What is Interest management? தொழிலுக்கான வட்டி என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?

Story.52. What is Interest management?

ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில்  முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.

🙏  இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே  தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏

இந்த பதிவில் தொழிலுக்கான வட்டி  என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது?  என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.

தொழில் முனைவோர் தன் தொழிலை தொடங்கும் முன் பார்க்கவேண்டிய முக்கிய தலையாய விஷயங்கள் இந்த வட்டி மேலாண்மை என்பதும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

தன் தொழிலில்  பெறப்படும் லாபத்தில் இருந்து மட்டுமே தொழிலின் வட்டி ஆனது
செலவிடப்படுகிறது என்பதை ஒவ்வொரு தொழில் முனைவோரும் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய ஒன்று.

வட்டி என்பது அனைத்து தொழில் முனைவோருக்கு பொதுவான ஒன்று.
இவர வட்டி தொகையானது பல வகைகளில் இங்கே கணக்கிடப்படுகிறது. என்பதை தொழில்முனைவோர் அதன் தொடக்க காலத்திலேயே அறியவே அறியவேண்டும்.

பல வகையான வட்டிகள் நிறுவனத்தில் கணக்கிடப்படுகின்றன அவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவுக்குள் போகலாம்.

இவ்வாறாக இதில்,

01. உங்கள் தொழிலில் வட்டி என்றால் என்ன?
02. உங்கள் தொழில் வட்டி எங்கெல்லாம் கணக்கிடப்படுகிறது?
03. உங்கள் தொழிலின் வட்டி நிறுவனத்தின் லாபத்தை  எவ்வாறு பாதிக்கின்றது?
04. உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் வட்டி செலவினங்கள்  தொழிலை நட்டத்திற்கு தள்ள இருக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?
05.உங்கள் தொழிலில் தேவையற்ற வட்டி செலவினங்களை எவ்வாறு குறைப்பது?
06. உங்கள் தொழிலில் வட்டியை எவ்வாறு மேலாண்மை செய்வது?

இவர கைத்தொழில் ஏற்படும் வட்டியை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் பார்த்திருக்கிறோம்.

இதில் நாம் முதலில் பார்க்க இருப்பது.

01. உங்கள் தொழிலில் வட்டி என்றால் என்ன?

தான் எங்கிருந்தாலும் லாபம்,  வட்டி,  வாடகை,  என்ற பெயர்களில் தன்னைத் தானே  பெருக்கிகொள்ளக்கூடிய தனிச்சிறப்பு உடையது பணம்.

வட்டி என்றால் என்ன என்று விளக்கமாக சொல்வது சற்று  கடினம். ஆனால் அதனை அதிகாரப்பூர்வமாக உணர முடியும்.

👉ஒரு சிலர் வட்டியை மூலதனத்தின் விலை என்றும்,
👉 ஒரு சிலர் வாங்கும் பணத்துக்கு உரிய வாடகை என்றும்,
👉 ஒரு சிலர் அடுத்தவரின் பணத்தைப் பயன்படுத்த நாம் தரும் விலை என்றும்,
👉 ஒரு சிலர் வட்டியை வாய்ப்புக்கான விலை என்றும் சொல்கிறார்கள்

02. உங்கள் தொழில் வட்டி எங்கெல்லாம் கணக்கிடப்படுகிறது?

தொழில்கள் அவற்றின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் வட்டியானது கணக்கிடப்படுகிறது. அனைத்துத் தொழில்களுக்கும் பொதுவாக வட்டி கணக்கிடப்படும் இடங்களில் ஒரு சிலவற்றைக் கீழே பார்ப்போம்.

2A. முதலீட்டுத் தொகையின் மீதான வட்டி.

2B. மறு முதலீட்டுக்கு தேவைப்படும்வங்கி கடன் மீதான வட்டி.

2C.சப்பிள்ளையாருக்கு  குறிப்பிட்ட தேதிக்கு மேலாக பணம்  செலுத்தப்படாமல் இருக்கும் போது அதற்காக கணக்கிடப்படும் வட்டி.

2D.அரசு சார்ந்த பல வரிகள் கட்டப்படாமல் இருக்கும் போது அதன் மீதான வட்டி.

2E.தனது வாடிக்கையாளர் குறிப்பிட்ட தேதிக்கு மேல் பணம் செலுத்துவது செலுத்தப்படாமல் இருக்கும் பொழுது அதன் மீதான வட்டி.

03. உங்கள் தொழிலின் வட்டி நிறுவனத்தின் லாபத்தை  எவ்வாறு பாதிக்கின்றது?

உங்கள் தொழில் வளர்ச்சிக்கான பணத்தை பல வழிகளில் வாங்கும்போது, ​​ அவற்றின் மீதான வட்டி விகிதங்கள்  தொழிலின்  லாபத்தை பல வழிகளில் பாதிக்கின்றன.

தொழில் முனைவோர்கள் தனது தொழிலுக்கு தேவையான கடனை வாங்கும் பொழுது அந்த கடனுக்கான வட்டியை நிறுவனத்திலிருந்து பெரும் லாபத்தின் மூலம் எவ்வாறு சரிக்கட்ட முடியும் என்பதை முன்கூட்டியே ஆராய்கின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த கணக்குகள் அனைத்தும் குழப்பம் அடைகின்றன.

இவ்வாறாக கடன் வாங்கும்  முன்னராக போடப்படும் கணக்குகள் குழப்பம் அடைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றின் அவற்றில் முக்கிய ஒரு காரணம் மட்டுமே இருக்கின்றன அது என்னவென்றால்  உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் கடன் விற்பனை.

தொழிலில் கடன் விற்பனை அதிகரிக்கும் பொழுது இவை நிறுவனத்தின் முதலீட்டு தொகையை அதிகப்படியான அளவில் முடக்குவதாக இருக்கின்றன.

இதன் காரணமாக விற்பனை பொருட்களை வாங்குவதற்கு போதிய பணம் இல்லாமலும் அவற்றின் மூலம் ஈட்டப்படும் லாபம் நிறுவனத்திற்கு கிடைக்காமலும் போகின்றன.

04. உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் வட்டி செலவினங்கள்  தொழிலை நட்டத்திற்கு தள்ள இருக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?

மேற்கூறிய அனைத்து விதமான வட்டி செலவினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நிறுவனத்தின் மாதாந்திர லாபத்தை விட வட்டி  அதிகமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடுகின்றன.  இவை நடத்திவரும் தொழிலை கண்டிப்பாக நட்டத்தில் தள்ள  போகிறது என்பதை உணர்த்தும் ஒன்றாக இருக்கிறது.

05.உங்கள் தொழிலில் தேவையற்ற வட்டி செலவினங்களை எவ்வாறு குறைப்பது?

ஒரு தொழில் தொடங்கும்போது அந்த தொழிலுக்கான சரியான முதலீட்டு தொகையை  தொழிலில் போட்டால் போதுமானது,  மாறாக அதிகப்படியான அளவில் முதலீடு உங்களுக்கும் உங்கள் தொழிலுக்கு முழுமையாக இருக்குமே தவிர அது லாபம் தரக்கூடிய ஒன்றாக கண்டிப்பாக இருக்காது.

அதேபோன்று நிறுவனத்தின் முதலீட்டு தொகை அனைத்தையும் உங்களது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு கடன்  விற்பனை செய்து விட்டு மறு முதலீட்டு பணம் இல்லாமல் கடன் வாங்கி தொழில் நடத்துவதற்காக வங்கியை நாடுவது.

கடனுக்காக உங்கள் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை அளித்த சப்பிள்ளையாருக்கு  குறிப்பிட்ட தேதிக்கு மேலாக பணம்  செலுத்தப்படாமல் இருக்கும் போது அதற்காக கணக்கிடப்படும் பட்டி தொகையானது தேவையற்றதாக இருக்கிறது.

06. உங்கள் தொழிலில் வட்டியை எவ்வாறு மேலாண்மை செய்வது?

ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நிறுவனத்தை நடத்த தேவையான கடனை வெளியில் இருந்து வாங்கும் பொழுது இதனை மொத்தமாக கணக்கிட வேண்டியது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அவ்வாறு வட்டி தொகையை மொத்தமாக கணக்கிடும் பொழுது நிறுவனத்தில் இருந்து செலுத்தப்படும் வட்டி தொகையானது பெறப்படும் வட்டி தொகையை விட ஒரு ரூபாயாவது குறைவாக இருக்க வேண்டும்.

🏅 நீ சாதித்துவிட்டாய்!

ஏனென்றால்

நீ சாதிக்க பிறந்தவன்!🏅

மேற்சொன்ன  பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால்  ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

🙏 நன்றி வணக்கம்.🙏

நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள்,  இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640

Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg

Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share

Instagram  https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm

Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining

Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5

Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

how to choose sundry creditors ?தொழில் பொருட்களின் பலவகைப்பட்ட சப்ளையர்கள் யார்? அந்த சப்ளையர் ஐ எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

Objective and Business Goals என்றால் என்ன?

What is Manufacturing industry ?உற்பத்தி சார்ந்த தொழில்கள் என்றாள் என்ன?