்றன என்பதை இந்த பதிவில் விளக்கமாகவும், விரிவாகவும், பல எடுத்துக்காட்டுகளுடன் கீழே பார்ப்போம்.
அவையாவன.
01.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் என்றால் என்ன?
02.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உருவாக காரணம் என்ன?
03.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உருவாவதை எவ்வாறு அறிவது?
04.தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது?
இவர் அக பலவற்றை இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
இவற்றில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது.
01.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் என்றால் என்ன?
தொழிலின் தொடக்க காலத்தில் வருமானம் குறைவாக இருந்து, பிற்காலத்தில் அதிகரித்து, மீண்டும் ஒரு சில காலங்களில் இந்த வருமானம் குறைவதை தொழிலில் ஏற்ற இறக்கம் என்று கூறுகிறோம்.
02.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உருவாக காரணம் என்ன?
நீங்கள் நடத்திவரும் தொழில் ஏற்றத்தாழ்வுகள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றில் சிலவற்றைக் கீழே பார்ப்போம்.
2A.தொழில் இடத்தின் மக்கள் தொகை.
உங்கள் தொழில் இருக்கும் பகுதியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் வியாபாரம் ஆனது நடைபெறுகிறது. எனவே நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுது உங்கள் பொருட்களை வாங்குவதற்கான மக்கள் தொகையை கவனிக்க வேண்டும்.
2B.தொழிலின் வாடிக்கையாளர்கள்.
மக்கள்தொகை அதிகமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தொகையில் உங்களுக்கான வாடிக்கையாளர்கள் யார் யார் என்று நீங்கள் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்று.
2C.வாடிக்கையாளர்களின் திருப்தி நிலை.
உங்கள் தொழில் நீங்கள் விற்க கூடிய பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி நிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று அந்த திருப்தியை உங்கள் பொருட்களின் மூலம் நீங்கள் எவ்வாறு சிறப்பாக அளிக்க முடியும் என்பதை தொழில் தொடங்கும் முன் ஆராய்ந்து அறிவது மிகவும் அவசியமான ஒன்று.
2D.வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை.
மக்களின் வாழ்க்கை முறை என்பது இங்கே மிகக் கூர்மையாக கவனிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
ஏனென்றால் விற்கக்கூடிய பொருட்களை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் எந்த வேகத்தில் பயன்படுத்துகிறார்கள். என்பதன் அடிப்படையிலேயே மீண்டும் அந்தப் பொருட்களை வாங்க அவர்கள் உங்கள் கடைக்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் நீங்கள் ஆராய்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
2E.விற்கக் கூடிய பொருட்களின் தேவை.
ஏற்ற இறக்கங்கள் உருவாக நீங்கள் விற்கக்கூடிய பொருட்களும் அதற்கு மக்களிடையே இருக்கும் தேவையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
01. ஒரு சில விற்பனைப் பொருட்களை தொடக்க காலம் முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொருள்களை கூவிக் கூவி விற்று அந்த குறிப்பிட்ட காலம் முடிந்த உடன் மீண்டும் கூவிக் கூவி விற்க கூடிய பொருட்கள்.
02. ஒரு சில விற்பனைப் பொருட்களை தொடக்க காலத்தில் கூவி கூவி விற்று பிற்காலத்தில் சகஜமாக விற்கக்கூடிய பொருட்கள்.
03. ஒரு சில விற்பனைப் பொருட்களை தொடக்கத்திலிருந்து இறுதிவரை கூவி கூவி விற்க கூடிய பொருட்கள்.
எனவேதான் நண்பர்களே நீங்கள் துவங்கக் கூடிய தொழிலில் விற்பனையாகும் பொருட்களை தேர்ந்து எடுப்பதில் நீங்கள் மிகவும் கவனம் கொள்ள வேண்டும்.
2F.விற்க கூடிய பொருட்களின் விலை.
இறுதியாக விற்கக்கூடிய பொருட்களின் விலையை வாடிக்கையாளர் மிகக் கூர்மையான கவனிக்கிறார்கள்.
எப்போதாவது வாங்கும் பொருட்களின் விலையை அதிகம் மக்கள் நினைவில் கொள்வதில்லை.
ஆனால் அடிக்கடி வாங்க கூடிய பொருட்களின் விலையை மக்கள் கண்டிப்பாக நிலவில் நினைவில் வைத்திருப்பார்கள்.
எனவே வைக்கக் கூடிய பொருட்களின் விலை எனது உங்கள் தொழிலில் எந்த அளவுக்கு குறைவாக கிடைக்கிறது அதனடிப்படையில் வியாபாரம் ஆனது இருக்கும் அது மட்டுமல்லாது ஒரு முறை விட்டு பொருள்களின் விலை ஏற்ற இறக்கம் காணும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலையைப் பற்றி சற்று யோசிக்க தான் செய்கிறார்கள்.
எனவே விற்கக்கூடிய பொருட்களின் விலையை ஆராய்ந்து அறிவது மிகவும் அவசியமான ஒன்று ஏன் என்றால் இதன் அடிப்படையிலும் நிறுவனத்தின் ஏற்றத்தாழ்வுகள் அமைகின்றன.
03.தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் உருவாவதை எவ்வாறு அறிவது?
உங்கள் தொழிலில் உருவாக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் செயல் செயல்படுத்தும் பொழுது அந்த இலக்கை மாதம் மாதம் சரியாக அடைந்துவிட்டால் நிறுவனம் ஏற்ற பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.
அவ்வாறு இல்லாத இல்லாது நிறுவனம் தனக்கு உண்டான இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது என்றால் அந்த நிறுவனம் சரிவை நோக்கி செல்கின்றது என்று அர்த்தம்.
04.தொழிலில் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு மேலாண்மை செய்வது?
ஓர் தொழில்முனைவோராக உங்களின் பார்வை உங்களின் தொழிலை சுற்றி 360 டிகிரிக்கு தெளிவாக இருக்க வேண்டும்.
உங்கள் தொழிலுக்கான ஏற்ற இறக்கங்களை முன்கூட்டியே கணித்து அதற்கு ஒரு மேலாண்மை கட்டமைப்பை நுண்ணறிவு மற்றும் பல யுக்திகள் மூலம் உருவாக்கி அதன் அடிப்படையில் செயல்படும் இப்பொழுது உங்களின் தொழில் நிறுவனம் எந்த நிலையிலும் ஏற்ற இறக்கத்தை வெகு சுலபமாக சமாளிக்க கூடிய தோட்டா துளைக்காத கவசம் போல் ஒரு சிறப்பான தன்மை பெற்றதாக இருக்கும்.
🏅 நீ சாதித்துவிட்டாய்!
ஏனென்றால்
நீ சாதிக்க பிறந்தவன்!🏅
மேற்சொன்ன பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
Blogger
https://tamilyoungenterpreneurs.blogspot.com
Google business
https://g.page/entrepreneurship-development-and?gm
கருத்துகள்
கருத்துரையிடுக