what is Service business? சேவை சார்ந்த தொழில்கள் என்றால் என்ன?
எந்த ஒரு தொழிலையும் ஆர்வமுள்ளதாகவும், ஆழமுள்ளதாகவும்,
அர்த்தமுள்ளதாகவும்,முற்றுரிமையாகவும், காலத்திற்கேற்றார் போல புதுப்பிக்க தெரிந்ததாகவும், இருக்கும் போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று அறிந்து தனக்கென ஒரு தொழிலைத் தொடங்கி அதனை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றிருக்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
நான் உங்கள் ராஜேஷ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் தொழில் மேலாண்மை பயிற்சியாளர்.
🙏 இந்த பதிவு உங்களின் தொழில் வளர்ச்சிக்கான சில முக்கிய பதிவுகளை உள்ளடக்கியதே தவிர உங்களின் பொன்னான நேரத்தை வீண் ஆக்குவதற்காக அல்ல என்பதை புரிந்துகொண்டு இந்த பதிவினை முழுவதும் படிக்குமாறும் வாழ்வில் முன்னேற துடிக்கும் பல நண்பர்களே இந்த குழுவில் இணைக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.🙏
இந்த பதிவில் சேவை சார்ந்த தொழில்கள் என்றால் என்ன? அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது? என்பதை பற்றி விரிவாக பார்க்கவிருக்கிறோம். வாருங்கள் பதிவுகள் போகலாம்.
ஒரு பொருளை வாங்கி விற்பதோ, அல்லது தயாரிப்பது மட்டுமல்லாது தான் பெற்ற கல்வியை அல்லது அனுபவத்தை பயனுள்ள வகையில் மக்களுக்கு அளிப்பதை சேவை சார்ந்த தொழில்கள் தொடர்பான தொழில் முனைவோர் என்று அழைக்கிறோம்.
Service Provider என்று அழைக்கக்கூடிய சேவை சார்ந்த தொழிலை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
இந்த துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரு சேவையை மக்களுக்கு அளிப்பவராக இருக்கின்றனர்.
இவர்கள் ஏதேனும்
ஒரு பொருளை உருவாக்குவதிலும்
ஒரு சேவையை மக்களுக்கு அளிப்பதிலும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றனர்.
பொதுவாக இவர்களை
Professional service provider,
Non- professional service provider,
Other service provider,
என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம.
முதல்ல நாம பார்க்க இருக்கிறது
1. Professional service provider,
படிப்பின் மூலம் தான் அறிந்த கல்வி மற்றும் அனுபவத்தை முழுமையாக மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ஓர் வருமானத்திற்காக அவர்களுக்கு கொடுப்பது சேவை சாந்த தொழில் என்று கூறலாம்.
உதாரணமாக சொல்லப்போனால்
மருத்துவர்கள்,
வழக்கறிஞர்கள்,
தணிக்கையாளர்கள்,
கட்டிட பொறியாளர்கள், வாகனபொறியாளர்கள்
மற்றும் பல...
2.Non- professional service provider,
அனுபவத்தின் மூலம் தான் கற்ற கல்வியை முழுமையாக மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ஓர் வருமானத்திற்காக மற்றவர்களுக்கு கொடுப்பது சேவை சார்ந்த தொழில் என்று கூறலாம்.
உதாரணமாக சொல்லப்போனால் மரவேலை செய்பவர்கள்,
சமையல் வேலை செய்பவர்கள்,
சிகை அலங்காரம் செய்வார்கள்,
வர்ணம் யூசுப் அவர்கள்,
வீடு மற்றும் தோட்டங்களை அழகுபடுத்துவார்கள்,
மற்றும் பல...
3. Other service provider,
ஒரு சிறிய முதலீட்டின் மூலம் பொருள்களை வாங்கி அல்லது நிர்வகித்து மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ஓர் வருமானத்திற்காக அதாவது வாடகைக்கு கொடுப்பதையும் சேவை சார்ந்த தொழில் என்று கூறலாம்.
உதாரணமாக சொல்லப்போனால் பேருந்து மற்றும் மகிழுந்து சேவை,
சரக்கு வாகனங்களின் சேவை, நிலங்களை சீர் செய்யும் இயந்திரங்கள் மற்றும் அவற்றுக்கான சேவை,
சினிமா தியேட்டர்,
பொழுதுபோக்கு மற்றும் பூங்காக்கள் , மற்றும் பல..
🏅 நீ சாதித்துவிட்டாய்!
ஏனென்றால்
நீ சாதிக்க பிறந்தவன்!🏅
மேற்சொன்ன பலவகை தொழிலுக்கான விவரங்கள் அனைத்தையும் ஒரு முன்னோட்டமாக மட்டுமே நான் கூறி உள்ளேன் ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்து பார்த்தீர்களானால் ஒவ்வொரு தொழிலும் அவற்றில் நடைபெறும் செயல்படும் மிகப்பெரிய அளவிலும் பிரம்மிக்க செய்யும் அளவிலும் இருக்கும்.இவ்வாறு உங்களுக்கு உண்டான தொழிலை ஆரம்பிப்பதற்கான சரியான கணக்கீடுகளை மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் மட்டுமே நீங்கள் அறிய முடியும் என்பதில் சந்தேகமில்லை.
🙏 நன்றி வணக்கம்.🙏
நான் இங்கு மேலே கூறியுள்ள அனைத்து பதிவுகளும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவ்வாறு பிடித்திருந்தால் இந்த பதிவிற்கு ஒரு லைக் like 👍போடுங்கள், மற்றும் ஷேர் share 👉செய்யுங்கள், இந்த தகவல் அனைத்தும் உங்கள் வியாபாரம் செய்யும் நண்பர்களுக்கும் வியாபாரம் செய்ய முனைப்புடன் உள்ள நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
S.Rajesh
Enterpreneurship Development and Business Management Trainer
9003314640
Youtube Channel
https://www.youtube.com/channel/UCneJ1YPzYs2a4zuuDLzoNIg
Facebook Group
https://www.facebook.com/groups/657919231463185/?ref=share
Instagram https://www.instagram.com/invites/contact/?i=xlm68masq4mu&utm_content=362mhjm
Telegram Group
https://t.me/AccountsAndTallyTraining
Whatsapp Group
https://chat.whatsapp.com/EvpGAZ869853KPPwUplNl5
Dailyhunt News
https://profile.dailyhunt.in/sekar968629097519406
கருத்துகள்
கருத்துரையிடுக